மீந்து போன சாதம் இருந்தா மொறுமொறுன்னு இப்படி இதை செஞ்சு பாருங்க, இது கூட இவ்ளோ நாளா தெரிஞ்சுக்காம இருந்துட்டோமேன்னு ஃபீல் பண்ணுவீங்க!

rice-satham-vadai
- Advertisement -

மீந்து போன சாதம் ஒரு கப் இருந்தா போதும் மொறுமொறுன்னு இப்படி ஒரு ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுத்தா யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டாங்க. பொதுவாக இரவில் மீரும் சாதத்தை வைத்து காலையில் இது போல செய்யும் பொழுது இட்லி, தோசையுடன் சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கும். மீந்து போன சாதத்தை வைத்து சுவையான மொறுமொறு வடை எப்படி தயாரிக்கலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சாத வடை செய்ய தேவையான பொருட்கள்:
வடித்த வெள்ளை சாதம் – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – இரண்டு, சீரகம் – அரை ஸ்பூன், நறுக்கிய கருவேப்பிலை மற்றும் மல்லி தழை – சிறிதளவு, துருவிய இஞ்சி – ஒரு ஸ்பூன், அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

சாத வடை செய்முறை விளக்கம்:
மீந்து போன சாதம் ஒரு கப் இருந்தால் அதை ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது மிக்ஸியை இயக்கி லேசாக ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். சாதம் முழுமையாக அரைப்படவில்லை என்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் தண்ணீர் சேர்த்து விடக்கூடாது, அப்புறம் வடை நிறைய எண்ணெயை உறிந்து கொள்ளும். கெட்டியான பதத்திற்கு சாதத்தை அரைத்து எடுத்த பின்பு, அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் காரத்திற்கு ஏற்ப ரெண்டு பச்சை மிளகாயை காம்பு நீக்கி சுத்தம் செய்து பொடிப்பொடியாக சேருங்கள். இதனுடன் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சிறிதளவு மற்றும் நன்கு சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கிய மல்லித்தழை அரை கைப்பிடி அளவிற்கு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு மற்றும் அரை ஸ்பூன் சீரகம் சேருங்கள். சுவைக்கு தோல் நீக்கி துருவிய இஞ்சி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் மற்றும் இதர பொருட்கள் சேர்த்தவுடன் சற்று மாவு தளர்ந்தது போல் ஆகி இருக்கும். இதை ஈடு கட்டுவதற்கு உங்கள் தேவைக்கு ஏற்ப அரிசி மாவை சேருங்கள். அப்போது தான் வடை மொறுமொறுவென்று நன்கு பொங்கி வரும். அரிசி மாவை சேர்த்த பின்பு நன்கு கைகளால் கலந்து விடுங்கள். பின்னர் கையை கழுவிக் கொள்ளுங்கள். கையை துடைத்து விட்டு கொஞ்சம் எண்ணெயை தடவிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு ஒரு உருண்டைகளாக சிறிதளவு மாவை எடுத்து நன்கு உருட்டி பின்னர் வடை போல தட்டையாக தட்டிக் கொள்ளுங்கள். நடுவில் ஒரு ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் இருக்கும் கொதிக்கும் எண்ணெயில் போட்டு அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருபுறம் நன்கு வந்ததும் மறுபுறமும் திருப்பிப் போட்டு வேக விடுங்கள். இருபுறமும் பொன்னிறமாக மொறு மொறுன்னு வடை போல பொங்கி வந்ததும் எண்ணெயை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை காலையில் இட்லி, தோசை உடன் சேர்த்து சாப்பிடும் போது அவ்வளவு அருமையாக இருக்கும் அல்லது மாலை நேரத்தில் டீயுடன் தொட்டுக் கொள்ளவும் ருசியாக இருக்கும். நீங்களும் இனி மிச்சமான சாதத்தை வீணாக்காமல் இப்படி செய்து அசத்துங்கள்.

- Advertisement -