இன்று மாலை பிள்ளையாருக்கு என்ன அர்ச்சனை செய்தால் என்ன பலன் தெரியுமா ?

Pillayar

சங்கடத்தை தீர்க்கவல்ல நாளையே நாம் சங்கடஹர சதுர்த்தி என்று குறிப்பிடுகிறோம். இந்த நன்னாளில் பிள்ளையாருக்கு விரதம் இருந்து பலர் வழிபடுவது வழக்கம். அதோடு சங்கடஹர சதுர்த்தி நாளில் மாலை வேலையில் பிள்ளையார் கோயிலிற்கு சென்று அர்ச்சனை செய்வது சிறப்பு. அப்படி அர்ச்சனை செய்கையில் நமது வேண்டுதல் அனைத்தும் முழுமையாக நிறைவேற சில இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யலாம். அந்த வகையில் சங்கடஹர சதுர்த்தி அன்று எந்த இலையில் அர்ச்சனை செய்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.

Pillayar

1) மாவிலை
நமது பக்கம் நியாயம் இருந்தும் தேவை இல்லாத வம்பு வழக்குகளில் சிக்கிக்கொண்டிருந்தால் மாவிலை கொண்டு அர்ச்சனை செய்யலாம். இதன் மூலம் நமக்கான நியாயம் கிடைக்கும்.

2) வில்வம் இலை
நமது குடும்பத்திலும் வாழ்விலும் இன்பம் என்றும் நிலைத்திருக்க வில்வ இலையை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

3) ஊமத்தை
மனிதர்களாக பிறந்தவர்களுக்கு சில தீய குணங்கள் இருப்பது வழக்கம். அந்த வகையில் நம்முள் இருக்கும் பொறாமையை பொசுக்க ஊமத்தை இலை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

4) இலந்தை
பிள்ளைகள் அறிவில் மேலோங்கி இருக்க, கல்வியில் சிறந்து விளங்க இலந்தை இலை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

- Advertisement -

5 ) நாயுருவி
நமது தோற்றமானது அடுத்தவரை ஈர்க்கும் வண்ணம் இருக்க, முகத்தில் வசீகரம் பெறுக நாயுருவி இலை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

parvathamalai pillayar

6) கரிசலாங்கண்ணி

இல்வாழ்க்கை இனிமையாக இருக்க கரிசலாங்கண்ணி இலை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

7) அரசு
பதவி உயர்வு கிடைக்க, சமுதாயத்தில் மதிப்பு கூட அரச இலையை இலை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

8) கண்டங்கத்தரி
மனதில் தைரியம் பெறுக, வீரம் உண்டாக கண்டங்கத்தரி இலை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

9) தவனம்
நீண்டகால திருமண தடை நீங்கி சிறந்த ஒரு வாழ்க்கை துணை அமைய தவனம் இலை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

10) அரளி
வாழ்க்கை என்னும் இந்த போராட்டத்தில் வெற்றிபெற அரளி இலை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

Pillayar

11) நெல்லி
வருமானம் பெருகி செல்வ செழிப்போடு வாழ நெல்லி இலை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

12) மரிக்கொழுந்து
இல்லற சுகம் பெற மரிக்கொழுந்து இலை கொண்டு அர்ச்சனை

13) மருதம்
நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெற மருதம் இலை கொண்டு அர்ச்சனை

14) ஜாதி மல்லி
சொந்தமாக மனை வாங்குதல், சொந்த வீடு கட்டுதல் போன்ற வேண்டுதல்கள் நிறைவேற ஜாதி மல்லி இலை கொண்டு அர்ச்சனை

15) அகத்திக்கீரை
கடன் தொல்லையில் இருந்து முழுமையாக விடுபட அகத்திக்கீரையை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

16) துளசி
ஞானம் பெறுக, தன்னம்பிக்கை வளர, அறிவில் சிறந்து விளங்க துளசி இலை கொண்டு அர்ச்சனை

17) அருகம்புல்
அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாக அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

18) எருக்கு
கர்ப்பிணி பெண்களின் கருவில் இருக்கும் சிசுவிற்கு எந்த வித தீங்கும் நேராமல் இருக்க, வம்சம் விருத்தி அடைய எருக்கம் இலை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

19) மாதுளை
என்றும் பேரும் புகழோடும் வாழ மாதுளை இலை கொண்டு அர்ச்சனை

20) தேவதாரு
அனைத்தையும் தாங்கும் பலமான இதயம் பெற தேவதாரு இலை கொண்டு அர்ச்சனை

21) வன்னி
வாழும் காலத்திலும், வாழ்ந்த பிறகும் எல்லாவிதமான நன்மைகளையும் பெற வன்னி இலை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:
சங்கடஹர சதுர்த்தி பிள்ளையார் மந்திரம்

English Overview:
Sangadahara sathurthi is a best day to worship Lord Pillayar. In this auspicious day if do do pooja for Lord Pillayar we will get large benefits by his grace.