- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதுன்பம் தீர பிரதோஷ நாளில் செய்ய வேண்டியது

துன்பம் தீர பிரதோஷ நாளில் செய்ய வேண்டியது

- Advertisement -

சிவ வழிபாடு என்றாலே அதில் முக்கியமானது இந்த பிரதோஷ தினம் தான் சிவனுக்கு உகந்த முக்கியமான தினங்களில் பிரதோஷமும் ஒன்று. இந்த பிரதோஷமானது மாதத்தில் இரண்டு முறை வரக்கூடியது. ஒன்று தேய்பிறை பிரதோஷம் மற்றொன்று வளர்பிறை பிரதோஷம். ஒரு பிரதோஷத்தில் சிவன் தரிசித்து வழிபட்டால் அவர்களின் ஒரு வருட கால கர்மா குறையும் என்பது தான். இந்த பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சாராம்சம். அதிலும் ஒரு சனிப்பிரதோஷத்தில் சிவனின் வழிபட்டால் போதும் ஐந்து வருடம் வழிபட்ட பலனை பெறலாம். இத்தகைய அற்புதமான பலனை தரக்கூடிய இன்றைய பிரதோஷ நாளில் சிவன் அருளை செய்ய நாம் செய்ய வேண்டியவற்றை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

சிவன் அருள் பெற பிரதோஷ நாளில் செய்ய வேண்டியது

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வலியும் வேதனையும் மிகுந்ததாகவே உள்ளது. இதற்காகவே நம் இறைவனை தஞ்சம் அடைந்து நம்முடைய குறைகளை கொட்டி ஆறுதல் அடைகிறோம். அப்படி நம்முடைய குறைகளை கேட்டு உடனே நிவர்த்தி செய்யக் கூடிய அற்புதமான தெய்வம் ஆக வழங்க கூடியவர் தான் சிவபெருமான்.

- Advertisement -

அவரை பிரதோஷ நாளில் நாம் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதையும் நம்முடைய துன்பங்கள் நீங்கி இன்பங்களுடன் வாழ என்ன செய்ய வேண்டும் என்பதையும் இப்போது பார்க்கலாம் இன்றைய தினம் விரதம் இருந்து சிவனை வழிபாடு செய்பவர்கள் எப்போதும் போல தங்களுடைய விரதத்தை இருந்து வழிபாடு செய்யுங்கள். இந்த வழிபாட்டை மாலை பிரதோஷ நேரத்தில் தான் செய்ய வேண்டும். பிரதோஷ நேரம் என்பது மாலை நான்கு முப்பதிலிருந்து ஆறு மணி வரையிலான காலம்.

இந்த நேரத்தில் வீட்டில் பூஜை அறையில் சிவன் படம் இருந்தால் எடுத்து சுத்தமாக துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து மலர் சூட்டில் அலங்காரம் செய்து விடுங்கள். படம் இல்லாதவர்கள் பரவாயில்லை ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்து விட்டு தீபத்தின் இந்த பரிகாரத்தை செய்தாலே போதும். எப்பொழுது சுத்தமான வெள்ளை நிறத்தில் ஆன ஒரு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளை நிறம் சிவபெருமானுக்கும் சந்திரனுக்கும் உரியதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

அடுத்ததாக ஒரு வெற்றிலை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் சிவனுக்கு உகந்த வில்வ இலையும் வெள்ளை நிறத்திலான மலர் ஏதேனும் ஒன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மூன்றையும் ஒன்றாக வைத்து வெள்ளை நிற துணியில் முடிச்சாக கட்டி விடுங்கள். இந்த முடிச்சை கட்டும் போது உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று சிவபெருமானை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த முடிச்சை சிவன் பெருமான் படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த முடிச்சு இரவு முழுவதும் சிவபெருமான் படத்தில் அருகிலே இருக்கட்டும் நாளை காலை ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த மூட்டையை நிலை வாசலில் கட்டி விடுங்கள். நிலை வாசலுக்கு வெளியில் இந்த மூட்டு தெரியும்படி இருக்க வேண்டும். அதாவது நீங்கள் வீட்டிற்குள் நுழையும் போது இந்த மூட்டை பார்த்துவிட்டு தான் உள்ளே வர வேண்டும் அது போல கட்டி விடுங்கள். இந்த ஒரு முட்டை போதும். உங்கள் வீட்டிற்குள் எந்த தீயவற்றையும் வரவிடாமல் நல்லவற்றை மட்டும் கொண்டு வந்து உங்களிடம் சேர்க்கும்.

- Advertisement -

பிரதோஷ நேரத்தில் இந்த வழிபாடு செய்ய முடியவில்லை என்றால் இரவு 8 லிருந்து 9 மணி வரையிலான நேரத்தில் இதை செய்யலாம். ஒரு வேலை நாளை காலை எங்களால் கட்ட முடியாது என்று நினைப்பவர்கள் வழிபாடு செய்து சிறிது நேரத்திற்குள்ளாகவே கூட இதை நிலை வாசலில் கட்டி விடலாம். இதில் முக்கியமான ஒன்று இந்த மூட்டையை கட்டும் போதும், வழிபாடு செய்யும் பொழுதும் நிறை வாசலில் கட்டும் போதும் சிவபெருமானின் நாமத்தை நீங்கள் ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:செல்வ வளம் அதிகரிக்க பரிகாரம்

ஓம் நமசிவாய என்ற ஒரு வார்த்தைக்கே நம்முடைய சகல துன்பங்களையும் தீர்க்கக் கூடிய அற்புதமான தெய்வம் தான் சிவபெருமான். அத்தகைய சிவபெருமானே அவருக்கே உரிய அதி அற்புத சக்தி வாய்ந்த இந்த நாளில் வழிபடுவது நம்முடைய ஜென்ம புண்ணியம் என்றே சொல்லலாம். அப்பேர்ப்பட்ட இந்த நாட்களை தவற விடாமல் சிவனை வழிபட்டு இந்த எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையின் நிலை மாறும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம் என்று தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்