சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் பாட்டி வைத்தியம்

sakkarai-noi-marundhu

நமது உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஏற்படும் விளைவே சர்க்கரை நோய் ஆகும். டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள், உணவு பழக்கத்தின் மூலமாகவே எளிதில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும். சர்க்கரை நோயில் அறிகுறிகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் சித்த மருத்துவ குறிப்புக்கள் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

Diabetes(sakakrai noi)

சர்க்கரை நோயின் அறிகுறிகள்:
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் அது சர்க்கரை நோய்க்கான ஒரு வகை அறிகுறியாக கூட இருக்கலாம். அதே போல அடிக்கடி தாகம் எடுத்தாலும் அதுவும் சர்க்கரை நோயின் அறுகுறியாகவே பார்க்கப்படுகிறது. கண் பார்வை மங்களாவது, உடல் எடை குறைவது, அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுவது, உடலில் ஏற்படும் காயங்கள் குணமாக அதிக நாட்கள் எடுத்துக்கொள்வது போன்ற பல அறிகுறிகளை வைத்து சர்க்கரை நோய் இருப்பதை உணரலாம். ஒவ்வொருவருக்கும் இதில் சில அறிகுறிகளோ, பல அறிகுறிகளோ அல்லது வேறு சில அறிகுறிகளோ கூட இருக்கலாம். ஆகையால் சர்க்கரை நோய் இருப்பது போல உணர்ந்தால் உடனே பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

சர்க்கரை நோய் நீங்க சித்த மருத்துவம் கூறும் சில அறிய குறிப்புகள் இதோ

குறிப்பு 1 :
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகளில் பாகற்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறை அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

குறிப்பு 2 :
பழங்கள் மூலமும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் – எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு. இந்த பழங்களில் சிட்ரஸ் அமிலம் இருக்கிறது. அதோடு இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனை உண்பதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். அதோடு உடல் அசதியையும் இந்த பழங்கள் போக்கும்.

- Advertisement -

orange and lemon

குறிப்பு 3 :
சக்கரை நோயை கட்டுப்படுத்தும் சக்தி வெந்தயத்திடம் உள்ளது. ஆகையால் தினமும் வெந்தயத்தை பொடி செய்து அதை தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். பொடி செய்ய முடியாதவர்கள், ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு ஊறவைத்து காலையில் அந்த நீரையும் வெந்தயத்தையும் உண்ணலாம்.

குறிப்பு 4 :
நாவல் பழத்தின் கொட்டையை உண்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். நாவல் பழ கொட்டையை பொடியாக்கி வெந்நீரில் கலந்து தினமும் குடித்து வர சக்கரை நோய் கட்டுக்குள் வரும்.

குறிப்பு 5 :
வெந்தயம் 50 கிராம், சீரகம், ஓமம், கருஞ்சீரகம் ஆகியவை தலா 25 கிராம் எடுத்துக்கொண்டு அனைத்தையும் கலந்து நன்றாக வரத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் அந்த பொடியை ஒரு சிறிய ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

vendhaya podi

குறிப்பு 6:
தினமும் 6 பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சக்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். அதோடு நார் சாது அதிகம் நிறைத்த காய்கறிகளை உண்பது நல்லது. உணவில் மஞ்சளை சேர்த்துக்கொள்வதன் மூலம் சக்கரை நோய் கட்டுக்குள் வரும்.

மேலே உள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கட்டுக்குள் கொண்டு வரலாம். அதோடு நமது உணவு பழக்கத்திலும் சில மாறுதல்களை மேற்கொள்வது அவசியமாகிறது. ஒரு நாளைக்கு மூன்று வேலை சாப்பிடுவதற்கு பதிலாக அதை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக ஆறு வேலை சாப்பிடலாம். சாப்பாட்டில் அதிகம் காய்கறிககளை சேர்த்துக்கொள்ளலாம். அதோடு முக்கியமாக கடைகளில் விற்கும் கோதுமை மாவை வாங்கி சப்பாத்தி செய்வதை விடுத்து, நாமே கோதுமையை அரைத்து சப்பாத்தி செய்ய வேண்டும். கடைகளில் விற்கும் கோதுமை மாவில் சர்க்கரை நோயை அதிகரிக்கும் கெமிக்கல் கலக்கப்படுகிறது என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

siddha maruthuvam

சக்கரை நோய் அளவு :

சர்க்கரை நோய்க்கான பரிசோதனையை முதல் முறையாக செய்கையில்,

வெறும் வயிற்றில் நமது உடலில் உள்ள ரத்த சக்கரை அளவு சராசரியாக 80 முதல் 100 மி.கி./டெ.லி. வரை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நமக்கு சக்கரை நோய் இல்லை என்று அறிந்துகொள்ளலாம்.

வெறும் வயிற்றில் ரத்த சக்கரை அளவு 101 முதல் 125 மி.கி./டெ.லி வரை இருந்தால் நாம் சுதாரித்துக்கொள்ளவேண்டும். ஏன் என்றால் இந்த அளவு என்பது சக்கரை நோய் நமக்கு வருவதற்கான அறிகுறி ஆகும்.

அதுவே சக்கரை அளவு 125 மி.கி./டெ.லி க்கு மேல் இருந்தால் நமது உடலில் சக்கரை நோய் உள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.

Blood Sugar Test

உணவு உண்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ரத்த சக்கரை அளவை அபரிசோதிக்காயில் சக்கரை அளவு 111 முதல் 140 மி.கி./டெ.லி வரை இருந்தால் உடலில் சக்கரை அளவு சரியாக இருக்கிறது எனபதை புரிந்து கொள்ளலாம்.

அதுவே சக்கரை அளவு 141 முதல் 199 மி.கி./டெ.லி வரை இருந்தால் நாம் சுதாரித்துக்கொள்ளவேண்டும். ஏன் என்றால் இந்த அளவு என்பது சக்கரை நோய் நமக்கு வருவதற்கான அறிகுறி ஆகும்.

சக்கரை அளவு 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால் நாம் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம் ஆகிறது.

இதையும் படிக்கலாமே:
ஹீமோகுளோபின் அதிகரிக்க கை வைத்தியம்

English overview:

This article is all about how to control blood sugar level with the help of natural food. In tamil, increase in blood sugar is called as sakkarai noi. In this article we have explained about the symptoms of increase in blood sugar level(sakkarai noi arikurikal) and different methods to control it via food(sakkarai noi maruthuvam in tamil) and what are all the food items that need to be taken(sakkarai noi unavugal).