- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇன்று சனி மகா பிரதோஷம் கடன் தீர மந்திரம்

இன்று சனி மகா பிரதோஷம் கடன் தீர மந்திரம்

- Advertisement -

போராட்டமான இந்த வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு ஜெயித்து வருவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதிலும் கடன் வாங்கி சிக்கி இருப்பவர்கள், அதிலிருந்து வெளியில் வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள், இன்றைய தினம் சிவன் வழிபாடு செய்வது அவசியம்.

இன்று 4-10-2025, சனி மகா பிரதோஷமானது வந்திருக்கிறது. அதிலும் இன்று புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமையில் இந்த சனி மகா பிரதோஷம் வந்திருப்பது, இரட்டிப்பு சிறப்பு. இன்று விஷ்ணு பகவானின் ஆசியும் நமக்கு கிடைக்கும். சிவபெருமானின் ஆசியும் நமக்கு கிடைக்கும். இரு பெரும் கடவுள்களை மனதில் நினைத்து இந்த பதிவிற்குள் பயணம் செய்வோமா.

- Advertisement -

சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு ஆயிரக்கணக்கில் மந்திரங்கள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலும் அனைவருக்கும் தெரியாத, அதிசக்தி வாய்ந்த ஒரு சூட்சமமான கடன் தீர்க்கும் சிவ மந்திரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்களுக்கு எதிர்காலத்தில் கடன் பிரச்சனையானது தீர போகிறது என்ற யோகம் இருந்தால், மட்டுமே இந்த பதிவு உங்கள் கண்களில் பட்டிருக்கும்.

இந்த மந்திரத்தை இன்றைய தினம் மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை இருக்கக்கூடிய பிரதோஷ நேரத்தில் ஒரு முறை படித்து விடுங்கள். நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் சரி, சிவபெருமானை மன கண்களில் கொண்டு வந்து, கடன் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இந்த மந்திரத்தை படிக்கலாம்.

- Advertisement -

கோவிலுக்கு செல்ல முடியும் என்பவர்கள், கோவிலில் அமர்ந்து பிரதோஷ நேரத்தில் இந்த மந்திரத்தை படிக்கலாம். வீட்டில் இருப்பவர்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, சிவனை மனதில் நினைத்து பெருமாளை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை படிக்கலாம். கடனை தீர்க்க வந்திருக்கும் சிவ மந்திரம்.

கடன் தீர்க்கும் சிவ மந்திரம்

ஓம் காம் தத்புருஷ லிங்கேஸ்வராய விஸ்வேஸ்வராய
த்ரியம்பகாய ருத்ரமூர்த்தியே ருண விமோசனாய

- Advertisement -

மம ஜென்ம ருண ரோக விமோசனம்
குருகுரு ஓம் ஸ்ரீம் காம் சாம்
ஸ்ரீ பரமசிவாய ஸ்வாகா

இதையும் படிக்கலாமே: இன்று 4-10-2025 புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை பரிகாரம்

மந்திரத்தை உச்சரிக்கும் போது, கையில் ஒரே ஒரு வில்வ இலை, ஒரு மிளகு, வைத்து இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு, அந்த வில்வ இலையையும் மிலகையும், மந்திரம் சொல்லி முடித்தவுடன் மென்று சாப்பிட்டு தண்ணீர் குடிக்க, உங்கள் மொத்த தரித்திரமும் இன்று உங்கள் உடம்பை விட்டு விலகிவிடும். கடன் சுமை நீங்கும், நோய்நொடி பிரச்சனை விலகும் என்பதுதான் இந்த வழிபாட்டிற்கு பின்னால் இருக்கும் நம்பிக்கை. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இந்த ஆன்மீகம் வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்