சனிக்கிழமைகளில் இப்படி விரதம் இருந்து, இந்த தெய்வங்களை வழிபட்டாலே போதும். சகல தோஷங்களும் நீங்கி, சவுகரியமான வாழ்க்கையை பெற்றுவிடலாம்.

hanuman1
- Advertisement -

பொதுவாகவே சனிக்கிழமைகளில் சில நல்ல காரியங்களை நடத்தக்கூடாது என்பது பலரின் கருத்தாக இருந்து வருகிறது. ஆனால் வாரம்தோறும் வரும் சனிக்கிழமை அன்று விரதமிருந்து வேண்டுதல் வைத்து, சில தெய்வங்களை வழிபாடு செய்து வந்தோமேயானால் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களேக்கு சீக்கிரமே விடிவுகாலம் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நாம் எல்லோரும் அறிந்தது, சனிக்கிழமை என்றால் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்தது என்பது தான். ஆனால் அப்படி அல்ல. சனிக்கிழமைகளில் விநாயகரையும் வழிபாடு செய்யலாம் அனுமனையும் வழிபாடு செய்யலாம். ஐயப்பனையும் வழிபாடு செய்யலாம்.

karpaga-vinayagar

விநாயகர் ஐயப்பன் ஹனுமன் இந்த தெய்வங்கள் அல்லாமல் உங்களுக்கு இஷ்ட தெய்வமாக வேறு ஏதாவது ஒரு தெய்வங்கள் இருந்தாலும் அந்த தெய்வங்களை நினைத்து சனிக்கிழமை அன்று விரதமிருந்து வழிபாடு செய்தால் அந்த வழிபாட்டின் மூலம் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். தீராத உடல் உபாதைகளால் அவதி பட்டு கொண்டிருப்பவர்கள், தீராத மன கஷ்டம் உடையவர்கள், தீரா பணக்கஷ்டம் உடையவர்கள், வீட்டில் சுப காரியம் நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருபவர்கள், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ஜாதகத்தில் தோஷத்தால் பிரச்சனை உள்ளவர்கள், இப்படியாக எந்த தடைகள் உங்கள் வாழ்க்கையில் இருந்தாலும் சரி அந்த தடைகள் தகர்க்கப்படும்.

- Advertisement -

விநாயகர் கோவில், பெருமாள் கோவில், ஹனுமன் கோவில், அம்மன் கோவில் உங்கள் வீட்டின் அருகில் எந்த கோவில் இருந்தாலும் சரி, அந்தக் கோவிலில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் தோறும் அதே கோவிலுக்கு சென்று உங்களது பிரார்த்தனை வைக்க வேண்டும். சனிக்கிழமை அதிகாலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, குறிப்பாக காலையில் எதுவும் சாப்பிடக்கூடாது.

hanuman-sivan

வெறும் வயிற்றோடு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று இறைவனை மனமுருகி வழிபாடு செய்யுங்கள். அந்த கோவிலில் கொடுக்கக்கூடிய பிரசாதத்தை வாங்கி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அதன் பின்பு அந்த கோவிலை ஐந்து முறை வலம் வர வேண்டும். கோவிலை வலம் வரும் போது உங்களுடைய வேண்டுதலை இறைவனிடம் சொல்லிக்கொண்டே பிரதக்ஷணம் செய்யுங்கள்.

- Advertisement -

குறிக்கோளாக இருந்தாலும் சரி, வேண்டுதலாக இருந்தாலும் சரி ஏதாவது ஒன்றை மனதில் நினைத்துக் கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த வழிபாடு முழுவதையும் சனிக்கிழமை காலை 8 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். கோவிலுக்கு சென்று அந்த கோவிலில் கொடுக்கும் தீர்த்தம் அல்லது பஞ்சாமிர்தம் ஆக இருந்தாலும் சரி, அந்தப் பிரசாதத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு(எந்த பிரசாதமும் கிடைக்காதவர்கள் ஒரு சொட்டு விபூதியை நாக்கில் தடவிக் கொள்ளுங்கள்), அன்றைய நாள் மதியம் 12 மணி வரை எந்த உணவையும் சாப்பிடாமல் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

மதியம் 12 மணிக்கு மேல் எப்போதும் போல உங்களது மதியம் உணவை சாப்பிட்டுக் கொள்ளலாம். சிலரால் வெறும் வயிற்றில் விரதம் இருக்க முடியாது. அப்படி இருப்பவர்கள் நீராகாரங்களை பருகிக்கொள்ளுங்கள். மோர் இளநீர் பால் போன்ற நீராகாரங்களை குடிக்கலாம். இந்த விரதத்தை மேற்கொண்டு, இப்படியாக உங்களுடைய இஷ்ட தெய்வத்தை நீங்கள் வழிபாடு செய்தால் நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கூடிய விரைவில் ஏற்படும் என்பது நம்பிக்கை. உங்களுடைய கஷ்டம் தீரும் வரை சனிக்கிழமை விரதத்தை விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். இத்தனை நாட்கள் தான், இத்தனை வாரங்கள் தான் என்ற கட்டுப்பாடு கிடையாது.

சனிக்கிழமை அன்று நீங்கள் எதைச் செய்தாலும் அதற்கு உண்டான பலன் இரட்டிப்பாக கிடைக்கும். எடுத்துக்காட்டிற்கு சனிக்கிழமையில் இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். கோவிலில் மரத்தடியில் உள்ள எறும்புகளுக்கு பச்சரிசி வெல்லம் கலந்த கலவையை தூவி விடலாம். இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த பணம் அல்லாத, வேறு ஏதாவது உதவியாக இருந்தாலும் அதை செய்யலாம். எல்லாவற்றிற்கும் இரட்டிப்பு பலனை அளிக்கக்கூடிய சக்தி இந்த சனிக்கிழமைக்கு உண்டு. சனிக்கிழமை வழிபாட்டை தவறாமல் செய்தால் வாழ்க்கையில் வளம் பெறலாம் என்று கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -