சாய் பாபா ஆரத்தி தரிசனம் – அறிய வீடியோ

Sai baba aarti tamil

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
மனிதனாய் பிறந்து புனிதனாய் வாழ்ந்து இன்று உலகத்தை காத்து ரட்சிக்கும் தெய்வமாக அருள்புரிகிறார் சாய் பாபா. இவரை கண்ட அடுத்த நொடியே இவர் மேல் ஒரு பக்தி ஏற்படும். மனதிற்குள் ஒரு பரவச நிலை உண்டாகும். அந்த அளவிற்கு மக்களை பக்தி பரவசத்தில் மூழ்க செய்யும் ஒரு அற்புத தோற்றத்தை கொண்டவர் சாய் பாபா. இவருக்கு நடக்கும் ஆரத்தி குறித்த வீடியோ காட்சி இதோ.

சென்னை மைலாப்பூரில் உள்ள அற்புதமான சாய் பாபா கோவிலில் சாய் பாபாவிற்கு நடந்த சாய் பாபா ஆர்த்தி வீடியோ மேலே இணைக்கப்பட்டுள்ளது. எத்தனை அழகான உருவம். எத்தனை அழகான சிரிப்பு. பரவசமூட்டும் கண்கள். மலரினும் மென்மையான பாதம். இவரை சரடைந்தால் நீங்கி விடும் நம் பாவம்.

இதையும் பார்க்கலாமே:
யுகபுருஷனாம் சாயி – சாய் பாபா பாடல் மற்றும் பாடல் வரிகள்

சாய் பாபா ஆரத்தி பாடல் ஒலிக்க அவருக்கு நடக்கும் ஆரத்தியை காண்பதே நமக்கு ஒரு வரம் தான். தமிழகத்தில் உள்ள பல சாய் பாபா கோவில்கள் 75 ஆண்டுகள் கடந்து சாய் பாபாவின் அருளை பரவ செய்து வருகின்றன. தினம் தோறும் புதிய கோவில்கள் பல தோன்றுகின்றன. இதில் இருந்து நாம் சாய்நாதரின் அருளை புரிந்துகொள்ளலாம். வியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்கு நடக்கும் அபிஷேகம் ஆரத்தி போன்றவற்றை அவரின் ஆலயத்திற்கு சென்று காண்பதென்பது சிறப்பு. சில காரணங்களால் சிலரால் கோயிலிற்கு செல்ல முடியவில்லை என்றால் மேலே உள்ள விடியோவை பார்த்து மனம் மகிழலாம்.

English Overview:
Here we have Shirdi Sai baba aarti video in Tamil. Sai baba aarti is very famous especially during Thursday. This particular Sai baba aarti video was taken from chennai Maylapore Sai baba temple.