சமையலறையில் இந்த 1 பொருளை இப்படி வைத்தாலே போதும். சகல விதமான சந்தோஷமும் உங்கள் வீடு தேடி வரும்.

cooking
- Advertisement -

பூஜை அறை சுத்தபத்தமாக, லட்சுமி கடாட்சத்தோடு இருந்துவிட்டால் போதும். வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பது நிறைய பேரின் நம்பிக்கையாக இருக்கிறது. அப்படி கிடையாது. பூஜை அறைக்கு இணையாக சுத்த பத்தமாக இருக்க வேண்டிய இடம் சமையலறை. சமையலறையிலும் அக்கினி தேவன் தான் கடவுள். பூஜை அறையிலும் அந்த அக்னி தேவன் தான் கடவுள். ஆக இந்த இரண்டு இடங்களுமே ஒரு வீட்டிற்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.

சில வீடுகளில் பெண்களுக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகம் இருக்காது. சமைத்தாலும் அந்த சாப்பாடு ருசி தராது. ருசியாக சமைத்தாலும், சமைத்த சாப்பாடு அப்படியே மிஞ்சி போய் கெட்டுப் போய் குப்பையில் கொட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு இருக்கும். வாஸ்து ரீதியாக இவ்வளவு பிரச்சனைகளையும் சரி செய்வதற்கு சமையலறையில் நாம் எந்தெந்த பொருட்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை பற்றிய ஒரு அறிய தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

சகல விதமான சந்தோஷத்தையும் பெற சமையலறையில் வைக்க வேண்டிய பொருள்:
கொத்தமல்லி தழை, வரக்கொத்தமல்லி இந்த இரண்டு பொருட்களில் உங்களுடைய வீட்டில் எது இருக்கிறதோ, அதை நீங்கள் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பரிகாரத்தில் கொத்தமல்லி தழைக்குத்தான் முதலிடம். அதாவது உங்களுடைய வீட்டில் கொத்தமல்லி தழை இருக்கும் பட்சத்தில் அதைத்தான் நீங்கள் பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். கொத்தமல்லி தழை இல்லாத சமயத்தில் வர கொத்தமல்லியை பயன்படுத்தலாம்.

ஒரு சிறிய கண்ணாடி டம்ளர் நிரம்ப தண்ணீரை ஊற்றிவிட்டு, அதன் உள்ளே இந்த கொத்தமல்லி தழைகளை போட்டு வைக்க வேண்டும். அப்படியே நீள நீளமாக ஃப்ளவர் வாஷில் போடும்படி கொத்தமல்லி தழைகளை போட்டு வைத்தாலும் சரி, அல்லது கொத்தமல்லி தழைகளை வெட்டி, தண்ணீரில் மிதக்க வைத்தாலும் சரி அது உங்களுடைய சவுகரியம். தண்ணீரில் கொத்தமல்லி தழை சேர்ந்து இருக்கும் போது சமையலறையில் இருக்கக்கூடிய தோஷங்கள் விலகும். இதே போல கொத்தமல்லி தழை இல்லாத சமயத்தில் தண்ணீரில் கொத்தமல்லி விதை, அதாவது தனியா 1 ஸ்பூன் அளவு எடுத்து அப்படியே தூவி விட்டு விடுங்கள்.

- Advertisement -

சமையலறையில் எந்த திசையில் வேண்டும் என்றாலும் இதை வைத்துக் கொள்ளலாம். தினம்தோறும் இந்த தண்ணீரை வெளியில் கொட்டி விட்டு புதிய தண்ணீர் ஊற்றி புதுசாக உள்ளே இருக்கும் பொருட்களை மாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: கணவர் வெளியே கிளம்பும்போது, மனைவியின் கையால் இந்த 1 பொருளை வாங்கிக் கொண்டால், அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டென கொட்டும்.

இதேபோல வரவேற்பறையில் கூழாங்கல் வைத்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் தாங்காது. ஒரு சிறிய பவுல் அல்லது சிறிய கண்ணாடி டம்ளர் எது இருந்தாலும் சரி, அதன் உள்ளே சிறிது கூழாங்கல்லை போட்டு தண்ணீர் ஊற்றி வைத்து விடுங்கள். தினமும் அந்த கூழாங்கலில் இருக்கும் பழைய தண்ணீரை கீழே கொட்டி விட்டு, புதிய தண்ணீரை மாற்றி வைக்க வேண்டும். இப்படி செய்தால் வீட்டில் கண் திருஷ்டி கெட்ட சக்தி அண்டாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். ஆன்மீகம் சார்ந்த இந்த குறிப்பின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பாருங்கள்.

- Advertisement -