இன்று ஆடி, மகா சனிப்பிரதோஷம்! இந்தப் பிரதோஷதில் சிவனுக்கு, இந்தப் பொருளைக் கொண்டு அபிஷேகம் செய்தால் எப்படிப்பட்ட கடன் பிரச்சினையும் தீரும்.

sivan
- Advertisement -

பொதுவாகவே சனிப் பிரதோஷம் என்றால் அதற்கு மகத்துவம் அதிகம். அதிலும் ஆடி மாத சனிப் பிரதோஷத்தை யாரும் தவறவிடாதீர்கள். கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபட முடியவில்லை என்றாலும், வீட்டிலிருந்தே பிரதோஷ நேரமான 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள், சிவபெருமானுடைய வழிபாட்டை சுலபமான முறையில் எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பிரதோஷ காலத்தில் சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஆடி மகா பிரதோஷத்தன்று தீராத கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றால், சிறப்பு வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.

sivan-god2

நம்முடைய வீட்டு பூஜை அறையில், சிவலிங்கம் இருந்தால், மாதம்தோறும் வரும் இரண்டு பிரதோஷ தினத்திலும், அந்த லிங்கத்திற்கு கட்டாயம், பிரதோஷ நேரத்தில், பாலபிஷேகம் செய்ய வேண்டியது அவசியம். சில பேர் வீடுகளில் சாளக்கிராமம் வைத்து வழிபடும் பழக்கம் இருந்தால், கட்டாயம் அதற்கும் பாலபிஷேகம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இன்று மாலை பிரதோஷ நேரத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் சிவலிங்கமாக இருந்தாலும் சரி. சாளகிராமமாக இருந்தாலும் சரி அதற்கு எலுமிச்சை பழ சாரை கொண்டு அபிஷேகம் செய்தால், உங்களுக்கு நீண்டநாட்களாக இருக்கக்கூடிய கடன் பிரச்சனை தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. முதலில் எலுமிச்சை பழச்சாறை கொண்டு அபிஷேகம் செய்துவிட்டு, பின்பாக, பால் அபிஷேகம் செய்யுங்கள். அதன் பின்பாக நல்ல தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்து, சந்தனம் குங்குமம் வைத்து, சிவலிங்கத்தை அலங்கரித்து தீபம் ஏற்றி, வழிபாடு செய்ய வேண்டும். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும்போது கட்டாயம் நந்தீஸ்வரரை வைத்துதான் அபிஷேகத்தை நடத்தவேண்டும். குறிப்பாக நெய்யினால் செய்யப்பட்ட சர்க்கரை பொங்கலை நைவேத்தியமாக படைப்பது மிகவும் சிறப்பு.

sivan-parvathi

ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் இரண்டு வில்வ இலைகளைப் போட்டு, ‘ஓம் சிவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து விட்டு, அந்த நீரை பருகுவது மிகவும் நல்லது.

- Advertisement -

உங்கள் வீட்டில் சிவலிங்கம், சிவனின் திருவுருவப்படம் எதுவுமே இல்லை என்றாலும் பரவாயில்லை. கொஞ்சம் மஞ்சளை எடுத்து தண்ணீர் ஊற்றிப் பிசைந்து, அதில் சிவலிங்கத்தை பிடித்துக் கொள்ளுங்கள். அதேபோல் நந்தீஸ்வரரை மஞ்சளால் பிடித்துக்கொள்ளுங்கள்.

sivan

மஞ்சளால் பிடித்த சிவலிங்கத்தையும் நந்தீஸ்வரரையும், வில்வ இலையின் மேல் வைத்து, அதற்கு குங்குமப்பொட்டு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து, நைவேத்தியம் படைத்து, உங்கள் பூஜையை நிறைவாக முடித்துக் கொள்ளலாம். கோவிலுக்கு செல்ல முடியவில்லையே என்ற குறை தெரியாமல், வீட்டிலேயே எல்லோரும் சிவபெருமானை பிரதோஷ காலத்தில் வழிபட்டு அருள் ஆசி பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டு உண்டியலில் பணம் நிரம்பி வழிய வேண்டுமா? சேமிப்பை இரட்டிப்பாக்க இந்த 4 பொருள் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -