இந்த மந்திரத்தை 1 முறை மட்டும் சொன்னால் அடிக்கடி ஆபத்து அல்லது விபத்து போன்றவை நடைபெறுபவர்களுக்கு காக்கும் அரணாக கூடவே இருக்கும் தெரியுமா? பகை ஒழிய சிவ மந்திரம்!

sivan mantra
- Advertisement -

சில சமயங்களில் நமக்கு அடிக்கடி ஆபத்துக்கள் நிகழ்வதாக உணரக் கூடிய சூழ்நிலை உண்டாகும். நம்மை அறியாமலேயே உள்ளுக்குள் ஏதோ ஒரு விஷயத்தில் நமக்கு ஆபத்துகள் வரப் போகிறது என்று உள்ளுணர்வு கூறும். அல்லது அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது, பிரச்சினைகள் உண்டாவது, மனநிம்மதி இல்லாமல் இருப்பது போன்றவையும் நிகழும். இப்படி ஏதோ ஒரு பயம் உங்களை ஆட்கொள்ளும் பொழுது இந்த மந்திரத்தை சொன்னால் இறைவனே உங்களுடன் இருப்பதாக தைரியம் பிறக்கும். அத்தகைய அற்புதமான சக்தி வாய்ந்த மந்திரம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

மகா மிருத்தியுஞ்சய மந்திரம்:
ஆஉம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்,
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத்!!

- Advertisement -

மும்மூர்த்திகளில் ஒன்றாக விளங்குபவர் சிவபெருமான். இவரைப் போற்றி வணங்குவதாக கொடுக்கப்பட்டுள்ள இந்த சக்தி வாய்ந்த மகா மிருத்தியுஞ்சய மந்திரம் உச்சரிப்பவர்களுக்கு ஆபத்துக்கள் நெருங்குவது இல்லை. பகைவர்களால் ஆபத்து அல்லது உறவினர்கள், உற்றார், நண்பர்கள் என்று உங்களை சுற்றி இருப்பவர்கள் மூலம் ஆபத்துக்கள் அடிக்கடி கண்களுக்குப் புலப்பட்டோ அல்லது புலப்படமலோ ஏற்படும் பொழுது இந்த மந்திரத்தை தினமும் உச்சரிக்கலாம்.

உங்களுக்கு தெரியாமலேயே உங்களை சுற்றி பல பகைவர்கள் இருப்பார்கள். உங்களுடைய வளர்ச்சியில் பொறாமை படுபவர்கள் இருப்பார்கள். இத்தகையவர்கள் உங்களை அழிக்க அல்லது உங்களுடைய வளர்ச்சியை தடுக்க முயற்சிகள் செய்வதை தடுக்க கூடிய அற்புதமான மந்திரம் தான் இது! இதை தினமும் காலையில் எழுந்ததும் உச்சரிப்பவர்களுக்கு எத்தகைய தடைகளும் வந்த வழியே திரும்பி விடும்.

- Advertisement -

இம்மந்திரத்தின் பொருள்:
நறுமணம் கமழும் தேகம் கொண்டவனே! முக்கண் உடையவனே! எல்லா ஜீவராசிகளுக்கும் படி அளப்பவனே! உம்முடைய திருவடியை நாங்கள் தொழுகின்றோம். நன்கு கனிந்து பழுத்த பழமானது மரத்தில் இருந்து விடுதலை பெற்று உதிர்ந்து விடுவது போல, வாழ்க்கை என்னும் நிலையற்ற விஷயத்திலிருந்து நம்மை விடுவித்து, மரணம் என்னும் விடுதலையையும் கொடுக்கும் அற்புதத்தை கொடுப்பாயாக என்பதை உணர்த்தும் அர்த்தம் ஆகும்.

விபூதி தரித்துக் கொண்டிருக்கும் சிவபெருமானுடைய திருமேனியில் கமலும் இனிய நறுமணத்தை போற்றி, அவருடைய முக்கண்களை குறிப்பிட்டு, அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயாகவும், தந்தையாகவும் இருப்பவர் என்பதை உணர்த்தி, அவருடைய திருவடியை தொழுகின்ற அற்புதமான இந்த மந்திரத்தை தெய்வீக சக்தி பொருந்தியதாக ஆன்மீகத்தில் கருதப்படுகிறது. மிருத்தியுஞ்சய மந்திரம் உச்சரிப்பவர்களுக்கு எத்தகைய விபத்துகளும் நேர்வதில்லை. அடிக்கடி வெளியில் செல்லும் பொழுது விபத்துகள் ஏற்படுபவர்கள், சனி திசை நடப்பவர்கள், ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் இம்மந்திரத்தை காலையில் எழுந்ததும் திருநீறு பூசிக் கொண்டு ஒருமுறை உச்சரித்தால் கூட போதும்! அதனுடைய பலன்கள் பன்மடங்கு அனுபவிக்க கூடும்.

உலகம் என்னும் இன்ப மாயையிலிருந்து கடவுளை உணர்த்துவதற்கு உரிய அற்புதமான இந்த மிருத்யுஞ்சய மந்திரத்தை அமைதியான நிலையில் அமர்ந்து 108 முறை உச்சரித்தவர்களுக்கு எத்தகைய கவலைகளும் நெருங்குவது இல்லை. துன்பம், துயரம், மன இறுக்கம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாதவர்கள், இந்த மந்திரத்தை உச்சரித்து பாருங்கள்! உங்களுடைய மனோதிடம் 200 மடங்கு அதிகரிப்பதை உணரலாம்! இத்தகைய சக்தி வாய்ந்த மிருத்யுஞ்சய மந்திரத்தை போற்றி வணங்குவோம்.

- Advertisement -