கண் கருவளையத்தால் அதிகம் சிரமப்படுகிறீர்களா? ஒரு ஸ்பூன் காபி தூள் இருந்தால் போதும் உங்கள் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை காணாமல் போக செய்துவிடலாம்.

dark circle removal tips tamil
- Advertisement -

நம் எல்லோருடைய வீட்டிலும் காலை, மாலை வேலைகளில் உற்சாகமாக இருப்பதற்கு பாலில் கலந்து பருக காபி தூள் வைத்திருப்போம். இந்த காப்பி தூள் என்பது வெறும் உணவு பயன்பாட்டிற்காக அல்லாமல் பெண்களின் சரும அழகை மெருகேற்றவும் பயன்படுத்தலாம் என்பது அதிகம் பேருக்கு தெரியாது. அந்த வகையில் காபித்தூள் பயன்படுத்தி செய்யக்கூடிய பெண்களுக்கான சில அழகு குறிப்புகள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

கருவளையம் மறைய டிப்ஸ்

தற்காலங்களில் பெண்கள் பலரும் இரவு நெடுநேரம் கண்விழித்து கணினி, கைபேசிகளை பயன்படுத்துவதால், அவர்களின் கண்களுக்கு கீழாக கருவளையம் ஏற்படுவது மற்றும் கண்களுக்கு கீழான சதைப்பகுதிகள் உப்பிபோன ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த கருவளையம் போக ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தை எடுத்து, அதில் மிதமான சூட்டில் இருக்கின்ற தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு புதிதாக அரைக்கப்பட்ட காபி தூளை சிறிதளவு எடுத்து, மிதமான சூட்டில் இருக்கின்ற அந்தத் தண்ணீரில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதன் பிறகு சிறிதளவு பஞ்சு எடுத்து அந்த காபித்தூள் கலந்த தண்ணீரில் நனைத்து, கண்களுக்கு கீழாக இருக்கின்ற கருவளைய பகுதிகள் மற்றும் உப்பிய கண் சதை பகுதிகளில் பஞ்சை சிறிது நேரம் வைத்து எடுக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் கண்களுக்கு கீழான கருவளையம் மற்றும் கண் சதை உப்பி போதல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

முகப்பருக்கள் நீங்க என்ன செய்ய வேண்டும்

பெண்களின் முக அழகை கெடுப்பதில் முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் முதன்மையான காரணங்களாக இருக்கின்றன. இத்தகைய முகப்பரு மற்றும் கரும்புள்ளி பிரச்சனைகள் தீர ஒரு கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் அளவிற்கு காபித்தூள், 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு, 3 டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன், 2 டீஸ்பூன் அளவிற்கு அலோவீரா எனப்படும் கற்றாழை ஜெல், 2 அல்லது 3 துளிகள் லாவண்டர் பூ எண்ணெய் ஆகிய பொருட்களையெல்லாம் ஒன்றாக சேர்த்து, நன்கு கலந்து, பேஸ்ட் பதத்தில் தயாரிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த பேஸ்பேக்கை பெண்கள் தங்களின் முகத்தில் நன்கு தடவிக் கொண்டு, சுமார் 15 நிமிடம் வரை அப்படியே இருக்க வேண்டும். பின்பு சாதாரண நீரில் முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை மேற்சொன்ன காபித்தூள் ஃபேஸ்பேக் பயன்படுத்தினால் பெண்களின் முகத்தில் இருக்கின்ற முகப்பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகு பெறும்.

வெயில் காலங்களில் வெளியில் செல்லும் பொழுது சூரிய ஒளியில் இருக்கின்ற புற ஊதாக்கதிர்களின் தாக்கம் பெண்களின் மிருதுவான சருமத்தை பாதிக்கின்றது. இத்தகைய பாதிப்புகளை தடுக்க ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு காபி தூள் போட்டு, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்து, நன்கு கலந்து பெண்களின் உடலில் சூரிய ஒளி படும் இடங்களான முகம், கழுத்து, கைப்பகுதிகளில் நன்கு பூசி, மசாஜ் செய்து சுமார் 15 நிமிடம் வரை அப்படியே விட்டு விட வேண்டும்.

பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு முகம், கழுத்து, கைகளை கழுவ வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வருவதால் வெயிலில் சென்று வந்தாலும் பெண்களின் சருமம் மிருதுவாகவும், அழகாகவும் இருக்கும்.

- Advertisement -