சமோசா செய்வது எப்படி என்று பார்ப்போம்

samosa
- Advertisement -

சமோசா மாலை வேளையில் சாப்பிடப்படும் ஒரு ஸ்னாக்ஸ் வகை. அனைத்து டீ கடைகளிலும் சமோசா விற்கும். ஆனால், அதனை நீங்கள் வீட்டிலே செய்து சாப்பிடலாம். சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் ஒரு ஸ்னாக்ஸ் சமோசா. இந்த பதிவில் சமோசா எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

samosa_1

சமோசா செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

மைதாமாவு – 1 கப்
எண்ணெய் – தேவையான அளவு
வெங்காயம் – 1
உருளைக்கிழங்கு – 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
சீரகம் – 1/2 ஸ்பூன்
பச்சை பட்டாணி – கைப்பிடி அளவு
மிளகாய் தூள் – சிறிதளவு
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

சமோசா செய்முறை:

முதலில் சமோசாவிற்கான மசாலாவை தயார் செய்வது பற்றி பார்ப்போம். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் சீரகம், கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதில் மசாலாத்தூள்கள் மற்றும் இஞ்சிபூண்டு விழுது பூட்டு மீண்டும் வதக்க வேண்டும்.

- Advertisement -

samosa_2

பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கை அதில் பிசைந்து விட்டு கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது சமோசாவிற்கான மசாலா தயார். பிறகு மைதா மாவினை தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து எண்ணெய் தொட்டு முக்கோண வடிவில் உருட்டி தயார் செய்யவும்.

samosa_3

முக்கோண வடிவிலான மாவின் நடுவே சமோசா மசாலாவை வைத்து மடிக்கவேண்டும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் எண்ணையில் மடித்த சமோசாவை போட்டு எடுத்தால் சுவையான சமோசா தயார். இவ்வாறாக அனைத்து சமோசாவையும் எண்ணையில் போட்டு எடுக்கவும்.

- Advertisement -

சமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடம்
சமோசாவின் எண்ணிக்கை – 15

இதையும் படிக்கலாமே:
சன்னா மசாலா செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Samosa recipe in Tamil. It is also called as Samosa seimurai or Samosa seivathu eppadi in Tamil or Samosa preparation in Tamil.

- Advertisement -