சனி பகவானின் தோஷம் நீங்கிட என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 12 ராசிக்காரர்களுக்கான வழிபாடு.

sani
- Advertisement -

ஒருவருக்கு சனியால் தோஷம் இருந்தால், வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். இன்னல்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சனி பகவானை தினம் தோறும் வழிபடுவது தான் ஒரே வழி. சனி பகவானோடு சேர்த்து, எந்த தெய்வத்தை வழிபட்டால் இன்னும் பலனை அதிகமாகப் பெற முடியும். வழிபாட்டை முறையாகச் செய்தாலும் பாதிப்பின் தன்மை பாதியாக குறையுமே தவிர, முழுமையாக அதிலிருந்து நம்மால் தப்பித்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் கர்மவினையை பொறுத்துதான் ஒருவருக்கு சனி பகவானால் பாதிப்பு ஏற்படும். உங்களுக்கு வரப்போகும் கஷ்டங்களை பாதியாக குறைத்துக் கொள்ள வேண்டுமா? இந்த பரிகாரங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். எந்த ராசிக்காரர்கள், எந்த பரிகாரத்தை செய்தால் நல்லது நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்ற வேண்டும். சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ சனீஸ்வரனை வழிபடுங்கள். செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்வது நல்ல பலனைத் தரும்.

- Advertisement -

ரிஷபம்:
வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வெள்ளை மொச்சை சுண்டல் செய்து பிரசாதமாக கொடுக்கலாம். மல்லிகைப் பூ மலரை, பெருமாளுக்கு சூட்டி வழிபடுவது மிகவும் நல்லது.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் புதன்கிழமை தோறும் சிவன் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது நல்ல பலனைத்தரும். பெருமாலுக்கு தாமரை மலரை சூட்டி அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.

- Advertisement -

கடகம்:
கடக ராசிக்காரர்கள் திருவண்ணாமலையில் பவுர்ணமி வலம் வருவது மிகவும் நல்ல பலனைத் தரும். பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக எலுமிச்சை பழச்சாறை வழங்கலாம்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் உங்கள் வீட்டு அருகில் இருக்கும் பழமையான சிவன் கோவில்களுக்கு செல்வது நல்ல பலனை தரும். முடிந்தவர்கள் சூரியனார் கோவிலுக்கு சென்று வரலாம். தினந்தோறும் சூரிய வணக்கம் செய்வது நல்லது. சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு எருக்க மாலை சாத்தி வழிபடுவது நல்லது.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் புதன்கிழமை அன்று ஐயப்ப வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். ஐயப்பனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு சாத்துவது நல்ல பலனை தரும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வரலாம். கருடனுக்கு நெய் விளக்கு ஏற்ற வேண்டும். கருட தரிசனம் கிடைத்தால் இன்னும் சிறப்பு. உங்களது முன்னோர்கள் வழிபாட்டை தவறாமல் செய்யுங்கள். சிவனுக்கு சனிக்கிழமைகளில் வில்வ இலையை வாங்கி தருவது நல்லது.

விருச்சிகம்:
செவ்வாய்க்கிழமை அன்று அம்மன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்குவது நல்ல பலனை தரும். உங்கள் வீட்டில் இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். அம்மன் கோவில்களுக்கு செவ்வரளி பூ வாங்கி தருவது விசேஷமானது.

தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் சிவன் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். சிவன் கோவிலில் இருக்கும் குருபகவானை வியாழக்கிழமை தோறும் சென்று வழிபடுவது மிகவும் நல்லது. குருவிற்க்கு கொண்டைக்கடலை மாலை சாத்துவது வெற்றியைத் தேடித் தரும். சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தலாம்.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் சனிக்கிழமை அன்று பழமையான சிவன் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள நடராஜரை வழிபடுவது மிகவும் சிறப்பு. சிவன் கோவிலில் இருக்கும் இருக்கும் அம்பாளுக்கு பிச்சிப்பூ வாங்கித் தந்து, குங்கும அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று 9 முறை பிரதக்ஷணம் செய்ய வேண்டும். சனிக்கிழமைதோறும் விநாயகருக்கு மரிக்கொழுந்து வாங்கி தருவது நல்ல பலனைத் தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்கள் வியாழக்கிழமை தோறும் சிவன் கோவிலுக்கு சென்று, மஞ்சள் நிற சாமந்திப் பூ வாங்கித் தந்து, வழிபடுவது நல்ல பலனைத்தரும். சிவன் கோவிலில் இருக்கும் நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வந்தால் இன்னும் சிறப்பானது.

இதையும் படிக்கலாமே
காலத்தினால் தீர்க்க முடியாத பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் கால பைரவரை எந்த ராசியினர் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sani bhagavan pariharam in Tamil. Sani parigarangal Tamil. Sani pariharam Tamil. Shani dosha remedies. Sani thosam neenga.

- Advertisement -