மரண பயம் நீக்கும் எமதர்மன் மந்திரம் பற்றி தெரியுமா ?

yaman-dharmaraj-mantra

எந்த ஓரு உயிருக்கும் பிறப்பு என்பது எப்படி இயற்கையானதோ அதுபோலவே இறப்பும். ஆனால் மரணத்தை நினைத்து மனிதன் பயப்படுவதைபோல் வேறு எந்த விலங்கும் பயப்படுவதில்லை. இளமையின் குதூகளிப்பில் வாழ்வை பலவிதத்தில் அனுபவித்த எவருமே, நடுத்தர வயதை எட்டியவுடன் சிறிது உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்த அவர்களுக்கு மரணம் குறித்த அச்சம் ஏற்பட தொடங்கி விடுகிறது. இதன் பின்பு தங்கள் வாழ்வின் இறுதி வரை மரணத்தை குறித்த கவலையுடனும், பயத்துடனுமே பயணிக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு மரணத்தை குறித்த வீண் பயங்களை போக்கும் மந்திரம் தான் இந்த எமன் காயத்ரி மந்திரம்.

Eman kovil

எமன் காயத்ரி மந்திரம் :
“ஓம் சூரிய புத்ராய வித்மஹே
மகா காலாய தீமஹி
தந்நோ யம ப்ரசோதயாத்”

பொதுவான பொருள் :
“சூரிய பகவானின் புத்திரரும், காலத்தின் அம்சமான எம தர்மரின் அருள் எனக்கு கிடைக்க, அவர் பாதம் பணிகிறேன்” என்பது இம்மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.

இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன், தெற்கு திசை நோக்கி நின்று யமதர்மராஜனை மனதில் நினைத்து 9 முறை கூறவும். மேலும் அதே சனிக்கிழமையில் சிவன் கோவிலுக்கு சென்று, நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சனிபகவானின் சகோதரனான யமதர்மனுக்குரிய இம்மந்திரத்தை கூறி வழிபட, இந்த இரு தேவர்களின் அருளால் உங்களுக்கு ஆயுள் விருத்தியாகும். மரணத்தை குறித்த தேவையற்ற பயங்கள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
வேண்டிய வரம் தரும் வராஹி காயத்ரி மந்திரம்

English Overview:
Here we have Yama dharmaraja gayatri mantra in Tamil. By chanting this mantra one can get away from death fear.