உங்கள் ராசிக்கு எந்த வீட்டில் சனி அமர்ந்தால் என்ன பலன் தெரியுமா ?

Sani bagavaan veedu

சனி பகவான் ஒரு ராசிக்கு எந்த இடத்தில் அமர்கிறாரோ அதை கொண்டே அவர் என்ன பலன்களை அளிக்கப்போகிறார் என்பதை நம்மால் அறிய முடியும். அந்த வகையில் சனிபகவான் எந்த வீட்டில் அமர்ந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். இந்த பலங்களை வைத்து இனி வரும் காலங்களில் நீங்களே உங்கள் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்களை அறிந்துகொள்ள முடியும். கடந்த டிசம்பர் மாதம் நடந்த சனி பெயர்ச்சி யின் போது எந்த ராசிக்கு எந்த வீட்டில் சனி இருக்கிறார் என்பதையும் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளோம்.

1-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை தனுசு ராசிக்கு 1-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)

one

சனி பகவான் 1-ம் வீட்டில் இருந்தால் அதையே ஜென்ம சனி என்று குறிப்பிடுகிறோம். ஜென்ம சனி உள்ள ஒருவருக்கு பொதுவாக தேவையற்ற செலவுகள் , உடல் உபாதைகள் வரக்கூடும். தேவை அற்ற பயணங்களை மேற்கொள்ள நேரிடும். அதே சமயம் எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். மன நிம்மதி பெருகும்.

2-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை விருச்சிக ராசிக்கு 2-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)

two

- Advertisement -

சனி பகவான் 2-ம் வீட்டில் இருந்தால் அதையே பாத சனி என்று குறிப்பிடுகிறோம். இதனால் குடும்பத்தில் தேவை இல்லாத வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. அதே சமயம் பொருளாதார ரீதியாக சில தொல்லைகள் வரும். சொத்துக்களில் வீண் சிக்கல் வரும். அரசாங்க காரியங்களில் சில தடைகள் ஏற்படும். ஆனலும் இந்த காலகட்டத்தில் தெளிவான சிந்தனை இருக்கும், அனைவரும் மதிக்கும் நிலை உண்டாகும்.

3-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை துலாம் ராசிக்கு 3-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)

three

சனி பகவான் 3-ம் வீட்டில் இருந்தால் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். இழந்த செல்வங்கள் அனைத்தும் திரும்ப பெரும் நிலை உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கை கூடி வரும்.

4-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை கன்னி ராசிக்கு 4-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)

four

சனி பகவான் 4-ம் வீட்டில் இருந்தால் அதையே நாம் அர்த்தாஷ்டமச் சனி என்கிறோம். இந்த காலகட்டத்தில் தேவை இல்லாத செலவுகள் உண்டாகும். தாயின் உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு விலகும், தாய் வழியில் வரக்கூடிய சொத்துக்களில் சில சிக்கல்கள் ஏற்படும். வழக்குகளில் சில சிக்கல்கள் உண்டாகும். ஆனாலும் எதையும் சமாளித்து வெற்றிகாணும் மனப்பக்குவம் இந்த காலகட்டத்தில் வளரும்.

5-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை சிம்ம ராசிக்கு 5-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)

five

சனி பகவான் 5-ம் வீட்டில் இருந்தால் உறவினர்களுடன் தேவை இல்லாத பிரச்சனைகள் வரும். சிலருக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்படும், புத்திர பாக்கியம் தள்ளி போகும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவும் சற்று அதிகரிக்கும். நிறுத்திவைக்கப்பட்ட பணிகளை மீண்டும் தொடங்க முடியும்.

6-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை கடக ராசிக்கு 6-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)

six

சனி பகவான் 6-ம் வீட்டில் இருந்தால் மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகளை வெல்லும் துணிவு உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். நல்ல வாய்ப்புகள் கைகூடி வரும். திடீர் யோகம் வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.

7-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை மிதுன ராசிக்கு 7-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)

seven

சனி பகவான் 7-ம் வீட்டில் இருந்தால் அதையே நாம் கண்டகச் சனி என்கிறோம். இதனால் திருமணம் நடப்பதில் சில சிக்கல்கள் அல்லது தாமதம் இருக்கும், நெருங்கியவர்களோடு சில மன கசப்புகள் உண்டாகும். கூட்டுத்தொழில் செய்வோருக்கு இடையே சில பிரச்சனைகள் வரக்கூடும்.

8-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை ரிஷப ராசிக்கு 8-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)

eight

சனி பகவான் 8-ம் வீட்டில் இருந்தால் அதையே நாம் அஷ்டம சனி என்கிறோம். இதனால் பொருளாதார ரீதியாக சில இன்னல்கள் வரும். நம்பி ஏமாறும் நிலை உண்டாகும். குடும்பத்தில் தேவை இல்லாத பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புண்டு. திருமணத்திற்காக கடன் பெற வேண்டி இருக்கும். பூர்வீக சொத்துக்களை பெறுவதில் சிக்கல்கள் இருக்கும்.

9-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை மேஷ ராசிக்கு 9-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)

nine

சனி பகவான் 9-ம் வீட்டில் இருந்தால் தடை பட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். வராத கடன் கூட திரும்ப கிடைக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். கடன் தொல்லை தீரும். தந்தையின் உடல்நிலையில் சில பாதிப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் சில பிரச்னைகள் வரும்.

10-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை மீன ராசிக்கு 10-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)

astrology

சனி பகவான் 10-ம் வீட்டில் இருந்தால் மற்றவர்களை வழிநடத்தும் தலைமை பண்பு உண்டாகும். கணவன் மனைக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். ஊரில் மரியாதை கூடும். கடன் தொல்லை விலகும்.

11-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை கும்ப ராசிக்கு 11-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)

சனி பகவான் 11-ம் வீட்டில் இருந்தால் எதிர்பாராத பண வரவு இருக்கும். நோய்கள் நீங்கும். சொத்துக்கள் சேர்க்க வழி பிறக்கும். மனதில் தெளிவு பிறக்கும். பெரிய மனிதர்களின் நண்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். உயர் பதவி கிடைக்கும். சகோதரர்களுக்கு இடையே மட்டும் சில பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

இதையும் படிக்கலாமே:
சனிபகவானை தன் காலால் நசுக்கும் அனுமன் கோவில் பற்றி தெரியுமா ?

12-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை மகர ராசிக்கு 12-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)

சனி பகவான் 12-ம் வீட்டில் இருந்தால் தேவை இல்லாத விரய செலவுகள் ஏற்படும். சிலருக்கு கண்களில் சில குறைபாடுகள் ஏற்பட்டு விலகும். தேவை இல்லாத அலைச்சல் இருக்கும். ஆனாலும் அதனால் பல நேரங்களில் ஆதாயமும் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். இந்த காலகட்டத்தில் பணத்தை சுப நிகழ்வுகளுக்காக செலவிடுவதே புத்திசாலித்தனம்.

ஜோதிடம், ராசி பலன் மற்றும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை உடனுக்குடன் பெற தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.