இன்று இந்த சனி மூல மந்திரம் துதித்தால் அற்புதமான பலன்கள் உண்டு

sani

மனித வாழ்வு என்பதே நன்மை தீமை கலந்தது தான். வாழ்வில் செய்யப்படும் எத்தகைய ஒரு செயலுக்குமான பலன்களை ஒரு மனிதன் இம்மையிலோ அல்லது மறுமையிலோ அனுபவிப்பான் என நமது வேதங்கள் உறுதியாக கூறுகின்றன. இதில் தீமையான செயல்களுக்கு ஏற்ற பலன்களை ஒருவருக்கு தரும் இறைவனின் பிரதிநிதியாகவும், நீதி தேவனாகவும் சனீஸ்வர பகவான் இருக்கிறார். அத்தகைய சனி பகவானை இந்த சனி மூல மந்திரம் துதித்து வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

sani bagavaan temple

சனி மூல மந்திரம் :

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ரவா;த்தினேச்சநச
ராய க்லீம் ஜம் ஜெள ஸ்வாஹா

ஆயுள்ககாரகனான சனி பகவானுக்குரிய சக்தி வாய்ந்த மூல மந்திரம் இது. நவகிரக பெயர்ச்சிகளில் ஒரு மனிதனுக்கு மிகுந்த கஷ்டங்களை கொடுப்பதும், அதே நேரத்தில் மிகுதியான யோகங்களை பெறுவதும் சனி கிரக பெயர்ச்சியால் மட்டுமே உண்டாகிறது. சனி பெயர்ச்சியால் பாதகமான பலன்களை அனுபவிக்கும் ராசியினர் சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு நீல நிற சங்கு பூக்களை சமர்ப்பித்து, கருப்பு எள் கலந்த விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, இந்த மூல மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதித்து சனீஸ்வரரை வழிபடுவதால் சனி கிரக தோஷங்கள் நீங்கும், சனி கிரகத்தின் பாதகமான பலன்கள் ஏற்படுவது குறையும், விபத்து, அவப்பெயர், கடும் நோய்கள் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.

Sani Baghavan

சனி பரிகாரங்கள்:

- Advertisement -

நமது ஜாதகத்தில் ஏற்படுகின்ற ஏழரை சனி மங்குசனி, பொங்கு சனி, அஷ்டம சனி, அஷ்டார்த்தம சனி என அனைத்து வகையான சனி தோஷங்கள் நீங்கவும், சனி பகவானின் நல்லருளை பெறுவதற்கும் சிறந்த பரிகாரமாக இருப்பது திருநள்ளாறு ஸ்ரீ சனி பகவான் கோயில் வழிபாடே ஆகும். ஏதாவது ஒரு சனிக்கிழமையில் காலையில் திருநள்ளாறு தலத்திற்கு சென்று, அங்குள்ள திருநள்ளாறு கோயில் குளத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்து, நீரில் தலை முழுகி குளிக்க வேண்டும். குளித்து முடித்ததும் குளிக்கும் போது பயன்படுத்திய பழைய ஆடைகளை குளக்கரையின் மீது எங்கேயாவது விட்டு விட வேண்டும்.

Sani baghavan

பிறகு தூய்மையான புத்தாடைகளை அணிந்து கொண்டு, உணவு ஏதும் உண்ணாமல் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கு இருக்கும் சனீஸ்வர பகவான் சன்னதியில் சனீஸ்வரனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து கருப்பு நிறம் அல்லது கருநீல நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும். இந்த திருநள்ளாறு சனீஸ்வரர் வழிபாடு பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது மிகவும் நன்று.

sani bagavaan

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் நவக்கிரக சன்னதியில் இருக்கும் சனி பகவானுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக சனிஸ்வர பகவானுக்கு சங்கு பூக்கள் சமர்ப்பித்து, கருப்பு எள் சிறிதளவு நிவேதித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சனி மந்திரங்கள் துதித்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 முதல் 27 வாரங்கள் வரை செய்வது சனி கிரக தோஷங்களை நீக்கி நன்மையான பலன்களை உண்டாக்கும்.

மேற்கூறிய இவ்விரண்டு பரிகாரங்களையும் செய்ய இயலாதவர்கள் உங்கள் சக்திகேற்ப ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒரு முறை உடல் ஊனமுற்ற ஏழைகள், துப்புரவு தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு புத்தாடை தானம் செய்வது சிறப்பு. மேலும் தினந்தோறும் கருப்பு நிற நாய்களுக்கு பிஸ்கட் அல்லது இன்ன பிற உணவை உண்ண தருவது சனி பகவானின் அருளை உங்களுக்கு பூரணமாக கிடைக்கச் செய்ய சிறந்த பரிகாரங்களாக இருக்கிறது.

Sani Bagavan

இதையும் பார்க்கலாமே:
சந்திரன் மூல மந்திரம் பலன்கள்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we Sani Moola mantra in Tamil. This mantra is also called as Sani mantras in Tamil or Sani bhagavan mantra in Tamil or Moola mantras in Tamil or Sani manthiram in Tamil.