உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய தோஷங்களும், தீய சக்திகளும் விலகி லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக கிடைக்க, இந்த ஒரு பொருளை வாரத்தில் ஒருமுறை தெளித்து பாருங்கள்.

negative energy lakshmi
- Advertisement -

நமக்கு லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்றால் நாம் வாழும் இல்லத்திலும் லட்சுமியின் பரிபூரண அருள் இருக்க வேண்டும். அவ்வாறு மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டும் என்றால் வீட்டில் என்றென்றைக்கும் நேர்மறையான ஆற்றல்கள் மட்டுமே இருக்க வேண்டும். அப்படி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கவும், எதிர்மறை ஆற்றல்கள் விலகவும், எந்த பொருளை வீட்டில் வாரத்தில் ஒருமுறை தெளிக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நம்மிடமும், நம் வீட்டிலும் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகுவதற்கும், நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கவும், பல பரிகாரங்களை நாம் மேற்கொள்வோம். நாமும் நம்முடைய எண்ணங்களில் நேர் மறையாகவும், நாம் பேசும் வார்த்தைகளில் கூட எதிர்மறை சொற்களை தவிர்த்து நேர்மறையான சொற்களை உபயோகித்தாலும் நமக்கு நல்ல பலன் கிட்டும். இருப்பினும் அதையும் மீறி சில நேரங்களில் எதிர்மறை ஆற்றல்களாக விளங்கக்கூடிய தீய சக்திகளும், தோஷங்களும், சாபங்களும் நம் வீட்டில் அதிகமாக இருக்கும் பொழுது நாம் அதற்குரிய பரிகாரங்களை முறையாக செய்ய வேண்டும்.

- Advertisement -

பரிகாரம் செய்ய வேண்டும் என்றதும் அதற்காக அதிக செலவு செய்ய வேண்டும் என்ற பயம் தேவையில்லை. நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து நாமே நம் வீட்டில் பரிகாரங்களை செய்யலாம். அவ்வாறு செய்வதால் வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகளும், தோஷங்களும், சாபங்களும் விலகி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்பது அனுபவபூர்வமாக கண்ட உண்மை.

பஞ்சகவ்யம் என்று சொன்னதும் நம் நினைவிற்கு வருவது பஞ்சகவ்ய விளக்கு. இந்த விளக்கில் நாம் தீபம் ஏற்றும் பொழுது நமக்கு மகாலட்சுமியின் கடாட்சம் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பஞ்சகவியத்தை கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதன் மூலம் நாம் எண்ணில் அடங்காத பலன்களை பெற முடியும். அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த பஞ்சகவ்யத்தை நம் வீட்டில் எப்படி உபயோகித்தால் தீய சக்திகள் அனைத்தும் விலகும் என்று பார்ப்போம்.

- Advertisement -

பஞ்சகவ்யம் என்றால் பசுவின் மூலம் வரக்கூடிய ஐந்து வகை பொருட்களை சேர்ப்பது தான். பசுவின் பால், தயிர், நெய், சாணம், கோமியம் இவை ஐந்தையும் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை தான் நாம் பஞ்ச கவ்வியம் என்று கூறுகிறோம். பொதுவாக பசுவை நாம் அனைத்து தெய்வங்களின் ஸ்வருவமாக காண்கிறோம். இன்றளவும் ஆலயங்களிலும், இல்லங்களிலும் நாம் கோபூஜை செய்வதை மேற்கொண்டு வருகிறோம்.

வாரத்தில் ஒரு முறையாவது வீட்டை சுத்தம் செய்யும் பழக்கம் நம் அனைவரிடமும் இருக்கிறது. பொதுவாக பலரும் திங்கள் மற்றும் வியாழக்கிழமையில் வீட்டை சுத்தம் செய்யும் வழக்கத்தில் இருப்பார்கள். அப்பொழுதுதான் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் வீட்டில் பூஜை செய்ய முடியும் என்று. அவ்வாறு வீட்டை சுத்தம் செய்த பிறகு செவ்வாய்க்கிழமையோ அல்லது வெள்ளிக்கிழமையோ இந்த பஞ்சகவ்யத்தை கரைத்து வீட்டின் உள்பகுதியில் இருந்து வெளிவாசல் வரை நன்றாக தெளிக்க வேண்டும். பிறகு சாம்பிராணி தூபம் போட்டு வீடு முழுவதும் காட்ட வேண்டும். வீட்டிற்குள் இருந்து நாம் இந்த பஞ்சகவ்யத்தை தெளித்து வருவதால் வீட்டிற்குள் இருக்கும் அனைத்து தீய சக்திகளையும் நாம் வெளியில் கொண்டு வந்து விரட்டி விடுகிறோம் என்று கருதப்படுகிறது. எதிர்மறை ஆற்றல்கள் வீட்டை விட்டு விலகிய பின் தூபம் போடுவதால் மகாலட்சுமி தாயார் வீட்டுக்குள் நுழைந்து விடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: நீங்கள் நினைத்த வேலை நினைத்தபடி கட்டாயம் கிடைக்கும். அதுவும் கை நிறைய சம்பளத்துடன். இன்டர்வியூக்கு போகும்போது இதை மட்டும் உங்கள் மேல் தடவிக் கொண்டு செல்லுங்கள்.

பல அற்புத பலன்களை தருவதோடு மட்டுமல்லாமல், மகாலட்சுமியின் பரிபூரண அருளையும் பெற்று தரக்கூடிய இந்த பஞ்சகவ்யத்தை நாமும் நம் இல்லங்களில் வாரத்தில் ஒரு முறையாவது தெளித்து அதற்குரிய பலனை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

- Advertisement -