சமையலறையில் செய்யக்கூடாத இந்த தவறுகளை நீங்கள் செய்தால் கையில் பணப்புழக்கம் குறையும் என்கிறது ஆன்மீகம்! அப்படியான விஷயங்கள் என்னென்ன? நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா?

kitchen
- Advertisement -

பணப்புழக்கத்தை குறைக்க செய்யும் இந்த மாதிரியான விஷயங்கள் ரொம்பவும் சூட்சமமான விஷயங்களாக உள்ளன. வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களுக்கும் நேர்மறை ஆற்றல்கள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை வெளியிடக் கூடிய தன்மை உண்டு. அது போல சில பொருட்கள் மங்களகரமாகவும் இருக்கின்றன. சில பொருட்கள் அதிர்ஷ்டத்தையும், சில பொருட்கள் துரதிர்ஷ்டத்தையும் கொண்டவையாக உள்ளன. இந்த வகையில் சமையலறையில் இந்த பொருட்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்! இப்படி இல்லாமல் இருந்தால் பணவரவு தடைபடும் என்கிறது ஜோதிடம். அப்படியான சில முக்கியமான விஷயங்களைப் பற்றிய தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சமையல்கட்டில் இருக்க வேண்டிய முக்கியமான பொருள் ‘அஞ்சறைப்பெட்டி’. அஞ்சறை பெட்டி என்பது கட்டாயம் எல்லோருடைய சமையலறையிலும் இருக்க வேண்டும். அது எப்பொழுதும் முழுமையாக நிரம்பி வைத்திருக்க வேண்டும். அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்களுக்கு வாட்டமாக இருக்கக் கூடிய பொருட்களை நீங்கள் நிரப்பி வைப்பது உண்டு. அப்படியான பொருட்களில் மஞ்சளும் கண்டிப்பாக இடம் பெற்றிருப்பது மங்களகரமான விஷயமாகும். சிலருக்கு மஞ்சள் வைக்க பிடிக்காமல் போகலாம், அவர்கள் மஞ்சள் தூளுக்கு பதிலாக கிராம்பு அல்லது சோம்பு போட்டு வையுங்கள்.

- Advertisement -

அஞ்சறைப் பெட்டியின் ஒவ்வொரு அறையிலும் இருக்கக்கூடிய பொருட்கள் முழுமையாக நிரம்பி இருக்க வேண்டும். குறைந்தால் அதை நிரப்பிக் கொண்டே இருங்கள். அஞ்சறைப்பெட்டி காலியாக இருந்தால் பணமும் காலியாகும் என்கிற நியதி உண்டு. அது போல குபேர சம்பத்து பெற வீட்டில் கண்டிப்பாக ஊறுகாய் வகைகள் இருப்பது அவசியமாகும். ஊறுகாய் இருந்தால் குபேரன் வாசம் செய்வார் என்பது நம்பிக்கை. கல் உப்பு மகாலட்சுமிக்கு பிடித்தது எனவே கண்டிப்பாக பீங்கான் ஜாடியில் நிரம்ப நிரம்ப வைத்திருக்க வேண்டும், இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

சமையலறையில் உப்பு ஜாடி அல்லது மண் ஜாடியில் கண்டிப்பாக புளி நிரம்ப வைத்திருக்க வேண்டும். புளியை பிளாஸ்டிக் டப்பா அல்லது எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைக்கக்கூடாது. பணப்புழக்கம் பெருக புளியை பீங்கான் ஜாடி அல்லது மண் குடுவையில் நிரப்பி வையுங்கள். அதே போல கல் உப்பையும் மண் குடுவை அல்லது பீங்கான் ஜாடியில் மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஊறுகாயும் அதே போல பீங்கான் ஜாடியில் வைத்திருக்க வேண்டும். முந்தைய காலங்களில் எல்லாம் இப்படித்தான் வைத்திருந்தார்கள். அவர்களிடம் செல்வ வளம் அள்ள அள்ள குறையாமல் நிரம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அரிசியை மூட்டையாக வாங்குபவர்கள் அதிலிருந்து தேவையான அரிசியை அரிசி பெட்டியில் பிரித்து வைத்திருக்க வேண்டும். அதில் வைத்திருக்கப்படும் ஆழாக்கு நிரம்பியிருக்க வேண்டும். அரிசியை எடுக்கும் பொழுது அரிசி முழுமையாக இருக்க வேண்டும். அரிசி குறையத் தொடங்கினால் அரிசி எடுக்கும் பொழுது ஒரு சத்தம் கேட்கும், அந்த சத்தம் பணப்புழக்கத்தை குறைக்க செய்யும். எனவே அரிசி பெட்டி எப்பொழுதும் நிரம்ப வைத்திருங்கள். அதே போல ஆழாக்கு காலியாக வைக்க கூடாது.

அரிசியை எடுத்த பின்பு மீண்டும் அரிசியை நிரப்பி பெட்டியில் வைத்து மூடி வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி ஆழாக்கு கவிழ்ந்து வைக்கக்கூடாது. நேராக நிமிர்ந்து அரிசியுடன் இருக்க வேண்டும். அதே போல தண்ணீர் பானையில் தண்ணீர் நிரம்பி வைத்திருக்க வேண்டும். ஒரே ஒரு தண்ணீர் பானையாவது உங்களுடைய சமையல்கட்டில் எப்பொழுதும் முழுமையாக நிரம்பி இருக்க வேண்டும். இப்படி நீங்கள் சமையல் பொருட்களை பராமரித்தால் அங்கு அள்ள அள்ள குறையாத தனமும், தானியமும் நிச்சயம் பெருகும் என்பது சூட்சமமான நம்பிக்கை.

- Advertisement -