குப்பையில் தூக்கி போடும் இந்த ஒரு பொருள் இருந்தா போதுமே. அசைவம் சமைத்தால் கூட இனி உங்கள் வீட்டு சமையல் அறையில் எந்த துர்நாற்றமும் வீசாது.

kitchen
- Advertisement -

நிறைய பேர் வீடுகளில் சமையலறை 24 மணி நேரமும் ஈரமாக சிங்கில் தண்ணீரோடு ஒரு மாதிரி வாடை வீசிக்கொண்டே இருக்கும். சமையலறை சிங்க், மேடை காயவே காயாது. காரணம் அழுக்கு பிசுபிசுப்பு. சில பேர் வீடுகளில் அசைவம் சமைத்தால் சமையலறையில் இருந்து ஒரு கெட்ட வாடை வீசிக்கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகளிலிருந்து தப்பித்து சமையலறை எப்போதும் 24 மணி நேரமும் பிரஷ்ஷாக இருக்க வேண்டும் என்றால் சமையலறையை சுத்தம் செய்ய இந்த லிக்விடை உங்கள் கையாலேயே தயார் செய்து பயன்படுத்தி பாருங்கள். இதே குறிப்பை பின்பற்றி குளியலறை யில் இருக்கும் பொருட்களை கூட சுத்தம் செய்து கொள்ளலாம். இந்த குறிப்புக்கு குப்பையில் தூக்கி போடும் எலுமிச்சை பழத்தோல் இருந்தாலே போதும்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எலுமிச்சை பழத்தோல், பயன்படுத்தவே முடியாது என்று தூக்கி போடும் படி இருக்கக்கூடிய எலுமிச்சம் பழம் இருந்தாலும் இதில் போட்டுக் கொள்ளலாம். எல்லா எலுமிச்சம் பழங்களையும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தோலுடன் அப்படியே மிக்ஸி ஜாரில் அரைத்து விடுங்கள். அதன் பின்பும் இந்த விழுதை ஒரு வடிகட்டியில் ஊற்றி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அலசி நன்றாக பிழிய வேண்டும். (4 காய்ந்த எலுமிச்சம் பழம் அல்லது எலுமிச்சை பழத்தோல் இருந்தாலும் 1 பெரிய சொம்பு அளவு தண்ணீரை ஊற்றினால் சரியாக இருக்கும்.)

- Advertisement -

நமக்கு எலுமிச்சை பழம் வாசம் நிறைந்த ஒரு சாறு கிடைத்திருக்கும். அதில் பேக்கிங் சோடா 2 ஸ்பூன், விம் லிக்விட் 2 ஸ்பூன் ஊற்றி, நன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொண்டாலும் சரி, அப்படி இல்லை என்றால் ஒரு வாட்டர் கேனில் ஊற்றி மூடி போட்டு அந்த கேன் மூடியில் சின்ன சின்ன ஓட்டைகளை போட்டுக் கொண்டாலும் சரி, பயன்படுத்துவது உங்கள் சௌகரியம்.

இந்த ஸ்ப்ரேவை வைத்து தான் சமையலறையில் இருக்கும் ஸ்டவ், சமையலறை மேடை, சிங்க் அனைத்தையும் சுத்தம் செய்யப் போறீங்க. தண்ணீர் ஊற்றி தேய்த்து தேய்த்து கழுவ வேண்டும் என்று அவசியம் கிடையாது‌. முதலில் ஸ்டவ், சமையல் மேடையில் சிந்தி இருக்கும் உணவுப் பொருட்களை ஒரு துண்டு வைத்து துடைத்து கீழே தள்ளி விடுங்கள். பிறகு இந்த ஸ்ப்ரேவை ஸ்டவில், மேடையில், சுவற்றில் உள்ள டயல்ஸில் எல்லா இடங்களிலும் படும்படி தெளித்துவிட்டு, ஒரு ஸ்பான்ச் நாரை வைத்து தடவி பத்து நிமிடங்கள் ஊறவைத்து விட்டால் போதும். அதன் பின்பு முதலில் ஈரத்துணியை வைத்து துடைக்க வேண்டும். பிறகு காய்ந்த துணியை வைத்து துடைக்க வேண்டும். இப்படி செய்தால் உங்கள் சமையலறை பளிச்சென பாலிஷ் போட்ட மாதிரி 10 நிமிடத்தில் மாறிவிடும்.

- Advertisement -

சிங்க் பகுதிகளில் இந்த ஸ்பிரேவை ஊற்றி ஸ்டீல் நாரை போட்டு தேய்த்து கழுவினால், சிங் அழகாக துர்நாற்றம் வீசாமல் சுத்தமாகிவிடும். இதே போல தான் பாத்ரூமில் இருக்கும் பக்கெட்டுகளையும் இந்த ஸ்ப்ரேவை ஊற்றி நார் போட்டு தேய்த்தால் சுத்தமாக அழுக்கு கறை நீங்கிவிடும். பாத்ரூமில் இருக்கும் டேப்பையும் இதே போல இந்த லிக்விடை வைத்து தேய்த்து சுத்தம் செய்து கொள்ளலாம். அழுக்கு போவதோடு பூச்சி பொட்டுகள் தொல்லை இல்லாமல் வாசனையாக இருக்கக்கூடிய ஒரு ஸ்ப்ரே தான் இது.

இந்த ஸ்பிரேவை நீங்கள் தயார் செய்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். அதற்கு மேலே ஸ்டோர் செய்ய முடியாது. உங்கள் சமையலறையில் அசைவம் செய்துவிட்டு அதன் பின்பு இந்த லிக்விடை வைத்து சுத்தம் செய்தால் அசைவம் செய்த வாடையே ஒரு துளி கூட வீசாது. சமையலறையும் சுத்தம் செய்த பின்பு சீக்கிரம் காய்ந்து விடும். எப்போதும் நறுமணமாக உங்கள் வீட்டு கிச்சன் மாறிவிடும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. இல்லத்தரசிகளுக்கு மனதிற்கு அவ்வளவு சந்தோஷம் கிடைக்கும்.

- Advertisement -