அஷ்டமத்து சனி, ஜென்ம சனி, கண்ட சனி, ஏழரை சனி பரிகாரம் மந்திரம்

sani-bagavan-1
- Advertisement -

ஜோதிட சாத்திரத்தில் ஓரு மனிதனுக்கு அளவு கடந்த நன்மைகளையும், அளவு கடந்த கெடுதல்களையும் ஏற்படுத்தக்கூடிய சக்தி “சனிபகவானுக்கு” உண்டு என கூறப்பட்டுள்ளது. “ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம சனி” ஆகிய காலங்களில் ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அவனுக்கு மட்டுமே தெரியும். சனிபகவான் சற்று கெடுதலான பலனைக் கொடுக்கும் இத்தகைய காலங்களில், அவரின் கடுமை தன்மையைக் குறைக்க கூற வேண்டிய மந்திரம் தான் இது.

sani bagavaan

மந்திரம்:
நீலாஞ்சன ஸமாபாசம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் |
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்ரம் ||

- Advertisement -

பொதுவான பொருள்:
“நீல நிற மலையைப் போல் தோற்றம் கொண்ட சனி பகவானே, சூரியனின் புத்திரனும் எமதர்மனின் சகோதரனுமானவனே, “சாயா” “மார்த்தாண்ட” என்கிற சூரியபகவானின் மைந்தனே, மிக மெதுவாக சுழல்பவனே, உனக்கு என் பணிவான வணக்கங்கள்” என்பது இம்மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.

இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் சனி நீராடிய பிறகு, அருகிலுள்ள கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கும் அந்த கோவிலின் ஸ்தல விருட்சமாக இருக்கும் மரத்திற்கும் கருப்பு எள் கலந்த நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி, இம்மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட வேண்டும். மேலும் அன்றைய தினம் காக்கைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். இதனால் சனி பகவான் மனம் குளிர்ந்து உங்களுக்கு அவரின் தசை காலங்களில் ஏற்படும் கஷ்டங்களின் கடுமை தன்மையை குறைப்பார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
மரண பயம் மந்திரம் பற்றி தெரியுமா ?

English Over view:
Here we have mantra for Elarai sani pariharam, Janma sani pariharam, ashtama sani pariharam, kanda sani pariharam in Tamil.

- Advertisement -