சனி மற்றும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை பெறப் போகும் ராசிகள்.

astrology in Tamil
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களின் இடப்பெயர்ச்சியும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் சனி பகவான் ஆனவர் கர்மநாயகனாக விளங்குகிறார். ஒருவருடைய செயலுக்கு ஏற்ப நன்மை தீமைகளை பகிர்ந்து அழிப்பதில் முதன்மையானவர். இவர் தன்னுடைய இடத்தை மாற்றிக் கொள்ள 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

அதே போல் நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் தான் இந்த சுக்கிர பகவான். இவருடைய இடமாற்றமும் ஜோதிடத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர் செல்வம், சொகுசு, காதல் உட்பட்ட ஆடம்பர வாழ்க்கைகளுக்கு காரணியாக விளங்குகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தன்னுடைய இடத்தை மாற்றிக் கொள்வார்.

- Advertisement -

இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்று விட்டால் அந்த ராசிக்காரர்களை அடித்துக் கொள்ள யாரும் இல்லை. இப்படி நன்மை தீமை இரண்டும் செய்யக் கூடிய இந்த கிரகங்கள் ஒன்றிணைவதால் ஏற்படக்கூடிய மாற்றங்களினால் சில ராசிக்காரர்கள் பெரும் நன்மையை பெறப் போகிறார்கள் அது பற்றி ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்வோம்.

சனி சுக்கிரன் சேர்ந்து அதிர்ஷ்டத்தை தரப்போகும் ராசிகள்

சுக்கிர பகவான் வரும் மார்ச் 7ஆம் தேதி அன்று சனியின் சொந்த ராசியான கும்ப ராசிக்குள் நுழைகிறார். மார்ச் 30 வரை தொடர்ந்து கும்ப ராசியில் பயணிக்க உள்ளார். கும்ப ராசியில் சனியும் இதற்கு முன்பு பயணம் செய்து கொண்டிருக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் 12 ராசிகளுக்கும் பலவிதமான மாற்றங்களை கட்டாயமாக ஏற்படுத்தும்.

- Advertisement -

அந்த வகையில் இந்த இரண்டு ராசிகளின் இணைவானது பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இதில் சில ராசிகள் மட்டும் அதிர்ஷ்டத்தை பெறுகிறார்கள். அவர்களை பற்றி இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

ரிஷபம்

சுக்கிர பகவானின் சொந்த ராசிக்காரர்களான ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி சுக்கிரன் இந்த சேர்க்கையால் பெரும் பயனை அடையப் போகிறார்கள். வேலை தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். கடின உழைப்பு நல்ல பலனை பெற்றுத் தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும் வருமானத்திற்கு பஞ்சம் இருக்காது.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிகாரர்களுக்கும் சுக்கிர பகவான் சொந்த ராசிக்காரர்கள் தான். ஆகையால் இவர்களின் சேர்க்கை இந்த ராசிக்காரர்களுக்கு பெரும் லாபத்தை கொடுக்கப் போகிறது. பெற்றோர்களால் நல்ல செய்திகள் தேடி வரும். ஆதாயங்கள் கிடைக்கும். சொத்துக்களால் லாபம் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் பெரும்.

கடக ராசி

சுக்கிரன் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறார். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தடைப்பட்ட காரியங்கள் நடக்கும்.

கும்ப ராசி

சனியின் சொந்த வீடான கும்ப ராசியில் சுக்கிரனின் சேர்க்கை நல்ல பலனையை கொடுக்கப் போகிறது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு இது நல்ல நேரம். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் அதிகரிக்கும் முதலீடுகளில் லாபத்தை சம்பாதிக்கும் காலம் இது. பொருளாதாரம் பல மடங்கு உயரும்.

இதையும் படிக்கலாமே: சதுர் கிரக யோகம்

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான தகவல்களின்படி கணிக்கப்பட்டதே இந்த பதிவு. இதில் அவரவரின் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படும் என்ற இந்த தகவலுடன் பதிவினை முடிவு செய்து கொள்வோம்.

- Advertisement -