துன்பங்களை விரட்டி அடிக்கும் சங்கடஹர சதுர்த்தி மந்திரம்

vinayagar-3

சிவபெருமானுக்கு எப்படி பிரதோஷ வழிபாடு விஷேஷமோ அதே போல விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிகவும் விஷேஷம் ஆகும். சங்கடஹர சதுர்த்தி அன்று முறையாக விரதம் இருந்து பிள்ளையாரை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்கும், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். அதோடு நம் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். சங்கடம் என்றால் கஷ்டம் என்று பொருள் ஹர என்றால் அழிப்பது என்று பொருள். விரதம் இருந்து சங்கடங்களை அழிப்பதற்கான நாளையே சங்கடரஹர சதுர்த்தி என்கிறோம். சங்கடஹர சதுர்த்தி நாளில் கீழே உள்ள பிள்ளையார் மந்திரம் அதை ஜபிப்பதால் நமது கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.

parvathamalai pillayar

சங்கடஹர சதுர்த்தி மந்திரம்:
ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய
மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது
அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா

பொது பொருள்:

பக்தர்கள் வேண்டிய வரத்தை நல்கும் சங்கடஹர கணபதியே தங்களை நமஸ்கரிக்கிறேன். முழு முதற் கடவுளாகவும், பூத கணங்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருப்பவரே. பக்தர்களை துன்பத்தில் இருந்து காத்து இன்பம் அளிப்பவரே. பக்தர்கர்களோடு எப்போதும் நிலைகொள்பவரே. பக்தர்கள் தொடங்கும் எந்த ஒரு செயலையும் வெற்றிகொள்ள செய்பவரே. பக்தர்களை சுற்றியுள்ள எதிர்மறையானவற்றை விலக்கி நன்மைகளைத் தரும் நேர்மறை ஆற்றலை பெறுக செய்பவரே உங்களை மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.

சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக காரியம் சித்தி அடையும், திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும். இப்படி எனிலடங்கள் பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
அகத்தியர் அருளிய சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்

English overview:
On Sangadahara sathurthi day if one chant Pillayar mantra then he will get blessings form Lord Pillayar. This Sangadahara sathurthi manthiram will make come out from loan problem.