ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு முன்பு, பெரிய பெரிய யாகங்கள் ஹோமங்கள் எல்லாம், ராஜாக்களின் வீட்டில் மட்டும் தான் நடைபெறும். பிறகு பெரிய பெரிய பண்ணையார் வீடு, ஜமீன்தார் வீடு இதுபோல வசதி வாய்ப்பு படைத்தவர்களுக்கு மட்டும்தான் இந்த பெரிய பெரிய வழிபாட்டு முறைகள் செய்யப்படும். சாதாரணமாக இருப்பவர்கள் வீட்டில் எல்லாம் யாகங்களுக்கு இணையாக போடப்படுவது வெறும் சாம்பிராணி தூபம் மட்டும்தான்.
வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமைகளில் அடுப்புக்கறி எடுத்து அதில் சாம்பிராணி தூபம் போட்டு அந்த புகையை வீடு முழுவதும் காண்பித்து விட்டாலே போதும். வீட்டை பிடித்த தரித்திரம் விலகும். வீட்டில் நிம்மதி பிறக்கும். ஆனால் இன்று இந்த பழக்க வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. கம்ப்யூட்டர் சாம்பிராணி வத்தி தசாங்கம் பொடி என்று விதவிதமாக வாசனை தரக்கூடிய புகைகள் தரும் பொருட்கள் விற்பனையில் இருந்தாலும் சரி, அடுப்புக்கரியில் போடக்கூடிய சாம்பிராணிக்கு தான் பவர் அதிகம் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம்.
அந்த வகையில் இந்த சாம்பிராணி தூபத்தோடு கூடுதல் சிறப்பை கொடுக்கும் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து பாருங்கள். வீட்டில் அளவில்லா மகிழ்ச்சி கிடைக்கும். பண கஷ்டம் தீரும். எதிர்மறை ஆற்றல் விலகும். உங்களுக்கு தேவையான ஒட்டுமொத்த நல்லதையும் கொடுக்கக்கூடிய வேலையை இந்த சாம்பிராணி புகை செய்து விடும்.
குடும்பத்தில் நிம்மதி கிடைக்க சாம்பிராணி தூபம்
முதலில் ஒரு நாட்டு மருந்து கடைக்கு சென்று நல்ல சாம்பிராணி தூப பொடி வாங்கிக் கொள்ளுங்கள். அது கொஞ்சம் கல் போல, கொஞ்சம் தூளாகவும் இருக்கும். அதை நன்றாக தூள் செய்து ஒரு பாட்டிலில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதோடு நீங்கள் வாங்க வேண்டியது இந்த இரண்டு பொருட்கள்தான். கரிசலாங்கண்ணி போடி, நன்னாரி வேர்.
கரிசலாங்கண்ணி இலை பொடியாகவே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கிக் கொள்ளுங்கள். நன்னாரி வேராக வாங்கி அதை நன்றாக காய வைத்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி இந்த தூபத்திற்கு பயன்படுத்தலாம். நன்னாரி பொடி கிடைத்தாலும் சரி அதை வாங்கி இந்த தூபம் போட பயன்படுத்தலாம்.
அடுப்புக்கரி. இது இப்போது எல்லா இடங்களிலும் மிக மிக சுலபமாக கிடைக்கிறது. அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தூப காலில் அடுப்பு கறி வைத்து ஒரு கற்பூரம் கொளுத்தி அந்த கரியில் நன்றாக தணல் பிடிக்கும் வரை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த நெருப்பில் கொஞ்சம் சாம்பிராணி பொடி, கொஞ்சம் நன்னாரி பொடி, கொஞ்சம் கரிசலாங்கண்ணி பொடி, போட்டு இந்த புகையை வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க விநாயகர் மந்திரம்
வீட்டின் உள்பக்கத்திலிருந்து வெளிப்பக்கம் வரை அந்த புகையை காண்பித்து விட்டு, அந்த தூபக் காலை நிலை வாசலுக்கு வெளியில் வைத்து விடுங்கள். குலதெய்வத்தின் பெயரை மனதார சொல்லிக்கொண்டு இந்த தூபத்தை வாரத்தில் இரண்டு நாள் உங்கள் வீட்டில் போட்டாலே போதும். வீட்டில் இருக்கும் துர் சக்திகள் வெளியேற துவங்கிவிடும். மிக மிக எளிமையான பரிகாரம். செவ்வாய் வெள்ளி அன்று செய்ய முடியவில்லையா. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். அந்த ஒரு நாளாவது இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.