சமையலறையில் பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இது! வாழ்க்கையில் வரக்கூடிய, தீர்க்க முடியாத பலவிதமான பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு காரணம்.

cook-lakshmi

வீட்டில் இருக்கக் கூடிய பெண்களுக்குத்தான் பல விதமான சாஸ்திர முறைகள் சொல்லப்பட்டுள்ளன. அந்த வரிசையில் பூஜை அறைக்கு நிகராக இருக்கும் சமையலறையை, பெண்கள் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வரக்கூடிய பெரிய பெரிய கஷ்டங்களுக்கு காரணமாக இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தோஷங்களை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும், என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எந்த வீட்டில் இருக்கும் பெண் பூஜை அறைக்கு நிகராக சமையலறையை நினைத்து, சமையலறையை பராமரித்து வருகின்றாளோ, அந்த வீட்டில் நிச்சயம் பெரிய அளவில் வரக்கூடிய பிரச்சினைகள் கூட, நமக்கு பெரிய அளவிலான பாதிப்பை தராமல் கடந்து போகும் என்பதுதான் உண்மை.

cook1

சரி, சமையலறையில் பெண்கள் செய்யக்கூடிய தவறு என்ன? அந்த தவறுக்கான பரிகாரம் என்ன, என்பதை பார்த்து விடுவோமா? முதலில் காலையில் எழுந்ததும் குளித்து முடித்து விட்டுதான் சமையலறைக்குப் போக வேண்டும் என்பது சாஸ்திரம். இன்று நம்மில் பல பேருக்கு காலை எழுந்தவுடன் குளிக்கும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. காலை எழுந்து சில பெண்கள் பல் கூட தேய்க்காமல், வெறும் தண்ணீரை கொண்டு வாய் கொப்பளித்து, டீ குடித்து சமையலறைக்கு சென்று சமையல் செய்யும் பழக்கத்தை வைத்துள்ளார்கள்.

இதே போல் நிறைய பேர் வீடுகளில் மாதவிடாய் நாட்களில் கூட, காலை எழுந்து தலை ஸ்னானம் செய்யாமல் சமையலறைக்குச் சென்று காபி, டீ போட்டு சமைக்கும் பழக்கத்தையும் சில பெண்கள் வைத்துள்ளார்கள். இதேபோன்று சுத்தபத்தமாக இல்லாத சமயத்தில் காலை நேரத்தில் நிச்சயம் தலை ஸ்நானம் செய்துவிட்டுதான் பெண்கள் சமையல் அறைக்கு செல்ல வேண்டும் என்பது கட்டாயமான ஒன்று.

women8

அந்த காலத்தில் கூட்டுக் குடும்பமாக வாழும் கலாச்சாரம் இருந்து வந்தது. அது காலப்போக்கில் வெகுவாக குறைந்து கூட்டுக்குடும்பம் என்ற பேச்சுக்கு என்ற இடமில்லாமல் போய்விட்டது. கூட்டுக் குடும்பமாக இருக்கும் பட்சத்தில் காலையில் எழுந்து ஒருவரால் சமைக்க செல்ல முடியவில்லை என்றாலும், அந்த வீட்டில் இருக்கும் மற்றொரு பெண் மாமியாராக இருந்தாலும் சரி, இல்லை மற்ற உறவுகளாக இருந்தாலும் சரி, அவர்கள் சென்று சமையலறை வேலையை செய்வார்கள்.

- Advertisement -

இந்த காலத்தில் அப்படி இல்லை. வீட்டில் இருக்கும் ஒரு பெண் தான் எல்லா வேலைகளையும் கவனிக்க வேண்டிய காரணத்தால், சூழ்நிலை காரணமாக, நேரமின்மை காரணமாக குளிக்காமல் கூட, சமையல் அறைக்கு செல்லும் பழக்கத்தை வைத்துள்ளார்கள். முடிந்தவரை சுத்தபத்தமாக இல்லாத சமயத்தில் மட்டுமாவது குளித்து விட்டு சமையல் அறைக்கு செல்லும் பழக்கத்தைக் கொண்டு வருவதுதான் நல்லது. இப்படியாக குளிக்காமல் சமயலறைக்கு சென்று சமையல் வேலையை செய்தாலும், அதன் மூலம் நமக்கு எந்த ஒரு தோஷமும் ஏற்படக் கூடாது என்றால், நாம் இதை மட்டும் செய்தாலே போதும்.

women7

காலையில் எழுந்து பல் தேய்க்க வேண்டும். முகம் அலம்ப வேண்டும். கை கால்களை கழுவிக் கொள்ள வேண்டும். தலையை திருத்திக்கொள்ள வேண்டும். நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும். கொஞ்சமாக மஞ்சள் தண்ணீரை கரைத்து தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். காலையில் சமையல் அறைக்கு சென்ற உடன் எந்த பொருளையும் தொடாமல் ஒரே ஒரு கல் உப்பை எடுத்து பெண்கள் தங்களுடைய வாய்க்குள் போட்டுக் கொண்டு, அதை சாப்பிட்டுவிட்டு, கொஞ்சமாக தண்ணீர் பருகிவிட்டு அதன் பின்பு மற்ற வேலைகளை தொடங்க வேண்டும்.

cooking'

குளிக்காமல் தொடுவதற்கு என்று சிறிய டப்பாவில் கல் உப்பை போட்டு வைத்துக்கொள்ளுங்கள். (இதற்காக தோஷம் தாக்கக் கூடாது என்று அதிகப்படியான உப்பு எடுத்து போட்டு சாப்பிட வேண்டாம். சிறிய ஒரு கல் வாய்க்குள் போட்டுக் கொண்டால் போதும்.) இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு இருக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத சில வகை தோஷத்தால், எந்த பெரிய அளவிலான பாதிப்பும் உங்களுடைய குடும்பத்திற்கு ஏற்படாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள் வரக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகள் கூட சுலபமாக தீர்ப்பதற்கு நம்மால் முடிந்த சின்ன பரிகாரம் இது.

இதையும் படிக்கலாமே
பலவீனமாக இருக்கும் மனதை கூட, உறுதியாக மாற்றக்கூடிய சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. உங்கள் தலைவிதியை மாற்றப்போகும் அந்த முத்திரையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.