சனிக்கிழமை இந்த 1 பொருளை கோவிலுக்கு தானமாகக் கொடுத்தால், கடன் குறையும். பாவங்கள் தீரும். கஷ்டங்கள் கடந்து போகும். வறுமையே வராது.

sanibagavan
- Advertisement -

சனிக்கிழமை சனிபகவானுக்கு மிக மிக உகந்த நாள். நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய ஏற்ற இறக்கங்களுக்கு நவகிரகங்களில் இந்த சனி பகவானுக்கு முக்கிய பங்கு உண்டு. சனிபகவானுக்கு உகந்த இந்த சனிக்கிழமையில், நாம் எந்த பொருளை எப்படி தானம் செய்தால் நமக்கு இருக்கக்கூடிய பணப்பிரச்சனை, குடும்ப பிரச்சனை, ஆரோக்கிய ரீதியான பிரச்சனை எல்லாம் தீரும் என்பதை பற்றிய ஒரு தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதேபோல சனிக்கிழமை அன்று நாம் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

சனிபகவானுக்கு உகந்த இந்த சனிக்கிழமையில் இரும்பு பொருட்களை தானமாக கொடுப்பது மிக மிக சிறப்பான விஷயமாக சொல்லப்பட்டுள்ளது. இரும்பு உலோகத்தால் மட்டும் செய்த பொருளை வாங்கி தானம் கொடுத்தால் சிறப்பு. முடியாதவர்கள் இரும்பு கலந்த உலோகத்தால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி தானம் கொடுக்கலாம். குறிப்பாக நவகிரக சன்னிதானம் இருக்கக்கூடிய கோவில்களுக்கு இரும்பு பொருட்களை சனிக்கிழமை அன்று தானமாக கொடுக்க வேண்டும்.

- Advertisement -

உதாரணத்திற்கு சில்வர் பாத்திரங்கள் ஏதாவது கோவிலில் பயன்படுத்த தேவை என்றால் அந்த பாத்திரங்களை வாங்கி சனிக்கிழமை அன்று நவகிரகம் உள்ள கோவிலில், சனி பகவான் சந்நிதி உள்ள கோவில்களுக்கு தானமாக கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் பூஜைக்கு பயன்படுத்தும் தூபம் போடக்கூடிய இரும்பு தூபக்கால் வாங்கி தானமாக கொடுக்கலாம். கோவில்களில் அன்னதான கூடம் இருக்கும். அங்குள்ள சமையலறைக்கு இரும்பு சம்பந்தப்பட்ட பாத்திரங்களை வாங்கி தானமாக கொடுப்பது சிறப்பு. கோவிலில் சமைப்பதற்கு இரும்பினால் செய்யப்பட்ட அடுப்பு தேவை என்றால் கூட வாங்கி தானம் கொடுக்கலாம். சிறிய சொம்பிலிருந்து பெரிய அடுப்பு வரை உங்கள் வசதிக்கு ஏற்ப எந்த பொருளை தானம் கொடுத்தாலும் அது நல்லது.

சனிக்கிழமை அன்று தானம் கொடுக்க வேண்டிய இரும்பு பொருட்களை, சனிக்கிழமை கடைக்கு சென்று வாங்காமல், வேறு ஏதாவது கிழமையில் அந்த இரும்பு பொருட்களை வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு உங்கள் வீட்டிலிருந்து கொண்டு போய் இந்த தானத்தை, கோவிலுக்கு செய்வது நல்லது. இரும்பு என்பது சனிபகவானுக்கு உகந்த ஒரு பொருள் என்பதால் இந்த தானம் நம்முடைய கஷ்டங்களை குறைக்க ஒரு பரிகாரமாக இருக்கும்.

- Advertisement -

நிறைய பேருக்கு தெரியும் சனிக்கிழமை எண்ணெய் வாங்கக் கூடாது என்று. எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமையில் வாங்கினால் செய்யும் தொழிலில் நஷ்டம், வருமானத்தில் தடை, ஏற்படும். அதன் பின்பு உங்களுடைய வீட்டில் கடன் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த தவறை செய்யாதிங்க. இதேபோல சனிக்கிழமை என்றால் காகத்திற்கு எள் சாதம் வைப்பது, கோவிலுக்கு சென்று எள் தீபம் ஏற்றுவது போன்ற பழக்கம் நம்மில் சில பேருக்கு இருக்கும்.

என்னதான் சனிக்கிழமையில் எள் சம்பந்தப்பட்ட பரிகாரத்தை நாம் செய்தாலும், சனிக்கிழமை அன்று கடைக்கு சென்று எள் வாங்கி இப்படிப்பட்ட பரிகாரத்தை செய்யக்கூடாது. முந்தைய நாளே எள் வாங்கி நம் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சில பேர் கோவிலுக்கு செல்லும்போது கோவிலுக்கு அருகிலேயே எள் முடிச்சு கட்டி வைத்த தீபம் வாங்கி கோவிலில் உள்ள நவக்கிரக சன்னிதியில், சனி பகவானுக்கு தீபம் ஏற்றுவார்கள். இப்படி எள் வாங்கினால் அது தவறு கிடையாது. அதன் மூலம் எந்த தோஷமும் ஏற்படாது.

கடையில் இருந்து காசு கொடுத்து எள் வாங்கி நம் வீட்டிற்கு எடுத்து வருவது சாஸ்திரப்படி தவறு. மேல் சொன்ன விஷயங்களை சாஸ்திர சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பின்பற்றி பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -