உங்களுக்கு ஏழரை சனி நடக்கிறதா? கவலை வேண்டாம். இவற்றை தொடர்ந்து செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்!

sani
- Advertisement -

கல்விக்கு புதன், சுறுசுறுப்புக்கு சூரியன், மங்களம் உண்டாக செவ்வாய், இவ்வாறு நவகிரகங்களில் இருக்கும் ஒவ்வொறு கிரகத்திற்கென்றும் தனிப்பட்ட சிறப்புகள் உள்ளன. அதில் சனி பகவான் கர்ம காரகனாகவும், நீதி பகவானாகவும் இருக்கிறார். சனி பகவான் நாம் செய்யும் தவறுகளுக்கான தண்டனையை ஏழரை சனி காலத்தில் கொடுத்திடுவார் என பலர் சொல்வதும், அதுவே ஜாதகத்தின் நம்பிக்கையுமாக இருப்பதனால் சனி பகவான் மீது பலருக்கும் பயம் இருக்கத்தான் செய்கிறது. சனி பகவானின் பார்வை உங்கள் மீது இருக்கின்ற பொழுதிலும் சில பூஜைகளைத் தொடர்ந்து செய்துவர உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அவ்வாறான பூஜைகள் என்னவென்று அறிந்து கொள்ள தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்.

sani-temple-1

சனியின் கெடுபலனிலிருந்து தப்பிக்க நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருந்து சனிபகவானை வணங்கி வந்தாலே போதும். சனியைப்போல் கெடுப்பாரும் இல்லை. சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை என்பதற்கு ஏற்றார் போல் உங்களுக்கு வரங்களை அள்ளித் தருவார்.

- Advertisement -

ஏழரை சனி நாட்களில் கெடு பலன்கள் நீங்கி நற்பலன்கள் கிடைக்க சில பரிகாரங்கள்:
1. அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகருக்கு வழிபாடு செய்தல் நல்ல பலன்களைக் கொடுக்கும்.

Pillayar

2. சனி பகவானின் வாகனமான காக்கைக்கு தினமும் உணவளிக்க வேண்டும்.

- Advertisement -

3. சனி பகவானுக்கும், பைரவருக்கும் விரதமிருந்து நல்லெண்ணை தீபம் ஏற்ற வேண்டும்.

vetrilai-deepam1

4. வீட்டில் தினமும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

5. மகாவிஷ்ணுவின் அம்சமான வலம்புரி சங்கினை பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்.

6. வீட்டையும், உங்களையும் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

7. பொன்னாசை, மண்ணாசை எதுவும் இல்லாமல் நேர்மை குணம் உள்ளவராக இருக்க வேண்டும்.

gold-pot

8. கெட்ட வார்த்தைகளையும், அமங்கல சொற்களையும் எப்பொழுதும் உபயோகிக்க கூடாது.

9. துளசி மாலை அல்லது ருத்ராட்ச மாலை அணிந்து இருப்பவரை சனி பகவான் என்றும் பார்ப்பதில்லை.

10. அடிக்கடி பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளை பூஜித்து வருவதும் சிறந்த பலனை கொடுக்கும்.

11. கஷ்டப்படுபவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை, எளியவர்கள் போன்றோருக்கு உதவிகள் செய்திட வேண்டும்.

poramai

12. சனி உங்களை பிடிப்பதற்கு முக்கிய காரணங்களான பொறாமை, வஞ்சக எண்ணம், அடுத்தவர்கள் முன்னேற்றத்தைக் கெடுத்தல் போன்ற தீய எண்ணங்களை கைவிட வேண்டும்.

13. சுத்தமான நல்ல உடை உடுத்தி வசீகரமாக இருப்பது மிகவும் அவசியமாகும்.

14. சனி பகவானுக்கு உரிய கோவில்களான திருநள்ளாறு, திருகொள்ளிக்காடு, குச்சனூர் போன்ற தலங்களுக்குச் சென்று சனிபகவானை வழிபட்டு வர உங்களுடைய கெடுபலன் நீங்கி நல்ல நிலைமையை அடைய முடியும்.

kovil

மேற்கூறிய எளிய பரிகாரங்களை தொடர்ந்து பின்பற்றி சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு உரிய
“ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்”
இந்த மந்திரத்தை சொல்லி நல்லெண்ணெய் விளக்கேற்றி சனி பகவானை மனதார வேண்டிக் கொண்டால், சனி பகவானின் நற்பலன்களை பெற முடியும். உங்களுக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருக்கும் பொழுதும் கூட இவற்றை பின்பற்றி வர நல்ல வாழ்க்கை முறையே அமையும்.

- Advertisement -