சகல தோஷங்களும் விலக சனிக்கிழமை சாம்பிராணி தூபம் போடும் முறை

sanibagavan
- Advertisement -

பொதுவாகவே வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, சாம்பிராணி தூபம் போடுவது தான் சிறப்பு என்று சொல்லுவார்கள். இது நான் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். ஆனால் இந்த சாம்பிராணி தூபம் போடுவதில் நமக்கெல்லாம் தெரியாத ஒரு புது விஷயத்தை இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சனிதோஷமும், உங்கள் ஜாதக கட்டத்தில் இருக்கும் கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத தோஷங்களும் விலக, சாம்பிராணி தூபம் போடக்கூடிய ஒரு புதிய முறை இது. இந்த சாம்பிராணி தூபப் புகையை வீட்டில் போட்டால், சகல விதமான தோஷமும், சகல விதமான கண் திருஷ்டியும், சகல விதமான கஷ்டமும் வீட்டை விட்டு விலகும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை நம் வீட்டில் சாம்பிராணி தூபம் எப்படி போடுவது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா .

- Advertisement -

சனிக்கிழமை சாம்பிராணி தூபம் போடும் முறை

சூரியனின் கதிர்வீச்சுகள் எப்படி நம் பூமியின் மீது விழுகிறதோ அதேபோலத்தான் சனி கிரகத்தின் கதிர்வீச்சுகளும் பூமியில் விழும். அந்த சனிபகவானின் கதிர்வீச்சும் நமக்கு நன்மையை செய்யக்கூடியது தான். குறிப்பாக நம் ஆயுள் பலத்தை கூட்டக்கூடிய சக்தி இந்த சனிபகவானுக்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆகவே அடுத்தவர்களை சனி பகவான் பெயரைச் சொல்லித் திட்டுவது, சனிபகவானை கெட்டவர் என்று சொல்லும் பழக்கத்தை எல்லாம் விட்டு விடுங்கள். சரி சனிக்கிழமை வீட்டில் சாம்பிராணி தூபம் போட என்னென்ன பொருட்கள் தேவை என்பதை முதலில் பார்த்து விடுவோம்.

- Advertisement -

பால் சாம்பிராணி பொடி 100 கிராம், ஓமம் 25 கிராம், வெள்ளை மிளகு 10 கிராம், வெண்கடுகு 10 கிராம். இந்த பொருட்கள் எல்லாமே உங்களுக்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். எல்லா பொருட்களையும் வாங்கி வந்து ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை கொண்டு தான் இப்போது சாம்பிராணி தூபம் போட வேண்டும்.

இரும்பு தூப காலில் தான் சாம்பிராணி போட வேண்டும். இரும்பு சனிபகவானுக்கு உரியது. அடுப்புக்கரியில் நெருப்பு மூட்டி அல்லது கொட்டாங்குச்சி நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் நீங்கள் சாம்பிராணி தூபம் போடுங்கள். சனிக்கிழமை சாயங்காலம் 6:00 மணியிலிருந்து 6:45 மணிக்குள் சரியாக அந்த மாலை நேரத்தில் இந்த சாம்பிராணி புகையை வீட்டில் போட வேண்டும்.

- Advertisement -

இந்த சாம்பிராணி புகையை வீட்டிற்கு உள் பக்கத்திலிருந்து, அதாவது பின் வாசல் படி இருந்தால் அந்த இடத்தில் நெருப்பை வைத்து சாம்பிராணி புகையை போடத் தொடங்கி, வீட்டிற்கு உள் பக்கத்தில் இருந்து வெளி பக்கம் வரை காண்பித்துக் கொண்டே வரவேண்டும். இடையில் பூஜை அறையில் இருக்கும் பட்சத்தில் இடையில் அந்த பூஜை அறையிலும் இந்த சாம்பிராணி தூபத்தை காண்பிக்கலாம்.

உங்கள் வீட்டு பின்பக்கத்தில் இருந்து தான் இந்த சாம்பிராணியை புகையை போட்டுக் கொண்டே அப்படியே வெளியில் வரை புகையை காட்ட வேண்டும். நிலைவாசல் படிக்கு வெளியில் இறுதியாக புகையை காட்டிவிட்டு சிறிது நேரம் அந்த இடத்திலேயே இந்த தூபக்காலை வைத்து விடுங்கள்.

இந்த முறைப்படி சனிக்கிழமை தோறும் வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டால் வீட்டில் கண் திருஷ்டி தங்காது சகல விதமான தோஷங்களும் விலகும். அது மட்டும் இல்லாமல் சில வீடுகளில் அமானுஷ்யமான சக்தி இருப்பதாக உணர்வார்கள். அப்படிப்பட்ட சக்திகளை வெளியேற்றவும் இந்த புகை உதவியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி ஒற்றுமைக்கு பச்சை கற்பூரம்

இரவில் கெட்ட கெட்ட கனவு வருது, நிம்மதியான தூக்கம் இல்லை, யாரோ வந்து நம்மை பயமுறுத்துகிறார்கள், நம்மை அழுத்துகிறார்கள், இப்படி ஏதாவது உங்களை அறியாமல் சில பயம் இருந்தால் அதை நீக்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -