சனி பகவானை இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு, ஒரு போதும் அவர் துன்பத்தையே தரமாட்டார். சனிபகவானின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற, இத மட்டும் செஞ்சாலே போதும்.

sani-bagavan1
- Advertisement -

உங்களுடைய ஜாதக கட்டத்தில் சனி பகவானால் ஏதேனும் தோஷங்கள் இருந்தால், அதன் மூலம் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும். குறிப்பாக சனிபகவான் ஜாதக கட்டத்தில் சரியாக இருந்தால்தான், அவர் செய்யும் தொழிலில், வேலையில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் லாபம் கொடுப்பவரும் அவரே, சந்தோஷத்தை அள்ளி கொடுப்பவரும் அவரை, கலங்கும் அளவிற்கு கஷ்டத்தை கொடுப்பதும் அவரை. ‘கலங்கவைக்கும் கஷ்டம் ஏன் வருகிறது? நாம் நன்றாக இருக்கும் போது செய்யக்கூடிய தவறுகளுக்கான தண்டனையை தான் கஷ்டம் வரும்போது நாம் அனுபவிக்கின்றோம்.’ இப்படியாக நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் சனி பகவானை நினைத்து நம்மில் நிறைய பேர் பயந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

Sani Bagavan

ஆனால் எவரொருவர் சனிபகவானை பார்த்து பயப்படாமல், உண்மையான பக்தியோடு வழிபாடு செய்து வருகிறார்களோ, அவர்களுக்குத் துன்பம் கிடையாது. இதேபோல் கஷ்டம் வரும் சமயத்தில், அந்த கஷ்டத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள பொய் சொல்லி, நேர்மை இல்லாமல் தப்பித்துக் கொள்ள முயற்சி செய்யக் கூடாது. கஷ்டம் வந்தாலும் நேர்மையாக இருந்து, உண்மையைப் பேசி அந்த இடத்தில் சிக்கிக் கொண்டாலும் சரி, நேர்மை இல்லாமல் ஒருபோதும் நீங்கள் நடந்து கொள்ளவே கூடாது.

- Advertisement -

நேர்மையாக இருப்பவரை சனி பகவான் எப்போதும் சோதித்துப் பார்ப்பார். தவிர என்றைக்கும் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையோடு பரிகாரத்தை பார்க்கலாம். சனிக்கிழமை காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டில் மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி வைத்துவிட்டு, சனி பகவானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

dheepam

ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீரை நிரப்பி விட்டு அதில், அருகம்புல்லை பொடியாக நறுக்கிப் போட்டுக் கொள்ளுங்கள். இரண்டு மிளகினை தட்டி அந்த தண்ணீருக்குள் போட்டு கொள்ளுங்கள். இந்த தீர்த்தம் அப்படியே இருக்கட்டும். கருநீல நிறத்தில் ஒரு சதுர வடிவில் இருக்கும் துணியில் உங்களால் முடிந்த, உங்கள் வசதிக்கு தகுந்தவாறு காணிக்கையை முடிச்சுப் போட்டு வையுங்கள். கருப்பு நிற குடை, கருப்பு நிற செருப்பு இந்த இரண்டையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எல்லாவற்றையும் புதியதாக தான் வாங்க வேண்டும். பழைய பொருட்களை பயன்படுத்தக் கூடாது. இப்போது ஒரு தாம்பாளத் தட்டில் முடிந்து வைத்திருக்கும் காணிக்கை, கருப்பு நிற செருப்பு, கருப்பு நிற குடை, இவைகளை வைத்து விடவேண்டும். உங்களுக்கு இஷ்ட தெய்வமாக விநாயகர் இருந்தாலும் சரி, ஹனுமன் ஆக இருந்தாலும் சரி, காலபைரவர் இருந்தாலும் சரி, இவர்கள் மூவரில் யாரை வேண்டும் என்றாலும் நினைத்துக் கொள்ளுங்கள். இரண்டு கைகளையும் ஏந்தி சனிபகவானினே ‘உன்னால் எனக்கு வரக்கூடிய துயரங்களை சமாளிக்கும் தெம்பை, நீதான் கொடுக்க வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

poojai

இறுதியாக தீப தூப ஆராதனை காட்டி உங்கள் பூஜையை நிறைவு செய்துகொண்டு, டம்ளரில் அறுகம்புல் மிளகு சேர்த்த தீர்த்தத்தை நீங்கள் குடித்துவிட வேண்டும். அதன் பின்பு தாம்புல தட்டில் வைத்திருக்கும் பொருட்களை ஊனமுற்ற, வசதியில்லாத எளியவருக்கு தானமாக கொடுக்க வேண்டும். இந்த பூஜையை முடித்து விட்டு, தானம் கொடுத்துவிட்டு கட்டாயம் விநாயகர் அல்லது அனுமன் அல்லது காலபைரவரை சென்று தரிசனம் செய்து விட்டு வர வேண்டும்.

- Advertisement -

sani-bagavaan

இப்படியாக முதல் நாள் பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அடுத்து தொடர்ந்து வரும் நாட்களில் நவகிரக சந்நிதியில் இருக்கும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். இதோடு சேர்த்து அனுமன் காலபைரவர் விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு சனிபகவானால் வரக்கூடிய பிரச்சனைகளின் மூலம் அதிகப்படியான பாதிப்புகள் இருக்காது என்ற கருத்தை நம்பிக்கையோடு சொல்லி இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
காலபைரவருடைய இந்த 1 பொருள் வீட்டில் இப்படி ஒரே ஒரு நாள் செய்தால் போதும்! கெட்டதெல்லாம் விலகி நல்லதே நடக்கும் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! கணவன் மனைவி பிரச்சனைகளும் நொடியில் தீரும் அற்புதம் நடக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -