சனி பகவான் பரிகாரங்கள்

Sani Baghavan
- Advertisement -

பூமியில் வாழும் அத்தனை உயிர்களின் வாழ்விலும், தாழ்விலும் விண்ணில் இருக்கும் ஒன்பது கிரகங்களின் தாக்கம் தீர்க்கமாக இருக்கிறது என்பது நமது இந்திய ஜோதிட மற்றும் வானியல் சாஸ்திரங்களை இயற்றிய முன்னோர்களின் கருத்தாக உள்ளது. இந்த கிரகங்களில் “ஆயுள்காரகன்” எனப்படும் சனி கிரகம் ஒரு மனிதருக்கு கொடுப்பது போன்ற யோகங்களை வேறெந்த கிரகங்களும் கொடுப்பதில்லை. அதே சனி கெடுதல் செய்வது போல் வேறெந்த கிரகமும் செய்வதில்லை. சனி பகவானால் நமக்கு நன்மைகள் ஏற்பட சில பரிகாரங்களை செய்வது சிறந்தது. அவை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Sani Astrology

சனி பகவான் பரிகாரங்கள்

சனி பகவானின் வாகனமாக காகம் கருதப்படுகிறது. தினந்தோறும் காலை நீங்கள் உணவு உண்ணும் முன்பு, உங்கள் உணவிலிருந்து கால் பாகத்தை எடுத்து காகங்களுக்கு உணவாக வைத்து, அவை அதை உண்ட பின்பு நீங்கள் உணவருந்துவது சனி பகவானின் மிகுந்த கருணையை உங்களுக்கு பெற்றுத்தரும். இப்படி வாழ்நாள் முழுவதும் செய்து வருபவர்களுக்கு ஏழரை சனிக்காலங்களில் கெடுதலான பலன்கள் அதிகம் ஏற்படாது. மேலும் உங்கள் ஆயுளையும் அதிகரிக்கும். இது பலரது வாழ்வில் செய்து பலன் கண்ட அனுபவ பரிகாரமாகும்.

- Advertisement -

சனி பகவான் அவரது காலில் குறைபாடு உள்ளவர் என்பதால் அவருக்கு “முடவன்” என்றொரு பெயரும் உண்டு. மாற்றுத்திறனாளிகள் அனைவருமே சனி பகவானின் அம்சம் நிறைந்தவர்கள் என ஜோதிட சாத்திரங்கள் கூறுகின்றன. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் எவ்வகையில் உதவ முடிந்தாலும், அவர்களுக்கு நீங்கள் உதவிகள் செய்வதால் சனிபகவான் உங்களின் இச்செயலால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். உங்களுக்கு அவருடைய திசை காலத்தில் கெடுபலன்களை குறைத்து, அதிக நன்மைகளை அளிப்பார்.

sani bagavaan

சனிக்கிழமைகளில் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று, நவகிரகங்களில் இருக்கும் சனிபகவானின் விக்ரகத்திற்கு கருப்பு எள் கலந்த விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, சங்கு பூ அல்லது ஊதா நிறப்பூக்களை வைத்து சனிபகவானுக்குரிய மந்திரத்தை கூறி வழிபட வேண்டும். இதன் மூலம் சனிதோஷங்கள் மற்றும் சனி ஜாதகத்தில் கெடுதலான இடங்களில் இருக்கும் தோஷம் குறையும்.

- Advertisement -

sani bagavaan temple

உங்களிடம் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளிகள் நன்றாக நடத்தப்பட்டாலே சனி பகவானின் அருளை பெற்று தரும் செயலாகும். பண்டிகைகளின் போது அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் புது துணிமணிகள், பழம், இனிப்புகளை வழங்க வேண்டும். இதை செய்ய இயலாதவர்கள் அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் அன்றைய தினத்தில் விருந்து உண்ண செய்து அவர்கள் மனநிறைவு அடைவது சனீஸ்வரனே மனநிறைவு கொள்வதற்கு ஒப்பானதாகும்.

இதையும் படிக்கலாமே:
மருந்தீஸ்வரர் கோவில் விபூதியை உண்டால் எத்தகைய நோயும் தீரும் தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sani pariharam in Tamil or Sani bhagavan pariharam in Tamil or Shani dosha pariharam in Tamil. By doing this pariharam one can get away from Sani baghavan troubles.

- Advertisement -