பஞ்சாபி பேமஸ் பாக்கெட் சமோசாவை சாப்பிட்டு இருக்கீங்களா? அதே டேஸ்ட்டோட நம்மளும் செய்யணும்னா இந்த ஒரு சீக்ரெட் ஆன பொருளை மட்டும் சேர்த்து செஞ்சு குடுங்க. குட்டீஸ் எல்லாம் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.

pocket Samosa
- Advertisement -

இது வரை நீங்க சமோசாவை பேக்கரியில் தான் வாங்கி சாப்பிட்டிருப்பீங்க. ஒரு வேளை வீட்டில் செய்தாலும் வெங்காய சமோசா போன்ற சாதாரண சமோசாக்களை செய்திருப்போம். இந்த சமையல் குறிப்பு பதிவில் ரொம்பவே வித்தியாசமான பஞ்சாபி ஸ்டைலில் சூப்பரான பாக்கெட் சமோசாவை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த சமோசா செய்வதற்கு முதலில் ஒரு பவுல் 1 கப் மைதா மாவு, 1/2 டீஸ்பூன் ஓமம், 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து 2 டேபிள் ஸ்பூன் நெய் அல்லது பட்டர் சேர்த்த பிறகு லேசாக தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்திற்கு மாவை கெட்டியாக பிசைந்து மேலே எண்ணெய் தடவி அப்படியே வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து இந்த சமோசாவுக்கு ஒரு மசாலா பவுடர் தயார் செய்ய வேண்டும். அதற்கு இடி உரலில் 1 ஸ்பூன் தனியா, 1 ஸ்பூன் சோம்பு, 1 ஸ்பூன் சீரகம் மூன்றையும் சேர்த்து கொர கொரப்பாக இடித்துக் கொள்ளுங்கள். இதை இப்படி இடி உரல் இடுத்து மசாலாவில் சேர்க்கும் பொழுது சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

இப்போது சமோசாவில் உள்ளே வைக்கும் மசாலாவை தயார் செய்து விடுவோம். அதற்கு அடுப்பில் பேன் வைத்து காய்ந்தவுடன், 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் 1டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள்.

- Advertisement -

பஞ்சாபி சமையல்களில் அதிகமாக இந்த கருஞ்சீரகம் தான் சேர்ப்பார்கள். இது தான் அவர்களுக்கு சமையலின் முக்கியமான சீக்ரட்டான பொருள் இந்த கருஞ்சீரகம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி அவர்கள்இந்த கருஞ்சீரகம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி அவர்கள் இளமையுடன் இருக்க இதுவும் ஒரு காரணம்.

இத்துடன் 1 துண்டு இஞ்சி, 2பச்சை மிளகாய் இடி உரலில் லேசாக ஒன்றும் பாதியுமாக இடித்து அதையும் இந்த எண்ணெயில் சேர்த்து வதக்கிய பிறகு 10 உலர் திராட்சையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக 1 கேரட், 5 பீன்ஸ் , இரண்டையும் மிக பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து வதக்கி விடுங்கள்.

- Advertisement -

இத்துடன் 1/4 கப் பச்சை பட்டாணி 2 உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்து அதையும் சேர்த்த பிறகு, 1/2 ஸ்பூன் கரம் மசாலா, 1/4 ஸ்பூன் மஞ்சள், 1/2 ஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள், இடித்து வைத்த மசாலாவையும் இத்துடன் சேர்த்து நன்றாக கலந்த கொள்ளுங்கள். ஐந்து நிமித்தில் உருளைக் கிழங்குடன் இந்த காய்கறிகள் மசாலாக்கள் அனைத்தும் சேர்ந்து சமோசாவில் உள்ளே வைக்கும் மசாலா நமக்கு தயாராகி விடும்.

இப்போது சமோசா செய்து விடலாம். அதற்கு பிசைந்து வைத்த மாவில் இருந்து கொஞ்சம் பெரிய உருண்டையாக எடுத்துக் கொள்ளுங்கள் அதை சப்பாத்தி தேய்க்கும் கல்லில் வைத்து அந்த கல் அகலத்திற்கு பெரிதாக தேய்த்த பிறகு கத்தி வைத்து அதை நாலு துண்டுகளாக நறுக்கி விடுங்கள். ஒவ்வொரு துண்டிலும் இந்த மசாலாவை உருண்டையாக பிடித்து ஒரு உருண்டை வைத்து மாவின் நான்கு புறத்தில் மடித்து ஒன்றாக குவித்து விடுங்கள். இதே போல் மீதமிருக்கும் இருக்கும் மாவையும் மசாலாவையும் தயார் செய்து ஒரு தட்டில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கேரளா மாம்பழ புளிசேரி செய்முறை

அடுத்து அடுத்து பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அடுப்பை மிதமான தீக்கு மாற்றிய பிறகு நீங்கள் தயார் செய்து வைத்து சமோசாக்களை ஒவ்வொன்றாக போட்டு ஒரு புறம் நன்றாக சிவந்த பிறகு மறுபுறம் திருப்பிப் போட்டு எடுத்து விடுங்கள். சுவையான பஞ்சாபி பாக்கெட் சமோசா தயார்.

- Advertisement -