சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – மிதுனம்

Sani-peyarchi-palangal-mithunam

மிதுனம்
Mithunam Rasi
உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் இருந்த சனிபகவான் இதுவரை கடந்த இரண்டு வருடங்களாக பல கெட்ட பெயர்களை உங்களுக்கு வாங்கி கொடுத்து இருப்பார். உங்களது வாழ்க்கை போராட்டத்திலேயே சென்றிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சண்டை போட்டுக்கொண்டு இருந்திருப்பீர்கள். உங்களை சுற்றி பிரச்சனைகள் மட்டுமே இருந்தது. ஆனால் அந்த பிரச்சனைகள் சற்று மறைந்து உங்களுக்கு உண்டான கெட்ட பெயரானது நீங்கும். ஆனால் 8ல் வரும் சனி பகவான் கெட்ட பெயரை நீக்கினாலும், உங்களது தொழில், வியாபாரம், குடும்பம் இவை எல்லாவற்றிலும் சில பிரச்சனைகளை தரத்தான் போகின்றார். 8ஆம் இடத்தில் இருக்கும் சனிபகவான் 2ம் இடத்தை பார்க்கப் போவதால் தேவையில்லாத வாக்குவாதத்தில் மூலம் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். இதனால் அனாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. உங்கள் வாயிலிருந்து வரும் ஒரு வார்த்தையாக இருந்தாலும், ஆயிரம் முறை யோசித்து பேசுங்கள். வாக்குவாதத்தை தவிர்ப்பதன் மூலம், உங்களுக்கு வரும் பிரச்சினைகள், குறைவதற்கு வாய்ப்பு உண்டு. இல்லையென்றால் அதிக சங்கடங்கள் வந்துவிடும். உங்கள் குழந்தைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய நேரமிது. அவர்கள் கெட்ட பழக்க வழக்கத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என்பதை உணர்த்தும்.

வேலை தேடுபவர்களுக்கு
உங்களுக்கு வேலை கிடைக்கவே பல போராட்டங்கள் இருக்கும். போராட்டத்தை கடந்து வேலை கிடைத்தாலும் அதில் பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கத்தான் வேண்டும். உங்களுக்கு நல்லது செய்பவர்கள் போல, உங்களை நெருங்கி வருபவர்கள் கூட இறுதியில் உங்கள் காலை வாரிவிட்டு சென்றுவிடுவார்கள். நல்லவர்கள் என்று யாரையும் நம்பி விடாதீர்கள். வேலையில் நல்ல பெயர் எடுக்க அதிகமாக உழைப்பீர்கள். ஆனால் அந்த நல்ல பெயரையும் வேறு ஒருவர் தட்டிச் சென்று விடுவார். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்குமா என்று கேட்டால் அதுவும் இல்லை. இந்த மூன்று வருடங்களுக்கு எல்லா கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு பொறுமையோடு இருக்கவேண்டிய காலம் தான் இது.

வேலைக்கு செல்பவர்களுக்கு
வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் சிலர் உங்களது வேலையை இழப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது. யாரிடமும் எந்த அனாவசிய பேச்சையும் பேசாமல் ‘நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு’ என்று இருந்தாலும் உங்களை தேடி பிரச்சனை கட்டாயமாக வரும். ஆனால் அவசரப்பட்டு எந்த வார்த்தையையும் விட்டுவிடாதீர்கள். நாவடக்கம் அவசியம் தேவை. உங்கள் நிதானத்தை இழந்து விட்டால் பல நல்ல நண்பர்கள், உங்களது வேலை, உங்களது நிம்மதி எல்லாவற்றையும் இழக்க கூடிய சூழ்நிலையும் ஏற்பட்டுவிடும்.

Sani Bagavan

மாணவர்களுக்கு
5ஆம் இடத்தை சனிபகவான் பார்த்துக் கொண்டிருக்கிறார். படிப்பில் மந்தமான சூழ்நிலை தான் இருக்கும். உங்களின் விடாமுயற்சியால், உங்களின் கவனத்தை சிதற விடாமல் படிப்பில் ஆர்வம் காட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும். நன்றாக படிக்க கூடிய மாணவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் பின் தங்கக் கூடிய சூழ்நிலை உருவாகக்கூடிய நேரம்தான் இது.

திருமணம்
திருமணம் நிச்சயக்கப்பட்ட சற்று தாமதம் ஏற்படும். அவசரமாக எந்த முடிவையும் எடுக்காமல், நிதானமாக யோசித்து செயல்படுவதால் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். பல வாக்கு வாதத்திற்கு பின்பு, பல போராட்டங்களை கடந்த பின்பு ஒரு சுப நிகழ்ச்சியானது உங்களுக்கு நடைபெறும். கணவன்-மனைவிக்கிடையே அனாவசிய பேச்சு தவிர்ப்பது மிக மிக அவசியம்.

- Advertisement -

Sani-bagavan

சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு
உங்களின் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படும். உங்களது உற்பத்தியில் பின்னடைவு, வியாபாரத்தில் பின்னடைவு, உங்களது தொழிலாளர்களால் புதுப்புது பிரச்சினைகள், இப்படி பல வகைப்பட்ட பிரச்சினைகள் உங்களை தொடர்ந்து வருவதால் உங்களின் வாடிக்கையாளர்களை நீங்கள் இழக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். புதியதாக எந்த தொழிலையும் மூன்று வருடத்திற்கு தொடங்க வேண்டாம். வாடிக்கையாளர்கள் உங்களை திட்டினால் கூட கொஞ்சம் பொருத்து கொள்ளுங்கள். அவசரப்பட்டு வார்த்தையை விடாதீர்கள் அஷ்டமசனி பிரச்சினையை பெரிதாகிவிடும்.

Midhunam

பரிகாரம்
வயது முதியவர்களுக்கு உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்யலாம். வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

இதையும் படிக்கலாமே
சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – ரிஷபம்

English Overview:
Here we have Sani peyarchi 2020. Sani peyarchi palan Tamil. Sani peyarchi palangal. Sani peyarchi parigaaram.