ஆற்றின் நடுவே அந்த காலத்தில் மண்டபங்கள் கட்டியது ஏன்? உலகையே அசரவைக்கும் தமிழனின் அறிவியல்

mandabam

இன்றைய காலகட்டத்தில் நவீன அறிவியலின் துணை கொண்டு, வரப்போகும் சுனாமியை கூட முன்கூட்டியே கண்டுபிடித்துவிடுகிறோம். ஆனால் அன்றைய காலத்தில் நமது முன்னோர்கள் இதை எப்படி கையாண்டார்கள். மாதம் மும்மாரி பொழிந்த அந்த காலத்தில் ஆற்றில் நீர் பெருக்கும் நிச்சயம் அதைக்கமாகவே இருந்திருக்கும். ஆனால் அந்த நீர் வெள்ளத்தில் மக்கள் யாரும் சிக்காமல் இருக்க அன்றே ஒரு கண்டுபிடிப்பை உண்டாக்கினான் தமிழன். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

Mandabam

ஆற்றில் வெள்ளநீர் அதிகம் ஆனால் அதை உடனே மக்களுக்கு சங்கு மூலம் அறிவிக்க கூடிய ஒரு மண்டபத்தை ஆற்றின் நடுவில் கட்டிவைத்தான் தமிழன். அந்த மண்டபத்தின் பெயர் சங்கு கல் மண்டபம். அந்த மண்டபமானது மூன்று பக்கமும் திறந்தவெளியுடனும் வெள்ளநீர் வரும் பக்கம் மட்டும் மூடியும் இருக்கும்.

அந்த மண்டபத்தின் உச்சில் சங்கு போன்ற அமைப்பு உருவாக்கப் பட்டிருந்தது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் நீர் மட்டம் உயந்தால், காற்று உந்தப்பட்டு மண்டபத்தின் சங்கு மிக சத்தமாக ஒலிக்கத்துவங்கும்.

mandabam

சங்கு ஒலி கேட்டதும் மக்கள் சுதாரித்துக்கொண்டு உடனே ஊரை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லத்துவங்குவார்கள். வெள்ளம் அதிகம் ஆக ஆக சங்கின் ஒலியும் அதிகம் ஆகும். ஒரு கட்டத்தில் மண்டபம் முழுவதும் நீரில் மூழ்கி சந்தம் அடியோடு நின்றுவிடும்.

- Advertisement -

பிறகு வெள்ளம் குறைய குறைய மீண்டும் சங்கின் ஒலி கேட்ட துவங்கும். இப்படியாக சங்கு கல் மண்டபத்தின் துணைகொண்டு ஆதி தமிழன் வெள்ள அபாயத்தை உணர்ந்தான். இன்றளவும் தாமிர பரணி ஆற்றின் நடுவில் இது போன்ற சங்கு கல் மண்டபம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Mandabam

இது போன்ற மணடபங்கள் அந்த காலத்தில் பல்வேறு ஆற்றின் நடுவிலும் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த மண்டபத்தின் பயன் என்ன என்பதை உணராமல் நாமே அந்த மண்டபத்தின் அழிவிற்கு காரணமாகிவிட்டோம். இனியாவது விழித்துக்கொண்டு இது போன்ற மண்டபங்கள் தென்பட்டால் அதை மீண்டும் புதுப்பித்து பழைய நிலமைக்கு கொண்டுவர முயற்சிப்போம்.

இது குறித்த ஒரு வீடியோ பதிவு இதோ: