சமையலறையில் பெண்கள் தினமும் இந்த ஒரு வேலையை செய்து வந்தாலே போதும். குடும்பத்திற்கு எந்த கஷ்டமும் வராது.

kitchen-lakshmi
- Advertisement -

ஒரு குடும்பத்தை சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை பெண்களிடத்தில் தான் உள்ளது. ஒரு வீட்டின் குடும்பத் தலைவி சரியாக இருந்து விட்டால், அந்த குடும்பமும் சீரும் சிறப்புமாக செழிப்பாக இருக்கும். ஒரு வீட்டின் குடும்ப தலைவி சரியில்லை என்றால் அந்த குடும்பம் கஷ்டப்படத்தான் செய்யும். இது எதார்த்தமான உண்மை. ஆகவே, குடும்ப தலைவிகள் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக நீங்கள் உங்களுடைய வீட்டில் செய்ய வேண்டிய ஒரு சில நல்ல விஷயங்களையும், செய்யக்கூடாத சில விஷயங்களையும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வீட்டில் பெண்கள் செய்யக்கூடாதவை:
ஒரு வீட்டில் பெண்கள் இதை மட்டும் செய்யவே கூடாது. அது என்ன தெரியுமா. கோபம். எந்த சூழ்நிலையிலும் பெண்கள் கோபப்பட்டு ஆத்திரத்தில் சண்டை போடக்கூடாது. எந்த விஷயமாக இருந்தாலும் பொறுமை காத்து நிதானமாக அந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும். அதிக கோபம் கொண்ட பெண்கள் இருக்கிற வீட்டில் நிச்சயமாக சந்தோஷம் தங்காது.

- Advertisement -

அதற்காக பெண்களுக்கு சுத்தமாக கோபமே வரக்கூடாதா. அவர்களும் உயிர் உள்ள மனிதர்கள் தானே. ஜடம் போல எப்படி வாழ முடியும் என்று சில பேர் கேட்கலாம். அப்படி கிடையாது. அவர்களும் உயிர் உள்ள மனிதர்கள் தான். ஆனால் எந்த இடத்தில் கோபத்தை வெளி காட்ட வேண்டும். எப்போது கோபத்தை வெளி காட்ட வேண்டும் என்ற சில சூட்சுமங்கள் உள்ளது அல்லவா. அதை தெரிந்து நடந்து கொள்ள வேண்டும். சூழ்நிலை தெரியாமல் பேசக்கூடாது. சூழ்நிலை தெரியாமல் கோபப்படவும் கூடாது. அதிக கோபப்படும் பெண்கள் சில நாட்கள் கோபத்தை குறைத்து குடும்பத்தை நடத்தி பாருங்கள். உங்களுக்கே உங்கள் குடும்ப சூழ்நிலையில் நல்ல வித்தியாசமும் மாற்றமும் தெரியும்.

சமையலறையில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்:
சமையல் அறை என்றாலே அது வீட்டு பெண்களுடைய பொறுப்பு தான். ஒரு வீட்டுக்கு பூஜை அறை எவ்வளவு முக்கியமோ அதேபோல தான் சமையலறையும். சொல்லப்போனால் பூஜையறையை விட சமையலறையில் தான் நாம் நேரத்தை அதிகமாக கழிக்கின்றோம். நம்முடைய குடும்பத்தின் ஆரோக்கியமே நம் சமையல் அறையில் தான் அடங்கியுள்ளது. ஆகவே பெண்கள் அவர்களுடைய வீட்டு சமையல் அறையை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு சமையல் அறையை சுத்தம் செய்துவிட்டு எச்சில் பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு தூங்க செல்வது தான் நல்லது. இரவு நேரத்தில் மகாலட்சுமி உங்கள் வீட்டு சமையல் அறையை பார்க்க வருவாள்.

அப்போது சமையலறை அசுத்தமாக இருந்தால் அவள் உங்களுடைய குடும்பத்திற்கு நல்லபடியாக ஆசீர்வாதத்தை கொடுக்க மாட்டாள். பிறகு உங்கள் வீட்டு சமையல் அறைக்கு ராத்திரி நேரத்தில் முன்னோர்களும் வருவதாக நம்பிக்கை. ஆகவே, எப்போதும் ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் சாதம் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கொஞ்சமாக உப்பு போட்டு அந்த கிண்ணத்தை மூடி ஸ்டவ்வுக்கு மேலே, அடுப்புக்கு மேலே வைப்பது சிறப்பான பலனை தரும். (சமையலறையை சுத்தமாக துடித்து, சமைத்த சாதமே இல்லாமல் விடக்கூடாது).

இதையும் படிக்கலாமே: உங்களை வீழ்த்த நினைக்கும் எதிரிகளின் முன் விழாமல் எதிர்த்து நிற்க மூன்று எருக்கம் இலையை வைத்து இப்படி செய்து விடுங்கள். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார்கள்

பக்கத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் திறந்தபடி வையுங்கள். தினமும் ராத்திரி நேரத்தில் இது உங்கள் வீட்டு சமையல் அறையில் இருக்க வேண்டும். இதனால் உங்கள் வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சமும் நிலைக்கும். வறுமை என்பது இருக்காது. அதோடு சேர்ந்து முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறவும் இந்த எளிமையான பரிகாரம் கை கொடுக்கும். தொடர்ந்து மேலே சொன்ன விஷயங்களை பின்பற்றி வரும்போது உங்களை அறியாமலேயே உங்களுடைய வீட்டில் பல நன்மைகள் தொடர்ந்து நடக்க தொடங்கிவிடும். சந்தோஷம் நிலைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -