அடுத்தவர்கள் வயிறு எரிந்தது விட்ட சாபத்தில் இருந்து தப்பிக்க, வழி வழியாக நம் முன்னோர்கள் செய்து வந்த ஒரு சுலபமான பரிகாரம் இதோ.

sabam1
- Advertisement -

வயிறு எரிந்து அடுத்தவர்கள் நமக்கு கொடுக்கக்கூடிய சாபம் மிக மிகப் பொல்லாதது. நாம் அறிந்து தவறு செய்தோமோ, அறியாமல் தவறு செய்தோமோ, ஆனால் அடுத்தவர்கள் வருத்தப்படும் படி நடந்து கொண்டு, அடுத்தவருடைய வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டு நாம் வாங்கக்கூடிய சாபமானது கட்டாயம் நம் பரம்பரையை துரத்தும். கூடுமானவரை அடுத்தவர்களுடைய சாபத்தை வாங்கும்படி நம்முடைய செயல்களும் பேசும் இருக்கக்கூடாது. முதலில் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சரிங்க, நாம் செய்த மட்டும் பாவம் மட்டும்தான் நம் குடும்பத்திற்கு பிரச்சனையை கொடுக்குமா. நம் முன்னோர்கள் செய்த பாவமும் நம்மை பின்தொடர்ந்து வருமே. இப்படியாக எல்லா பாவங்களுக்கும் சேர்த்து பரிகாரத்தை தேடுவதாக இருந்தால் என்ன செய்வது. கூடுமானவரை உங்களால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்துவரவேண்டும். குறிப்பாக ரொம்பவும் கஷ்டப்படுபவர்கள் வீட்டில் ஏதேனும் மரணம் நிகழ்ந்து விட்டால், அந்த மரணத்திற்கு இறுதி சடங்கு செய்வதற்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்வது மிகமிக சிறப்பான ஒரு பிராயச்சித்தமாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இதுதவிர ஊனமுற்றவர்கள் கர்ப்பிணி பெண்கள் இவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வதன் மூலம் நீங்கள் செய்த பாவ கணக்குகளும் உங்கள் முன்னோர்கள் செய்த பாவ கணக்குகளும் குறைக்கப்படும். அடுத்தபடியாக சிறியதொரு பரிகாரமும் நமக்காக முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதை இப்போது பார்த்துவிடுவோம்.

நாட்டு மருந்து கடைகளில் சிவப்பு குன்றின்மணி என்பது கிடைக்கும். அதை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை பூஜை அறையிலேயே அமர்ந்து செய்யலாம். பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்துகொண்டு வாங்கி வந்த குன்றின் மணியிலிருந்து ஒரு கைப்பிடி அளவு உள்ளங்கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய உள்ளங்கையை உங்களுடைய தொப்புள் கொடியில் வைத்துக்கொண்டு, அதாவது தொப்புளின் மேல் படும்படி வைத்து, ‘யார் வயிறு எரிந்து விட்ட சாபம் ஆக இருந்தாலும் அது எங்களுடைய குடும்பத்திற்கு பெரிய கஷ்டத்தை கொடுக்கக்கூடாது என்றும், செய்த பாவத்திற்கான மன்னிப்பை இறைவனிடம் கேட்டுக் கொண்டு, இனி அறியாமல் கூட அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்க மாட்டேன்’ என்ற உறுதிமொழியை மனதார எடுத்துக்கொண்டு ஒரு பத்து நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள்.

உங்களுடைய உள்ளங்கை குன்றின் மணியோடு உங்களுடைய தொப்புள்கொடியிலேயே இருக்கட்டும். 10 நிமிடங்கள் கழித்து கையில் இருக்கும் குன்றிமணியை ஒரு காகிதத்தில் வைத்து மடித்து கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும். மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் இப்படி செய்து வந்தால் அடுத்தவர்களால், உங்கள் குடும்பத்திற்கு கிடைத்த சாபத்திற்கு நிச்சயம் ஏதாவது ஒரு வகையில் விமோசனம் கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -