வாங்கிய சம்பளப் பணம் கையில் தங்காமல் போவதற்கு இதுதான் முதல் காரணம். சம்பளப் பணத்தை சாமர்த்தியமாக சேமிக்க என்னதான் செய்வது?

kadan1
- Advertisement -

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்கள் என்ன தான் ஓடி ஓடி சம்பாதித்தாலும், அந்தப் பணம் அவர்களுடைய கையில் தங்குவதே கிடையாது. இந்த நொடி நமக்கு கையில் சம்பளப் பணம் வருகின்றது, அடுத்த நொடியே அந்தப் பணம் காணாமல் போய்விடுகிறது. பாதி சம்பளம், கடன் தொகையை கட்டுவதற்கே சரியாகிவிடும். மீதி இருக்கும் பணத்தை வைத்து பற்றாக்குறை பட்ஜெட் போட்டு, மீண்டும் மீண்டும் கடன் வாங்கி குடும்பத்தை நடத்துவதற்கு சிரமமாக உள்ளது. இதற்கு என்னதான் தீர்வு? சம்பளத்திலிருந்து கொஞ்சமாவது மிச்சம் பிடித்து வைக்க என்னதான் வழி? என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

money3

சம்பள பணத்தை சேமிக்க பரிகாரங்கள் எல்லாம் செய்ய வேண்டாம். ஆண்கள் இந்த ஒரு பிராயச்சித்தத்தை செய்து பாருங்களேன்! இன்றைய சூழ்நிலையில் யாரும் சம்பளத்தை பணமாக கையில் கொடுப்பது கிடையாது. நிறையபேர் சம்பளத்தை வங்கிக் கணக்கில் தான் போடுகிறார்கள். இது தவிர வாரக் கூலி, தினசரி கூலி, என்று சம்பளப் பணத்தை கையில் வாங்க கூடியவர்களும் இன்றளவும் இருந்துதான் வருகிறார்கள்.

- Advertisement -

இதில் நீங்கள் எப்படி சம்பாதிக்கும் ஆண்களாக இருந்தாலும் சரி, முதலில் சம்பளம் வந்தவுடன் அந்த சம்பள பணத்தை அந்த ஆண், அந்த வீட்டில் இருக்கும் பெண்ணிடம் கொடுக்க வேண்டும் என்பது தான் நியதி. அதாவது திருமணம் ஆகாதவர்கள் என்றால், அந்த ஆண்கள் தனக்கு வரும் சம்பளப் பணத்தை, அவர்களுடைய தாயிடம் கொடுக்கலாம். திருமணம் ஆனவர்கள் என்றால், தாயிடமும் கொடுக்கலாம் அப்படி இல்லை என்றால் தன்னுடைய மனைவியிடமும் கொடுக்கலாம். தவறு கிடையாது.

gajalakshmi-cash

ஆனால், திருமணமான ஒரு ஆண், சம்பளப் பணத்தை பெற்றதும், அந்த சம்பளத் தொகையை மனைவியிடம் கொடுப்பதுதான் நியதி. நியாயமான ஒரு விஷயமும் கூட. அந்த காலத்திலிருந்தே பின்பற்றி வந்த வழக்கங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இது காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மாறி விட்டது. ஆண்கள், தங்களுடைய மாதச் சம்பளம் எவ்வளவு என்பதை கூட தங்களுடைய தாயிடமும் சொல்வது கிடையாது. தன்னுடைய மனைவியிடமும் சொல்வது கிடையாது. எத்தனை பேர் வீட்டில் இது நடக்கிறது? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!

- Advertisement -

ஒருசில ஆண்கள் செய்யும் தவறுதான் இது. எல்லா ஆண்களையும் குறை கூறி விட முடியாது. முடிந்தவரை ஆண்கள் சம்பளம் வாங்கியவுடன் சம்பளத்திலிருந்து ஒரு தொகையையாவது, வீட்டில் மகாலட்சுமி அம்சத்தில் இருக்கும் உங்கள் அம்மாவிடமாவது கொண்டு வந்து கொடுக்க வேண்டும், அல்லது உங்களது மனைவியிடமாவது கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அது உங்கள் குடும்ப சூழ்நிலையை பொருத்தது.

kadan

உங்களுடைய சம்பளம் என்ன என்பதை, உங்கள் வீட்டிற்கு, உங்களை நம்பி வந்திருக்கும் பெண்ணிடம், உங்களுடைய மனைவியிடம் நிச்சயமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுடைய சம்பள பணத்தை நீங்கள் வீட்டில் இருக்கும் உங்கள் மனைவியிடம் கொடுத்தால், நிச்சயமாக அவர்களுடைய மனது சந்தோஷப்படும்.

kadan

வீட்டில் இருக்கும் பெண்கள் மன நிறைவோடு சந்தோஷமாக இருந்தால், வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். வீட்டில் தேவையற்ற கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு கிடையாது. கடன் சுமை வருவதற்கும் வாய்ப்பு கிடையாது. வீண்விரையம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு கிடையாது.

money4

அதே சமயம் நீங்கள் உங்களுடைய சம்பளப் பணத்தைக் கொண்டுவந்து உங்களுடைய மனைவியிடம் கொடுக்க வில்லை என்றாலும் சரி, உங்களுடைய தாயிடம் கொடுக்கவில்லை என்றாலும் சரி, அவர்களுடைய மன கஷ்டம் மனத்துயரம் நிச்சயமாக, அந்த வீட்டில் கஷ்டத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். எந்த வீட்டில் பெண்கள் கஷ்டப்படுகிறார்களோ அந்த வீட்டில் நிச்சயம் பணம் தங்காது. மேலே சொல்லப்பட்டிருக்கும் இந்த விஷயத்தை எல்லாம் ஆண்கள் ட்ரை பண்ணி பாருங்க! நிச்சயமாக உங்களுடைய சம்பளம் வீண்விரயமாக வாய்ப்பே இல்லை.

- Advertisement -