ஒருவருடைய வாழ்க்கையில் பலவிதமான சுபகாரியங்கள் என்பது நடைபெறும். சாதாரணமாக பிறந்த குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துவது கூட ஒரு விதமான சுபகாரியம்தான். அதில் தொடங்கி அவர் பெரியவராகி திருமணம் செய்து குழந்தை பெற்று அந்த குழந்தை படிப்பில் சிறந்து விளங்கி வேலைக்கு செல்வது கூட ஒரு விதமான சுபகாரியமாக தான் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சுபகாரியங்கள் அந்தந்த வயதுக்கு ஏற்றார் போல் நடக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த வாழ்க்கை சிறப்பான வாழ்க்கையாக அமையும். ஆனால் இன்றைய காலத்தில் ஒரு சிலருக்கு வயது போன பிறகு கூட அவர்களுக்கு நடக்க வேண்டிய சுப காரியங்கள் தள்ளி செல்கின்றன. அப்படிப்பட்ட சுப காரியங்களில் இருக்கக்கூடிய தடைகளை விலக செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சுப காரிய தடை நீங்க
வீட்டில் ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடந்துவிட்டால் உடனே இனிப்பு செய்து வைத்து கொண்டாடும் வழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. அவ்வாறு இனிப்பு செய்யும்பொழுது அந்த இனிப்பை இறைவனுக்கு நெய்வேத்தியமாகவும் வைப்பதுண்டு. இன்னும் சிலரோ விசேஷமான நாட்கள் வரும்பொழுது தெய்வங்களுக்கு பிடித்தமான பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்வார்கள்.
இதுபோல் நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வழிபாட்டிற்குரிய பலன் என்பது நமக்கு விரைவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் ஏதாவது ஒரு சிறிய பொருளையாவது நெய்வேத்தியமாக வைத்து இறைவனை வழிபட வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அப்படி நாம் வைக்கக்கூடிய பொருட்களை பொறுத்து நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். அந்த வகையில் சுபகாரிய தடைகள் நீங்குவதற்கு இறைவனுக்கு எந்த பொருளை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
இந்த நெய்வேத்தியத்தை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே செய்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும். ஒருவேளை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய இயலவில்லை என்னும் பட்சத்தில் மாலை 6:00 மணிக்கு மேல் கூட இந்த வழிபாட்டை செய்யலாம். மிகவும் கஷ்டமான நெய்வேத்தியம் ஒன்றும் கிடையாது. நாம் அடிக்கடி நம்முடைய வீட்டில் செய்யக்கூடிய பாசிப்பருப்பு பாயாசம் தான்.
இந்த பாசிப்பருப்பு பாயாசத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்து இறைவனுக்கு வைத்து தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அப்படி தீபம் ஏற்றும் பொழுது தனியாக ஒரு அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை நாம் ஏற்றுவதால் நம்முடைய குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், நாம் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதோடு இந்த பாசிப்பருப்பு பாயாசத்தையும் வைத்து வழிபாடு செய்வதன் மூலம் சுபகாரியங்களில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி விரைவிலேயே மங்களகரமான நிகழ்வு நடைபெறும்.
இதையும் படிக்கலாமே:
மிகவும் எளிமையான இந்த வெள்ளிக்கிழமை வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் செய்பவர்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், சுப காரியங்கள் இருக்கக்கூடிய தடைகள் விலகும், வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.