சதுர் கிரக யோகம்

sukura cash
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளி மாற்றமும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகைகள் சில கிரகங்கள் குறுகிய காலத்திலும் சில கிரகங்கள் நீண்ட கால இடைவெளியிலும் தங்களுடைய இடங்களை மாற்றி அமைக்கும் இதன் மூலம் பன்னிரண்டு ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கும்.

அதே போல் ஒரு சில கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றாக இணையும் போது சில ராஜ யோகங்கள் உருவாகும் அப்படியான ஒரு யோகம் தான் இந்த சதுர் கிரக யோகம். இந்த யோகம் எந்த ராசியில் உருவாகியுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தை பெறப் போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை எல்லாம் ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சதுர் கிரக யோகம்

இந்த யோகமானது தற்போது மகர ராசியில் உருவாகியுள்ளது. மகர ராசியில் பிப்ரவரி 12 சுக்கிர பகவான் நுழைந்தார். இதற்கு முன் அந்த ராசியில் செவ்வாய் மற்றும் புதன் கிரகங்கள் பயணித்து வருகிறார்கள். இதனால் மகர ராசியில் இந்த யோகம் உருவாகியுள்ளது. இது 12 ராசிகளுக்கும் மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகிறார்கள்.

சதுர் கிரக யோகத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்

மகர ராசி

உங்கள் ராசியில் சதுர கிரக யோகம் உருவாகி உள்ளதால் இது உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கப் போகிறது. உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உருவாகும். புதிய முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். நிதி நிலைமை சீராகும் தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள்.

- Advertisement -

துலாம் ராசி

இந்த ராசிக்காரர்களுக்கும் சதுர் கிரக யோகத்தால் பலவிதமான நன்மைகளை பெற போகிறார்கள். இந்த காலக்கட்டத்தில் மன உறுதி அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாக முடியும். சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வேலை வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும்.

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கும் இந்த யோகம் பலவிதமான அதிர்ஷ்டங்களை தரப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் கிடைத்து பணவரவு அதிகரிக்கும். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: அகண்ட சாம்ராஜ்ய யோகம் பெரும் லக்கினங்கள்

இந்த சதுர் கிரக யோகத்தால் அதிர்ஷ்டத்தை பெறப் போகிற ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள் இதனால் மற்ற ராசிக்காரர்களுக்கு யோகம் இல்லை எனில் அவரவர் உழைப்பிற்கு ஏற்ற பலன் நிச்சயம் ஏற்படும். இந்த பதிவில் உள்ள கருத்துக்களும் அவரவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டது தான் என்ற கருத்துடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -