சமையலறையில் ஒரு போதும் இந்த  தவறை மட்டும் செய்யாதீங்க! வீட்டில் பஞ்சம் வருவதற்கு இதுவும் ஒரு காரணம் தான்.

kitchen

இன்றைய சூழ்நிலையில் நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் நாம் கொண்டுவரும் சின்ன சின்ன மாற்றங்கள் கூட, நம்முடைய வாழ்க்கையில் பெரிய பெரிய திருப்பங்களை ஏற்படுத்துகின்றது. அந்த திருப்பங்களில் சில, நமக்கு நன்மையை தந்தாலும், அதன் மூலம் நமக்கு ஒரு சில கெட்ட விஷயங்களும் நம்மை அறியாமலேயே நடந்து விடுகின்றது. மாற்றங்களை தவறு என்று சொல்ல வரவில்லை. இருப்பினும் அந்த மாற்றங்களும் முன்னேற்றமும் நம்முடைய வாழ்க்கை முறையை பாதிக்காமல் இருக்க வேண்டும். நவநாகரிகம் என்று சொல்லி நம்முடைய முன்னோர்கள் சொன்ன விஷயங்கள் அத்தனையும் பொய் என்று சொல்லி கண்மூடித்தனமாக ஒதுக்கி வைத்து விடக்கூடாது. அந்த வரிசையில் நம் சமையலறையில் சிலபேர் செய்யக்கூடிய தவறு ஒன்று இருக்கின்றது. அது என்ன தவறு? அதை எப்படி திருத்திக் கொள்ளலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

arisi2

பொதுவாகவே தன தானியங்கள் நிறைந்த வீட்டை தான் செல்வ கடாட்சம் நிறைந்த வீடு, பஞ்சமில்லாத வீடு, வறுமை இல்லாத வீடு என்று சொல்லுவார்கள். இன்றைக்கு நம்முடைய வீட்டில் சாப்பிடுவதற்கு முதன்மைப் பொருளாக இருப்பது அரிசி. எந்த ஒரு வீட்டிலும் ஒரு கைப்பிடி அளவு அரிசி கூட இல்லாமல் சுத்தமாக துடைத்து சமைத்து விடக்கூடாது. அரிசி பாத்திரத்தில் கொஞ்சம் அரிசி இருக்கும்போதே புதிய அரிசியை நம் வீட்டில் வாங்கி வைத்து விட வேண்டும். இது முதல் விஷயம்.

இரண்டாவதாக பெரும்பாலும் நிறைய பேர் வீட்டில் இந்த தவறை செய்வது கிடையாது. இருப்பினும் சில பேர் இதை செய்கிறார்கள். அரிசி மூட்டை எப்போதுமே நாம் அடுப்பு வைக்கும் இடத்திற்கு கீழ் பக்கத்தில் தான் இருக்க வேண்டும். வீட்டில் அலமாரி இருக்கின்றது என்ற காரணத்தினால் அரிசியை ஏதாவது ஒரு பாத்திரத்தில் கொட்டி அதை தூக்கி நம் தலைக்கு மேலே வைத்து விடக்கூடாது. இப்படி செய்தால் வீட்டில் சாப்பாட்டிற்கு பஞ்சம் வரும், என்ற ஒரு கருத்தை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

rice

காரணம், அரிசி நாம் சமைக்கும் அடுப்பிற்கு கீழே இருந்தால் அரிசிப் பானையில் அரிசி உள்ளதா இல்லையா என்று நமக்கு தெரியும். நம்முடைய தலைக்கு மேலே அந்த அரிசி இருக்கும் பட்சத்தில், அந்த அரிசி பாத்திரத்தின், அரிசி இருக்கின்றதா இல்லையா என்பதை நாம் கவனிக்க மாட்டோம். அதுமட்டுமல்லாமல் அரிசி குறைந்ததே கவனிக்காமல் அடுத்த நாள் சாப்பாட்டிற்கு உலை வைக்க அரிசி பானையில், ‘அரிசி இல்லை’ என்ற வார்த்தையை நம் வீட்டில் ஒருபோதும் சொல்லவே கூடாது, என்பதற்காகத்தான் அரிசியை எப்போதும் நம் கண்களில் படும்படி அடுப்புக்கு கீழ்பக்கத்தில் வைக்கவேண்டும் என்று நம்முடைய சொல்லி வைத்துள்ளார்கள்.

- Advertisement -

பெரும்பாலும் இது நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தெரியாதவர்கள் இந்த தவறை செய்யக்கூடாது என்பதற்காக சொல்லப்பட்டுள்ள பதிவு. ஏனென்றால் அந்தக் காலத்தில் எல்லாம் அரிசியை மூட்டையாக வாங்கி கீழே வைத்து தான் புழங்குவாங்க! இந்த காலகட்டத்தில் கணவன் மனைவி இரண்டு பேர் மட்டும் குடும்பம் நடத்தும் சூழ்நிலை. அவர்களுக்கு மாதம் 5 கிலோ 10 கிலோ அரிசியை வாங்கி ஒரு சிறிய டப்பாவில் கொட்டி அழகாக அலமாரியின் மேல் பக்கத்தில் வைத்து விடுகிறார்கள்‌.

rice

5 கிலோ அரிசியாக இருந்தாலும் 25 கிலோ அரிசி ஆக இருந்தாலும் அதை அடுப்புக்கு கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் இடத்தில் வைப்பது சரியான முறை என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படி செய்தால் ஆயுசுக்கும் உங்கள் வீட்டில் பஞ்சம் வருவதற்கு வாய்ப்பு கிடையாது. இதைப்போல் அரிசியைக் கொட்டி வைக்க உங்களால் முடிந்தால் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பெரிய அளவிலான ட்ரம்மை வாங்கி வைத்துக்கொள்வது வீட்டிற்கு மிகவும் நல்லது.

rice

உங்கள் வீட்டில் அரிசி கொட்ட வைத்திருக்கும் டிரம்மில் அரிசியை கொட்டுவதற்கு முன்பு அதில் அடிப்பகுதியில் ஒரு விரலி மஞ்சளை, ஒரு வசம்பை மட்டும் போட்டு வைத்து அதன் பின்பு அரிசியை கொட்டினால் வீட்டில் சுபிட்சம் நிலைத்திருக்கும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.