முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். மேலும் அவர்தான் நவகிரகங்களுக்கும் தலைவராக திகழ்கிறார். நவக்கிரகங்களை தன்னகத்தே கொண்டு அருள் புரியக்கூடிய ஒரு தெய்வமாகவும் விநாயகர் பெருமான் திகழ்கிறார். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதால் சகலவிதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் காரிய தடைகள் முற்றிலும் நீங்கி காரிய வெற்றியை தரக்கூடிய ஒரு அற்புதமான தெய்வம் ஆகவும் விநாயகப் பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது ஒரு சில முக்கியமான பொருட்களை நாம் பயன்படுத்துவோம்.
அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்றாக திகழ்வதுதான் அருகம்புல். அருகம்புலில் பலவிதமான மருத்துவ குணங்கள் இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தெய்வீக பொருளாகவும் இது திகழ்கிறது. புராணங்களில் கூட விநாயகருக்கு அர்ச்சனை செய்த ஒரு அருகம்புல்லுக்கு இணையாக தேவலோகத்தில் இருக்கக்கூடிய அனைத்து செல்வங்களும் நிகராகாது என்ற கதை கூட உள்ளது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அருகம்புல்லை எந்த முறையில் பயன்படுத்தி மாலை கட்டினால் சகல செல்வங்களும் உண்டாகும், நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சகல செல்வங்களைத் தரும் வழிபாடு
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு அனைத்து விதமான நாட்களும் சிறப்பு மிகுந்த நாட்கள் தான். யாருக்கு எந்த நவகிரகத்தால் பிரச்சனைகள் இருக்கிறதோ எந்த வேண்டுதல் தொடர்பாக விநாயகப் பெருமானை வழிபாடு செய்கிறீர்களோ அதற்கேற்றார் போல் கிழமையை தேர்வு செய்து கொள்ளுங்கள். அல்லது விநாயகப் பெருமானுக்கு உகந்த சதுர்த்தி திதியில் கூட இந்த வழிபாட்டை செய்யலாம். அந்த நாளில் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்ற விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு விநாயகரை வழிபாடு செய்யும்பொழுது விநாயகருக்கு உரித்தான அருகம்புல்லை பயன்படுத்தி அருகம்புல் மாலை தயார் செய்து எடுத்துச் செல்ல வேண்டும்.
அருகம்புல் மாலை என்றதும் கடையில் காசு கொடுத்து வாங்கி போட்டு விடலாம் என்று நினைக்கக் கூடாது. இந்த அருகம்புல் மாலையை நம்முடைய கைப்பட நாம் கட்டி விநாயகருக்கு சாற்றும் பொழுது தான் நம்முடைய வேண்டுதல் முழுமையாக நிறைவேறும். இதற்கு நுனி அருகம்புல்லாக 21 எண்ணிக்கையில் அருகம்புல்லை எடுத்து ஒரு கட்டாக கட்டிக் கொள்ளுங்கள். இப்படி மொத்தம் 54 அல்லது 108 கட்டுகளை தயார் செய்து வைத்து அந்த கட்டுகளை மாலையாக தொடுத்து விநாயகருக்கு நாம் சாற்ற வேண்டும். இந்த அருகம்புல்லை மாலையாக நாம் தொடுக்கும் பொழுது முழுக்க முழுக்க நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றும் அதேசமயம் விநாயகப் பெருமானின் மந்திரங்களையும் முழு மனதோடு நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும்.
இப்படி செய்த இந்த அருகம்புல் மாலையை விநாயகருக்கு நாம் சாட்சி அர்ச்சனை செய்து நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று சங்கல்பம் செய்தோம் என்றால் விநாயகர் மனமகிழ்ந்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவதோடு சகல செல்வத்தையும் வாரி வழங்குவார்.
இதையும் படிக்கலாமே: சிக்கலை தீர்க்கும் முருக மந்திரம்
விநாயகப் பெருமானுக்கே உரித்தான அருகம்புல் மாலையை இந்த முறையில் தயார் செய்து யார் ஒருவர் விநாயகருக்கு சாற்றி வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.