புத்தாண்டில் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிக்காரர்கள்

sani sukura
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் நகர்வும் 12 ராசிகள் இருக்கும் மாற்றங்களை ஏற்படுத்தும். அது சில ராசிகளுக்கு நற்பயினை தருவதாக அமையும். சில ராசிகளுக்கு கெடு பலன்களை தருவதாக அமையும். இந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சனிச் சுக்கிர பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு ஏற்படக் கூடிய நன்மைகளைப் பற்றி ஜோதிடம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

கிரகங்களில் மெதுவாக நகரக் கூடியவர் சனி. இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பயணிக்க 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவர் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார். அதே போல் ராசிகளில் சுக்கிரனை மகாலட்சுமி தாயாரின் சின்னமாக கருதப்படுகிறது.

- Advertisement -

இந்த இரண்டு கிரகங்களும் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக இணைய உள்ளது. இந்த இணைவின் காரணமாக மூன்று ராசிகள் மட்டும் பல அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெற உள்ளார்கள். அவர்கள் எந்த ராசிக்காரர்கள் என்பது இப்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க.

மேஷம்

சனி சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த இணைவால் இவர்களின் வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.

- Advertisement -

ரிஷபம்

சனி சுக்கிர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் பலவிதமான நன்மைகளை பெற உள்ளார்கள். இவர்களின் தொழில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இரட்டிப்பு லாபத்தை பெறுவார்கள். தொழிலில் எதிர்பார்த்த வெற்றிகளும் வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். இந்த காலக்கட்டத்தில் இவர்கள் துவங்கும் செயல் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

மகரம்

சனி சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் நீங்கள் தொடங்கும் பணிகள் அனைத்துமே உங்களுக்கு சுமுகமாக முடியும் பணத்திற்கு பஞ்சம் இருக்காது. சிறிய அளவில் நீங்கள் எதிர்பார்த்து செய்யும் எதுவும் பெரிய அளவில் பயன் தருவதாக இருக்கும். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கும். பண வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் நிச்சயம் உண்டு.

இதையும் படிக்கலாமே: புதன் பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின்படி தொகுக்கப்பட்டவை தான் இந்த தகவல்கள். இதில் அவரவரின் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -