நீங்கள் சம்பாதித்த பணத்தை இப்படி மட்டும் செய்தால் நீங்கள் பணக்காரன் ஆகவே முடியாது தெரியுமா? சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

lakshmi-cash
- Advertisement -

ஒருவர் சம்பாதித்த பணத்தில் இருந்து என்னென்ன செய்யப்படுகிறது? என்பதைப் பொறுத்தே மேலும் மேலும் அவரிடம் பணம் சேருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். பணத்தை அதிகம் சம்பாதிப்பவன் அதை சரியான வழியில் செலவு செய்யாவிடில், வீண் விரையங்கள் வந்து கொண்டே இருக்கும். சம்பாதிக்கும் பணம் கையில் தங்க செய்யாது! 10 ஆயிரம் ரூபாய் வாங்கிய காலத்திலும், லட்சம் ரூபாய் சம்பாதித்த காலத்திலும் அவனால் ஒரு பைசா கூட சேமிக்க முடியாமல் தவிக்க கூடிய சூழ்நிலை வந்துவிடும். எனவே சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நீங்கள் சம்பாதித்த பணத்தில் இருந்து 10 சதவீதம் மட்டுமே உங்களுக்கென செலவு செய்ய வேண்டும் என்பது நியதி. மீதி இருக்கும் 90% குடும்பத்திற்காகவும், ஏழை எளியவர்களுக்கும், நீங்கள் செலவு செய்ய வேண்டும். இவ்வாறு செலவு செய்பவர்களுக்கு எப்பொழுதும் பணத் தட்டுப்பாடு ஏற்படுவது இல்லை. எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், இறைவன் இவர்களை கைவிடுவது இல்லை.

- Advertisement -

பத்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பவன் ஆயிரம் ரூபாயை தனக்கென வைத்துக் கொண்டு மீதியிருக்கும் ஒன்பதாயிரத்தை தாய், தந்தை, கணவன், மனைவி, மக்கள், இறைவன் என்று அனைவருக்கும் போக மீதம் இருக்கும் கொஞ்சம் பணத்தை மட்டுமாவது ஏழை, எளியவர்களுக்கு தான, தர்மங்கள் செய்ய வேண்டும் என்கிறது ஆன்மீகம்!

தான தர்மங்கள் எப்படி செய்ய வேண்டும்? பூமியாகவும், அன்னத்திலும் தானம் செய்பவர்களுக்கு அள்ள அள்ள குறையாத சகல, சவுபாக்கியங்களும் உண்டாகும் என்பது நியதி. அன்னதானம் என்பது ஒரு வேளை சாப்பாட்டை மட்டுமாவது அனுதினமும் ஒருவருக்கு நீங்கள் வாங்கிக் கொடுக்க முடிந்தால் உங்களை விட மனத்திருப்தி உள்ளவன் இந்த உலகில் இருந்து விட முடியாது. மற்றவர்களுக்காக வாழும் பொழுது, மற்றவர்களுடைய பசியைப் போக்கும் பொழுது நம்முடைய மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

- Advertisement -

பூமி தானம் என்பது இப்போது இருக்கும் காலகட்டத்தின் படி பூமியாக தானம் செய்ய முடியாது. உங்களுடைய ரத்த பந்த உறவுகளுக்கு வீடு கட்டுவதில் உதவி செய்வது, பணத்தொகை கொடுப்பது அல்லது உடல் உழைப்பைக் கொடுப்பது போன்றவற்றை செய்யலாம். அது மட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் வாடகைக்கு குடி இருப்பவர்கள் உங்களிடம் வைக்கும் கோரிக்கைகளை அவர்கள் கேட்காமலேயே நிறைவேற்றிக் கொடுக்கலாம். உங்கள் பூமியின் மீது அவர்கள் வசித்து கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுப்பது, அவர்களுக்கு இருக்கும் பூமி சார்ந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொடுப்பது போன்றவற்றின் மூலம் பூமி தானம் செய்வதற்கு உரிய பலன்களை அடையலாம்.

உங்களுடைய வீட்டிற்கு அருகே புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது, மின்சாரம் பகிர்ந்தளிப்பது போன்றவற்றை செய்வது கூட பூமி தானத்தில் சேர்வது ஆகும், எனவே இத்தகைய தானங்களை நீங்கள் செய்யும் பொழுது பெறற்கரிய பேறு கிடைக்கும். ஏழை, எளிய மூதாதையர்களுக்கு வஸ்திர தானம் செய்வதன் மூலம் உங்களுக்கு சகல சவுபாக்கியங்களும் அதிகரிக்கும். இப்படி சம்பாதிக்கும் பணத்தில் இருந்து இறைவனுக்கு ஒரு பங்கு, தர்மத்திற்கு ஒரு பங்கு, குடும்பம் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருக்கு ஒரு பங்கு என்று போக 10 சதவீதத்தை நீங்கள் உங்களுக்கு என பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி வாழும் பொழுது தான் உங்களுடைய வாழ்க்கைக்கு முழு அர்த்தம் கிடைக்கிறது. எல்லா பணத்தையும் நீங்களே வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் இறுதியில் பிரச்சனை உங்களுக்கு தான்.

- Advertisement -