சனிப்பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகத்தை பெறும் ராசிகள்

sani peyarchi
- Advertisement -

நீதியின் கடவுளாக விளங்கக் கூடிய சனி பகவான் ஒருவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களுக்கு வாரி வழங்கக்கூடியவர். இதில் சற்றும் பாரா மற்றும் பாராமல் வாரி வழங்குவதில் தராசை போன்றவர். அதுமட்டுமின்றி தரக் கூடிய பலன்களை இரட்டிப்பாக தரக்கூடியவர். அது நன்மையாக இருப்பினும் சரி தீமையாக இருக்கும் சரி. ஆகையால் தான் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

அத்தகைய சனி பகவான் தன்னுடைய சொந்த ராசியான கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம் செய்து வருகிறார். வக்கிர நிலையில் இருந்து சனி பகவான் கடந்த நவம்பர் மாதம் நான்காம் தேதி வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் 2024யில்ஷசில ராசிகளுக்கு ராஜ யோகம் காத்திருக்கிறது. யார் அந்த ராசிக்காரர்கள் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ரிஷப ராசி

இந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நல்ல உத்தியோக வாய்ப்பை கொடுக்கப் போகிறார். புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தையும் தரவிருக்கிறார். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை, திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் போன்ற அனைத்து நல்ல விஷயங்களும் நடைபெற கூடும். எதிர்பாராத நேரத்தில் திடீர் பண வரவு குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படும். புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை தருவதுடன் மகிழ்ச்சியான மனநிலை நிலவும்.

மிதுன ராசி

இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவிற்கான அத்தனை வாய்ப்புகளும் காத்திருக்கிறது என்றே சொல்லலாம். புதிதாக வீடு, சொத்து, வாகனம் வாங்க கூடிய வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். அத்துடன் வேலையில் பதவி உயர்வு , சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். உங்களின் திறமை அதிகரித்து பணியிடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -

கும்ப ராசி

சனி பகவானின் சொந்த வீடான கும்ப ராசிகாரர்களுக்கு தடைப்பட்டு இருந்த அனைத்து காரியங்களும் நிறைவேற ஆரம்பிக்கும். வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வருவதுடன் அதில் வெற்றி வாய்ப்புகளும் தேடி வரும். பணத்தை சம்பாதிப்பதிலும் சேர்ப்பதிலும் ஆர்வம் அதிகரிக்கும். அதற்கேற்ற வருமானமும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உண்டாகும். குழந்தை இல்லாத வர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிதாக சொத்துகளை சேர்க்க தொடங்குவீர்கள். வண்டி வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் பெருகும். கும்ப ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய ராஜயோகம் காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

இதையும் படிக்கலாமே: சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்.

ஜோதிட சமஸ்கிருதத்தில் ஒரு கிரகத்தின் மாற்றம் மற்ற 12 ராசிகளுக்குமே சாதகமான அல்லது பாதகமான பலன்களை தரும். இது ஜோதிடத்தில் உள்ள பொதுவான கருத்தாகும். அந்த கருத்தின் அடிப்படையில் தொகுக்க பட்டவையே இந்த பதிவு. இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமெனில் பயன்படுத்தி பலன் அடையலாம்.

- Advertisement -