வெறும் மூணே விசில் தான் பருப்பு, பால், எதுவும் சேர்க்காமல் குக்கரில் சர்க்கரை பொங்கல் சட்டுனு ரெடி பண்ணிடலாம். அட இப்படியும் கூட ஈஸியா பொங்கல் வைக்கலாமா!

- Advertisement -

பொங்கலின் சிறப்பே இந்த சர்க்கரை பொங்கல் தான். சர்க்கரை பொங்கலை பொறுத்த வரையில் சூரிய பகவானுக்கு சூரிய ஒளி படும் இடத்தில் பாரம்பரிய முறையில் அடுப்பு மூட்டி பானை வைத்து செய்வது தான் நம் பாரம்பரிய வழக்கம். ஆனால் இன்று நகரத்து சூழ்நிலையில் எல்லாராலும் இதை செய்ய முடியாது. அப்படியானவர்களுக்கு இந்த சர்க்கரை பொங்கல் ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும் அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

இந்த சர்க்கரை பொங்கலுக்கு ஒரு கப் பொன்னி பச்சரிசி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அரிசியில் செய்யும் போது சர்க்கரை பொங்கல் மிகவும் ருசியாக இருக்கும். ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வெல்லம் பொடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து ஏலக்காவையும் தட்டி வைத்துக் கொள்ளுங்கள். பத்து முந்திரி அல்லது பாதாம் பருப்பு, ஆறு டேபிள் ஸ்பூன் நெய் இவை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பொங்கல் செய்வதற்கு பத்து நிமிடம் முன்பு அரிசி நன்றாக சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள் அரிசி ஊறி இருந்தால் பொங்கல் குழைய வெந்து வரும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அரிசிக்கு 3 1/2 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்த பிறகு குக்கரை மூடி மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

விசில் இறங்கிய பிறகு மூடியை திறந்து பொங்கலை கரண்டி வைத்து மசித்து விடுங்கள். வெல்லம் போடும் முன்பு பொங்கலை இப்படி குழைத்து கொள்ள வேண்டும், வெல்லம் சேர்த்த பிறகு சாதம் முறைப்பாக மாறி விடும். பொங்கலை நன்றாக குழைத்து விட்ட பிறகு பொடித்து வைத்த வெல்லத்தையும், ஏலக்காயும் இத்துடன் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

வெல்லம் இளகி வந்த பிறகு மறுபடியும் அடுப்பை பற்ற வைத்து லோ பிளேமில் வைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் 5 டேபிள் ஸ்பூன் நெய்யும் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு சின்ன தாளிப்பு கரண்டி வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி போட்டு வறுத்து அதை பொங்கலில் சேர்த்துக் அடுப்பை மிதமான தீயில் ரெண்டு நிமிடம் பொங்கலை வைத்து விடுங்கள். அப்போது தான் நெய், வெள்ளம், அனைத்தும் பொங்கலுடன் குழைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பொங்கல் பண்டிகையின் சிறப்பான இந்த பாரம்பரிய சர்க்கரை பொங்கலை இப்படி செய்தால், உங்க வீட்டு பொங்கலின் மணம் வீதி வரை வீசும். புதுசா சமைகிறவங்களும் ஈஸியா செய்ய நிறைய டிப்ஸ்சும் கூட இருக்கு

இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து விட்டுங்கள் சர்க்கரைப் பொங்கலை தயார். இந்தப் பொங்களை வீட்டில் விஷேச நேரங்களில் கூட சட்டென்று செய்து விடலாம். பாரம்பரிய பொங்கல் வைத்து வணங்க முடியாதவர்கள், இந்த குக்கர் பொங்கலை செய்து சிறப்பாக கொண்டாடுங்கள்.

- Advertisement -