குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்து எப்போதும் சண்டை சச்சரவாக இருந்தால் வெள்ளிகிழமையில் இதை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள். நிம்மதியான குடும்ப வாழ்க்கை வாழ முன்னோர் சொன்ன எளிய பரிகாரம்.

monnor sabam neenga
- Advertisement -

குடும்பம் என்றால் ஏதாவது சண்டை சச்சரவுகள் மனஸ்தாபங்கள் இருக்கத் தான் செய்யும். இதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தோடு சில நேரம் வந்து மறைந்து விட வேண்டும் . ஒரு சில குடும்பங்களில் காரணமே இல்லாமல் சண்டை வந்து கொண்டே இருக்கும் எதை பேசினாலும் கடைசியில் சண்டையில் தான் முடியும். இதனால் இருவருக்கும் மன வருத்தம் அதிகமாகி பிரியும் சூழ்நிலை கூட வந்து விடும். இப்படியான குடும்ப பிரச்சனைகளை சரி செய்ய நம் முன்னோர்கள் சொல்லித் தந்த ஒரு எளிய பரிகார முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

குடும்பத்தில் சண்டை வராமல் இருக்க பரிகாரம்:
இது போன்று எப்போதும் குடும்பத்தில் சண்டை வந்து கொண்டே இருக்கிறது குடும்பமே சூனியம் வைத்தது போல நிம்மதி இல்லாமல் இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றினால் அதற்கு முன்னோர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்காமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

- Advertisement -

இந்த காரணத்திற்காக தான் நம் முன்னோர் வழிபாட்டையும், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தர்ப்பணத்தையும், செய்ய வேண்டிய கடமைகளையும் தவறாமல் செய்ய வேண்டும். இதை செய்யும் தவறும் பட்சத்தில் இது போன்ற இன்னல்களை நாம் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.

இப்போது இந்த பிரச்சனையை சரி செய்ய முன்னோர்கள் சொன்ன பரிகார முறையை பற்றி பார்க்கலாம். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமையில் தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்வதற்கு முன்பாக ஒரு வெள்ளை நிற தாளில் உங்கள் வீட்டில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் பெயர்கள் அனைத்தையும் எழுதி கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு வெள்ளை துணியில் நான்கு வெற்றிலை, இரண்டு கொட்டைப்பாக்கு, ஒரு கைப்பிடி பச்சரிசி மஞ்சள் கலந்தது, ஒரு கைப்பிடி நெல், ஒரு ரூபாய் நாணயம், இரண்டு விரலி மஞ்சள் இவையெல்லாம் வைத்த பிறகு நீங்கள் எழுதி வைத்து அந்த வெள்ளை தாளையும் சேர்த்து முடிச்சாக கட்டி வைத்து விடுங்கள்.

நீங்கள் எப்போதும் செய்யும் வெள்ளிக்கிழமை பூஜையோடு குலதெய்வத்தையும் மனதார வேண்டிக் கொண்டு, உங்கள் முன்னோர்களையும் மனதில் நினைத்து உங்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று அவர்களிடம் வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த முடிச்சுக்கு கற்பூர தீபாராதனை காட்டி வழிபட்டு உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: நமது தலையெழுத்தையே மாற்றக்கூடிய சக்தி இந்த ஒரு வழிபாட்டிற்கு உண்டு. இரண்டு அகல் தீபம் ஏற்றி வழிபட்டால் போதும் சகல துன்பங்களும் தூர விலகி வாழ்க்கை வசந்தமாகும்.

தினமும் இந்த முடிச்சிக்கு கற்பூர தீபாரதனை அல்லது ஊதுபத்தி காட்டி உங்கள் முன்னோரை நினைத்து வழிபட்டு வந்தால் முன்னோர்களின் சாபம் நீங்கி உங்கள் குடும்பத்திற்கு அவர்களின் ஆசீர்வாதம் கிடைப்பதுடன், குலதெய்வத்தின் அருளும் கிடைத்து சண்டை சச்சரவு இல்லா நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

- Advertisement -