சனி பகவானுக்கு அவரது மனைவி அன்று கொடுத்த சாபம் தான் நம்மையும் தொடர்கின்றதா? என்ன கதை இது? சனி பகவானை ஏன் நேராக பார்க்கக்கூடாது?

sani-el-deepam
- Advertisement -

நவகிரகங்களில் உக்கிர கிரகமாக இருக்கிறார் சனி பகவான்! சனி பகவான் மிகுந்த நேர்மையானவர். இவரிடம் நாம் கற்க வேண்டிய பாடங்கள் எவ்வளவோ இருக்கின்றது. நீதி தவறாத சனி பகவானுக்கு அவரது மனைவி கொடுத்த சாபம் என்ன? அதனால் தான் இன்றளவிலும் சனியை பார்த்தால் நமக்கு தோஷங்கள் ஏற்படுகிறதா? என்பது போன்ற ஆன்மீக குறிப்பு ரகசியங்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

சனி பகவானுக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. முதல் மனைவி நீலா என்கிற நீலிமா என்றும் கூறப்படுகிறது. இரண்டாவதாக அழகில் சிறந்த தாமினி என்பவரும் ஆவார். சனி பகவான் தீவிரமான சிவபக்தராக இருப்பவர். இவருடைய பக்திக்கு இணங்கி சிவன் இவருக்கு பல வரங்கள் அளித்துள்ளார். அதில் நவகிரகங்களில் இடம் பிடித்ததும் ஒன்று! அது மட்டும் அல்லாமல் உலக உயிர்கள் செய்யும் நல்லவை மற்றும் கெட்டவைக்கு ஏற்ப அவர்களுக்கு நல்லதும், கெடுதலையும் ஏற்படுத்தும் பொறுப்பும் இவருக்கு உண்டு.

- Advertisement -

நம் ஜாதகத்தில் சனிப்பெயர்ச்சி வந்தாலே பயப்படுகின்றோம் ஆனால் உண்மையில் சனி பகவானுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை! தவறு செய்பவர்கள் தான் சனி பகவானை பார்த்து பயப்பட வேண்டும். நீதியுடனும், நேர்மையுடனும், நல்ல குணங்களுடனும் இருப்பவர்களுக்கு சனி பெயர்ச்சி என்பது மிகப்பெரிய அதிர்ஷ்ட பெயர்சியாகவே அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஒருவர் நல்லதையே செய்து சிறு சிறு தவறுகளை மட்டும் செய்திருந்தால் அவருக்கும் சனி பகவான் பலவிதமான கெடுதல்களை, சங்கடங்களை கொடுப்பார் ஆனால் இறுதியில் அவருக்கான அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் வாரி வழங்கி விட்டு தான் அவரை விட்டு நீங்குவார்.

- Advertisement -

ஒருமுறை சிவன் மீது இருந்த அளப்பரிய பக்தியின் காரணமாக கடும் தவம் புரிந்து கொண்டிருந்தார் சனி பகவான். அந்த சமயத்தில் அவரது இரண்டாம் மனைவியான தாமினிக்கு குழந்தை ஏக்கம் வரவே சனி பகவானை தியானத்தில் இருந்து எழுப்பி இருக்கிறார் ஆனால் சனி பகவானால் தன்னுடைய தியானத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை. இதனால் கோபமுற்ற தாமினி நான் விரும்பும் சமயத்தில் நீங்கள் என்னை பார்க்காததால் இனி தங்களை நேருக்கு நேர் பார்ப்பவர்கள் யாராயினும் அவர்கள் செய்த பாவங்களுக்கு ஏற்ப கெடு பலன்கள் உண்டாகும் என்று சாபமிட்டார்.

அதன் பிறகு தியான நிலையில் இருந்து கண் கலங்கியபடி சனி பகவான் விழித்த பொழுது தாமினி தான் கொடுத்த சாபத்தை நினைத்து மிகவும் மனம் வருந்தினார் ஆனால் கொடுத்த சாபத்தை திரும்பப்பெறும் சக்தி அவருக்கு இல்லை எனவே இன்றளவிலும் நேருக்கு நேர் சனி பகவானை பார்ப்பவர்களுக்கு பாவத்திற்கு ஏற்ப கெடு பலன்கள் உடனடியாக கிடைக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. அதனால் தான் சனி பகவானை நாம் நேராக நின்று வணங்க கூடாது, ஒரு பக்கமாக நின்று வணங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால், நிச்சயமாக அந்த தங்கம் உங்களோடு நிரந்தரமாக இருக்காது. ஆசை ஆசையாக வாங்கிய தங்கம், உங்கள் கையை விட்டு போக நீங்கள் செய்யும் இந்த தவறும் ஒரு காரணம் தான்.

அது போல அவருடைய கண்களை பார்த்து வணங்க கூடாது, தலையை குனிந்து தான் வணங்க வேண்டும் என்கிற முறை இருந்து வருகிறது. சனி சஞ்சாரம் செய்யும் இடத்தை விட அவர் பார்வை படும் இடத்திற்கு தான் கெடு பலன்களும் வந்து சேருகிறது. எனவே சனி பகவானை வழிபடுபவர்கள் அவருடைய மனைவிகளையும் சேர்த்து வழிபட்டால் சனி உடைய உக்கிரம் குறைந்து கெடு பலன்களும் குறையும் என்பது பரிகாரமாக இருக்கிறது.

- Advertisement -