சமையல்கட்டில் பல்லி தொல்லை அதிகமாக இருக்கிறதா? இத மட்டும் செஞ்சு பாருங்க ஒரு பல்லி கூட உங்க வீட்டு பக்கம் தலை காட்டாது!

onion-lizard-kitchen
- Advertisement -

வீட்டில் பல்லி தொல்லை இருந்தால் பலருக்கு அலர்ஜியாக இருக்கும். எங்கு பார்த்தாலும் பல்லி நடமாட்டம் இருந்தால் ஒருவிதமான அருவருப்பு உண்டாகிறது. இந்து மதத்தில் பல்லிக்கு தனித்துவமான மகத்துவங்கள் கூறப்பட்டாலும், அது சமையல் கட்டில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல! பல்லியின் எச்சங்கள் அல்லது பல்லி சமையலில் விழுந்து விடக்கூடும் என்பதால் சமையல்கட்டில் பல்லி நடமாட்டம் இல்லாமல் சுத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஒரு இடத்திலும் பல்லி நடமாட்டம் இல்லாமல் இருக்க, வீட்டில் என்ன செய்யலாம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பல்லி நடமாட்டம் இருந்தால் வீட்டில் முதலில் தேவையற்ற பொருட்களை சேகரிப்பதை தவிர்க்க வேண்டும். அட்டைப் பெட்டிகளை பரண் மேல் அடுக்கி வைப்பது, அதை திறந்த நிலையில் வைப்பது போன்றவற்றை கண்டிப்பாக செய்யக்கூடாது. பொதுவாக பல்லிகள் பரண் மேலிருக்கும் அட்டைப் பெட்டியில் முட்டை இடுவது வழக்கமாக வைத்திருக்கிறது. இதனால் வீட்டில் அதிக பல்லி தொல்லைகள் உண்டாவதற்கு நிறைய வாய்ப்புக்கள் ஏற்பட்டு விடுகிறது. எனவே அட்டைப் பெட்டிகளை திறந்த நிலையில் வைக்க வேண்டாம்.

- Advertisement -

அதே போல தேவையற்ற குப்பைகளை சேகரிப்பதையும் தவிர்க்க வேண்டும். நேர்த்தியாக, அழகாக பேக் செய்து பரண் மேல் உங்களுக்கு பிற்காலத்தில் எப்போதாவது பயன்படக்கூடிய பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். பல்லி நடமாட்டம் இருக்கும் இடங்கள் பெரும்பாலும் வெளிச்சம் மிகுந்ததாக இருக்கும். டியூப்லைட் அல்லது எல்இடி பல்புகளுக்கு பக்கத்தில் அதிக அளவு பல்லி நடமாட்டம் இருக்கும்.

இந்த இடங்களில் ஒரு பெரிய மயில் தொகை ஒன்றை வாங்கி ஒட்டி வைத்து விடுங்கள். பார்ப்பதற்கு அழகாகவும், அந்த இடத்தில் பல்லி நடமாட்டமும் குறைய ஆரம்பிக்கும். மேலும் பரண் மேல் நாலைந்து ரசக்கற்பூரம் மற்றும் நாலைந்து மயில் தோகைகளை ஒட்டி வையுங்கள், அதன் வாசத்திற்கு பல்லி நடமாட்டம் குறையும். குறிப்பாக சமையல் கட்டில் பல்லி நடமாட்டம் இருந்தால் ஒரு சிறிய அளவிலான பிளாஸ்டிக் அல்லது பயன்படாத ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மண்ணை போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் சிறிய அளவில் ஒன்றை எடுத்து அதில் ஊன்றி வையுங்கள். சிறிது நாட்களுக்கு பிறகு முளைவிட ஆரம்பித்துவிடும். இந்த முளைவிட்ட வெங்காயத்தாள் வாசத்திற்கு ஒரு பல்லி கூட சமையல்கட்டில் எட்டிப் பார்க்காது. இது போல ஆங்காங்கே மூலைகளுக்கும் மூலை நீங்கள் செய்து வைத்து விட்டால் பல்லிகள் நடமாட்டம் வெகுவளவு குறைந்து விடும். இதனால் சமையலில் பல்லி விழுவது அல்லது பல்லியின் எச்சங்கள் ஆங்காங்கே விழுவது போன்ற அருவருப்புகள் தவிர்க்கப்படுகிறது.

வீட்டில் பல்லி இருந்தால் பூச்சிகளை அது சாப்பிடும் என்று விட்டு விடுகிறோம். பூச்சிகளை சாப்பிடும் பல்லியால் நமக்கு நேரடியான பாதிப்புகள் உண்டு. பல்லி எச்சங்கள் நம் மேல் விழுந்தால் நமக்கு புண் போன்றவற்றை உடம்பில் ஏற்படுத்துகிறது, இது அரிப்பாய் மாறுகிறது. இது போன்ற தொந்தரவுகள் வராமலிருக்க கூடுமானவரை வீட்டை சுத்தமாகவும், மேலும் பல்லிகளுக்கு ஒவ்வாத பொருட்களை பயன்படுத்தி பல்லிகளை வீட்டை விட்டு துரத்த பாருங்கள். அதைக் கொன்று எப்பொழுதும் வெளியில் போடக்கூடாது. இது பாவத்தை சேர்க்கும். எனவே இது போல துரத்திவிடுவது எல்லோருக்கும் நன்மை தரும்.

- Advertisement -