இது அவருடைய அணி . அவரை உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேற்ற முடியாது – ரவி சாஸ்திரி

ravi

இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 30ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய அணி கிட்டத்தட்ட தயாராகிவிட்டது என்றே கூறவேண்டும். அணி கோலி தலைமையிலான இந்திய அணி இப்போது சுப்ரீம் பார்மில் உள்ளது.

indian-team

இந்நிலையில், இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பி நியூசிலாந்து சென்றது. இப்போது இந்திய பயிற்சியாளர் நியூசிலாந்து தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடர் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

ரவி சாஸ்திரி கூறியதாவது : இப்போது உள்ள இந்திய அணி எந்த நாட்டிலும் எந்த அணியையும் தோற்கடிக்கும் வலிமை உள்ளது. எனவே, இந்த நியூசிலாந்து தொடரை கைப்பற்றும் வாய்ப்பு நிச்சயம் இந்திய அணிக்கு உள்ளது. தோனி நிச்சயம் இந்த நியூசிலாந்து தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடர்களிலும் பங்கேற்பார். அவருடைய ஆட்டம் குறித்த விமர்சனங்களை நாங்கள் பார்க்கப்போவது கிடையாது.

dhoni

ஏனெனில், அவர் 10 ஆண்டுகளாக கடினப்பட்டு உருவாக்கியது தான் இந்த இந்திய அணி. இந்த வீரர்களுக்கும் அவருக்கும் இடையேயான உறவு அற்புதமானது வயது ஒரு காரணி அல்ல, அவரின் அனுபவம் நிச்சயம் அணிக்கு உதவும் அவரின் ஆட்டம் இந்த வயதிலும் சிறப்பாகவே உள்ளது. ஆகையால், அவரின் ஓய்வு அறிவிப்பு அவரின் கையிலே உள்ளது. என்று ரவி சாஸ்திரி கூறினார்.

இதையும் படிக்கலாமே :

இந்த இரு சீனியர் வீரர்கள் உலகக்கோப்பை தொடர் மட்டுமல்ல. கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வருகிறதா ?

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்