ஆன்மீக ரீதியாக, ஜோதிட ரீதியாக, நவகிரகங்களின் ஆதரவில் தான் நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது நடக்கிறது. இந்த நவகிரகங்களில் முதல் முக்கிய கிரகமாக சொல்லப்படுவது சனி பகவான். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது நடப்பதற்கு, இவரும் ஒரு காரணமாக திகழ்கின்றார். சனி பகவான் என்ற வார்த்தையை சொன்னாலே நம்முடைய மனதில் ஒரு பயம் வந்துவிடும்.
ஏழரை சனி என்ற வார்த்தையை சொன்னாலே நம்முடைய மனதில் ஒரு பயம் வந்துவிடும். இப்பேற்பட்ட கிரகமான சனி பகவானை நாம் வசியம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், என்ன செய்வது. சனிபகவான் நமக்கு நல்லதை மட்டுமே செய்ய வேண்டும்.
கெட்ட காலத்தில் கூட சனி பகவானால் நமக்கு துன்பம் தந்து விடக்கூடாது என்றால், நம் வீட்டு பூஜை அறையில் எந்த ஒரு பொருளை வைத்து தினம் தினம் அந்த பொருளை பார்த்து வணங்க வேண்டும் தெரியுமா உங்களுக்கு. இதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவலை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
சனி பகவானுக்கு இருக்கக்கூடிய இன்னொரு பெயர் என்ன தெரியுமா. “தர்ப்பாரண்யேஸ்வரர்” தர்ப்பையில் இருந்து இவர் அவதரித்ததால் இவருக்கு தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் சொல்கிறது. அப்போது அந்த தர்ப்பை எந்த அளவுக்கு புனிதமானது என்பதை நீங்கள் சிந்தித்துக் கொள்ளுங்கள். தர்ப்பையைத்தான் நம் வீட்டு பூஜை அறையில் வைத்து சனிபகவானாக பாவித்து வணங்க வேண்டும்.
இரண்டு அல்லது மூன்று தர்பை குச்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டு அல்லது மூன்று பாகங்களாக மடித்துக் கொள்ளலாம். ஒரு மஞ்சள் நிற நூலை வைத்து அந்த தர்ப்பை புல்லில் சுற்றிக் கொள்ளுங்கள். நேராக நிற்க வைத்த படி தர்ப்பை புல் இருக்க வேண்டும். அதை நூலால் சுற்றி அப்படியே பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இவ்வளவுதான்.
தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யும்போது, அந்த தர்ப்பை புல்லையும் இரண்டு கைகளால் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும். சனி பகவானை வணங்குவது போல நினைத்து தர்பையை வணங்கிக் கொள்ளுங்கள். சனிபகவானை யாரும் வீட்டில் வைத்து வழிபட மாட்டார்கள். மாறாக இந்த தர்ப்பை புல்லை சனி பகவானாக பாவித்து வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்நாளில் சனி பகவானால் எந்த ஒரு பிரச்சனையும் வராது என்பதுதான் நம்பிக்கை.
வருடத்திற்கு ஒருமுறை பழைய தர்ப்பை புல்லை எடுத்து, கால் படாத இடத்தில் போட்டு விடலாம். ஓடும் தண்ணீர் இருந்தால் அந்த தண்ணீரில் இந்த தர்ப்பையை விட்டுவிடலாம். மீண்டும் புதிய தர்ப்பைக்கு நூல் சுற்றி பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய துவங்கலாம். முடிந்தால் வருடத்திற்கு ஒருமுறை திருநள்ளாறு சென்று அங்கு இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபடுவது அதி சிறப்பான பலனை கொடுக்கும். கட்டாயம் கிடையாது. வாய்ப்பு இருந்தால் வருடத்திற்கு ஒருமுறை சென்று சனிபகவானை திருநள்ளாரில் வழிபாடு செய்து கொள்ளுங்கள்.
கெட்ட சக்திகள் அண்டாமல் இருக்க தர்ப்பை புல் பரிகாரம்
இந்த தர்ப்பை புல்லுக்கு எதிர்மறை ஆற்றலை நம்மிடம் நெருங்க விடாமல் தடுக்கும் சக்தியும் இருக்கிறது. தர்ப்பை புல்லை நெய் விளக்கில் பொசுக்கி விட வேண்டும். அதிலிருந்து சாம்பல் கிடைக்கும். அதில் கொஞ்சமாக நெய்விட்டு கலந்து ஒரு மை போல தயார் செய்து ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் இந்த மையை நெற்றியில் வைத்துக் கொண்டால் நம்மை யாரும் தவறாக பயன்படுத்திக் கொள்ள முடியாது. கெட்ட எண்ணத்தோடு நம்மை பார்த்தால், கண் திருஷ்டி நம்மேல் விழாது. நம்மை யாரேனும் வசியம் செய்ய நினைத்தாலும் அது முடியாது. நமக்கு நாமே ஒரு பாதுகாப்பு வட்டத்தை போட்டுக் கொண்டதற்கு சமம்.
இதையும் படிக்கலாமே: தேய்பிறை அஷ்டமி ராகுகால வழிபாடு
இந்த தர்ப்பைப்புல் திலகம் தர்ப்பை புல்லுக்கு அதீத மகத்துவம் உண்டு. சரியான முறையில் மேல் சொன்ன விஷயங்களை நம்பிக்கையோடு பின்பற்றும் பட்சத்தில் நிச்சயமாக உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்ற தகவலுடன் அந்த ஈசனை பிரார்த்தனை செய்துகொண்டு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.