நீங்கள் சம்பாதிக்கும் தொகையில் ஒரு பங்கை இந்த இருவருக்கு தருவதன் மூலம் செல்வம் அதிகரிப்பதோடு மட்டும் அல்லாமல் என்றுமே நிலைத்து இருக்கும்.

donating
- Advertisement -

இந்த உலகத்தில் யார் தான் பணத்தை சம்பாதிக்காமல் இருக்கிறார்கள். சம்பாதிப்பது எந்த அளவுக்கு கடினமோ அதைவிட பல மடங்கு கடினமான விஷயம் என்னவென்றால் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை தக்க வைத்துக் கொள்வதுதான். தனக்கு தக்க வைத்துக் கொள்வதோடு, தன் வாரிசுகளுக்கும் சேர்த்து வைப்பது என்பது அதைவிட மிகவும் கடினமான ஒன்றாக இருக்கின்றது. இவ்வாறு தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை தக்கவைத்து தங்கள் வாரிசுகளுக்கு சேர்த்து வைப்பதற்கு யாருக்கு தங்களுடைய சம்பாத்தியத்தில் ஒரு பங்கை கொடுக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

யாராவது பணத்தை இழந்து விட்டார்கள் என்றால் அவர்களுக்கு ஆறுதல் கூறுபவர்கள் இது நியாயமாக சம்பாதித்த பணம் இது எப்படியாவது மறுபடியும் உன்னிடம் வந்து சேர்ந்துவிடும் கவலைப்படாதே என்றுதான் கூறுவார்கள். யார் ஒருவர் நியாயமான வழியில் செயல்களை செய்து பணத்தை ஈட்டுகிறார்களோ அவர்களிடம் மகாலட்சுமி தாயார் என்றும் நிலைத்து இருப்பாள். பிறரை ஏமாற்றாமலும், வஞ்சிக்காமலும் நாம் சம்பாதிக்கும் ஒரு ரூபாயாக இருந்தாலும் அது நம்முடன் என்றுமே நிலைத்து இருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

- Advertisement -

தான் சம்பாதிக்கும் பணத்தையோ அல்லது சொத்தையோ தன் தலைமுறையினர் அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொகையை தெய்வத்திற்கு கொடுக்க வேண்டும். அதாவது ஆலயத்தில் செய்யக்கூடிய ஏதாவது ஒரு காரியத்திற்கு செலவிட வேண்டும். அன்னதானம் வழங்குவது, ஆலய திருப்பணிகளுக்கு உதவுவது, அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பது, மலர்களை வாங்கிக் கொடுப்பது போன்ற காரியங்களுக்கு செலவிடலாம்.

ஆலயத்திற்கு செலவிடும் அதே அளவு தொகையை ஏழை எளிய மக்களுக்கும் செலவு செய்ய வேண்டும். உண்ண உணவு, உடுத்த உடை என்ற அடிப்படைத் தேவைகள் கூட இல்லாதவர்களுக்கு அதை நாம் வாங்கிக் கொடுத்தால் அவர்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசிர்வாதம் செய்வதன் மூலம் நமக்கு என்றுமே பணவரவு என்பது வந்து கொண்டே இருக்கும். அதே போல் நம்முடைய சம்பாத்தியம் என்றுமே நம்மிடம் நிலைத்து இருக்கும்.

- Advertisement -

மாதா மாதம் இதை ஒரு கடமையாக நாம் தொடர்ந்து செய்து வர நமக்கு இருக்கக்கூடிய கர்ம வினைகள் அகழ்வதோடு மட்டுமல்லாமல், மகாலட்சுமி தாயார் நம்மிடம் நிலைத்து நிற்பாள். நாம் சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமல்லாது நம்முடைய தர்மமும் நம் தலைமுறையினரை பேணி காப்பாற்றும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய தோஷங்களும், தீய சக்திகளும் விலகி லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக கிடைக்க, இந்த ஒரு பொருளை வாரத்தில் ஒருமுறை தெளித்து பாருங்கள்.

தர்மம் தலைகாக்கும் என்று கூறுவார்கள். தலை என்றால் நம்முடைய தலையை அல்ல. நம்முடைய தலைமுறையை காக்கும். ஆதலால் நம்மால் இயன்ற அளவு பிறருக்கு தானமும், தர்மமும் செய்வதால் நாம் மட்டுமல்லாமல் நம்முடைய தலைமுறையும் சிறந்து விளங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -