யாரோ விட்ட சாபத்தால் உங்களுடைய குடும்பம் தலை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறதா? எப்பேர்ப்பட்ட சாபத்தையும் போக்கக்கூடிய சக்தி இந்த ஒரு இலைக்கு உண்டு.

நம்முடைய வாயால் மற்றவர்களுக்கு நாம் சாபம் கொடுக்கவும் கூடாது. அடுத்தவர்கள் சாபம் விடும் அளவிற்கு நாம் நடந்து கொள்ளவும் கூடாது. சில சமயம் சூழ்நிலை காரணமாக, நாம் யாரையாவது சபித்து விடுவோம். சில சமயங்களில் நம்முடைய சூழ்நிலை, அடுத்தவர்கள் நம்மை சபிக்கும் அளவிற்கு நடந்து கொள்வோம். இது இயல்பாக நடப்பது தான். ஆனால் சாபத்தால் பல குடும்பங்கள் இன்று பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. தீராத துயரங்களும் கஷ்டங்களும் ஒரு குடும்பத்தில் இருந்து வந்தால், அந்த வீட்டில் உள்ளவர்கள் ‘யார் விட்ட சாபமோ! என் குடும்பம் இத்தனை பாடுபடுகிறது’ என்றுதான் சொல்லுவார்கள்.

எப்பேர்பட்ட கஷ்டம் உங்களுடைய குடும்பத்தில் இருந்தாலும், யார் விட்ட சாபத்தாலோ உங்களது குடும்பத்தில் உள்ளவர்கள் கஷ்டப்பட்டு வந்திருந்தாலும், அந்த கஷ்டத்தைப் போக்க கூடிய சக்தி உடைய ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு இந்த சுலபமான பரிகாரத்தை செய்தாலே போதும். அவர்களது வீட்டில் படிப்படியாக கஷ்டங்கள் குறைய ஆரம்பிக்கும். சில சாபத்தினால், சில குடும்பங்கள் வாரிசு இல்லாமல் கூட தவிர்த்து விருவார்கள். தீராத நோய் மூலம் அவதிப்பட்டு வருவார்கள். சொத்துக்களை இழப்பார்கள். பெரிய பெரிய சாபத்தால், சில குடும்பங்களில் எதிர்பாராத உயிரிழப்பெல்லாம் கூட ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பெரிய பெரிய பாதிப்புகளையும் குறைக்கக்கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு.

இந்த பரிகாரத்திற்க்கு முனை, காம்பு உடையாத மா இலைகள் 8, தேங்காய் துருவல் சிறிதளவு, நாட்டு வெல்லம் சிறிதளவு, தண்ணீரில் ஊறவைத்த பச்சரிசி சிறிதளவு. நம்முடைய வீட்டை சுத்தம் செய்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள்.

- Advertisement -

முதலில் ஒரு மஞ்சள் நிற நூலில் இந்த மாயிலைகளை வரிசையாக கட்டிக்கொள்ள வேண்டும். மாவிலைத் தோரணம் கட்டுவது போல எட்டு இலைகளின் காம்புகளையும், நேராக வைத்து கட்டி விடுங்கள். தரையில் ஒரு புது விரிப்பு விரித்து கொள்ளுங்கள். மஞ்சள் நிற துணியாக இருந்தால் நல்லது. அந்தத் துணியின் மேல் நீங்கள் மஞ்சள் நூலில் கட்டி தயாராக வைத்திருக்கும் மா இலைகளை நேராக வைக்க வேண்டும். மாயிலைகளுக்கு நடுவே மஞ்சள் குங்குமம் இடவேண்டும்.

thengai

தாம்பாளத் தட்டில் தயாராக இருக்கும் தேங்காய் துருவல், வெல்லம், ஊறவைத்த பச்சரிசி இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு அதிலிருந்து ஒரு ஸ்பூன் அளவு உங்கள் கைகளாலேயே எடுத்து மலைகளின் நடுவே வைத்து விடவேண்டும். மா இலைகளை காம்புபக்கம் இறைவனை நோக்கியவாறு நோக்கியவாறு இருக்க வேண்டும்.

praying-god1

மா இலைகளில் தேங்காய்த்துருவல் படையல் இட்டு, அதன் பின்பு, இரு கைகளையும் ஏந்தி, குலதெய்வத்திடம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய சாபம் முழுமையாக நீக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, சிறிது நேரம் கழித்து அந்தமா இலைகளை எடுத்து பசுமாட்டிற்கு சாப்பிட வைத்துவிடலாம். அவ்வளவுதான். இந்த பரிகாரத்தை வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்பது வாரங்கள் செய்தால் சிறப்பு.

Amman deepam

குறிப்பாக அமாவாசைக்கு பிறகு வரும் அஷ்டமி திதியிலும், பௌர்ணமிக்குப் பிறகு வரும் அஷ்டமி திதியிலும் 8 அஷ்டமி திதி தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயம் தீராத சாபத்திற்கு விமோசனம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.  தொடர்ந்து 8 அஷ்டமி திதி, அவளவுதான். முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கை உள்ளவர்களுக்கு நிச்சயம் பலன் உண்டு என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.